வழிகாட்டுதலுடன் தியானம் (Guided meditation in tamil)

Guided meditation

தயக்கமும் எதிர்பார்ப்புமற்ற அமைதியான மனநிலையே தியானம் - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

தியானத்தினைப்பற்றி மக்களிடையே பல்வேறு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் தியானம் என்பது ஏதோ ஒன்றில் கவனத்தைக் குவிப்பது என்றே எண்ணுகின்றனர். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், “ தியானம் என்பது கவனக் குவிப்புக்கு மாற்றானது .தியானம் இந்த நொடியினை ஏற்றுக் கொள்ளுதல்,- ஒவ்வொரு நொடியும் பூரணமாக வாழுதல்” என்கிறார். ஆயினும் தியானத்தின் பயன் மேம்பட்ட கவனம் ஆகும். வழிகாட்டுதலுடன் கூடிய தியானத்தின் மூலம் ஒருவர் ஆழ்ந்து தன்னுள்ளேயே சென்று, முழு விழிப்புணர்வுடன் ஒய்வு பெறலாம். தியானம் முற்றிலும் முயற்சியற்றதாகி, குருவின் வழிகாட்டுதலிலேயே நடைபெறுகின்றது.

பெரும்பாலும் நாம் நம்முடைய உடலுடனேயே நம்மை அடையாள படுத்திக் கொள்கின்றோம். வழிகாட்டுதலுடன் கூடிய தியானம் நம்மை உடல் நிலையிலிருந்து ஆத்மா நிலைக்கு எடுத்துச் சென்று . நமது ஆன்மீகப் பயணத்தை அழகாகவும் விரைவாகவும் ஆக்குகின்றது. இடைவிடாது செய்யப் படும் வழிகாட்டுதலுடன் கூடிய தியானப் பயிற்சி, பயில்பவரின் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்ல அவரைச் சுற்றியுள்ள முழுச் சூழலையுமே மாற்றியமைக்கின்றது.

வாழும் கலையின் தோற்றுனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், பல்வேறு வகையான வழிகாட்டுதல் இணைந்த தியானங்களையும் தியானப் பயிற்சிகளையும் இவ்வுலகிர்க்குப் பரிசாக அளித்துள்ளார். வாழும் கலையின் ஒவ்வொரு பயிற்சியும் - ஆனந்த அனுபவம் பயிற்சி, இரண்டாம் நிலைப் பயிற்சி, சஹஜ் சமாதி தியானம், ஸ்ரீ ஸ்ரீ யோகா மற்றும் திவ்ய சமாஜ் கா நிர்மாண் பயிற்சி - ஆகிய அனைத்தும் வழிகாட்டுதல் இணைந்த தியானங்களை அளிக்கின்றன. பயில்பவர்களுக்கு எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் என்பதைக் கற்பிக்கின்றன.

சில வழிகாட்டுதல் இணைந்த தியானங்கள் கீழே தரப் பட்டுள்ளன:

  • சூரிய தியானம்
  • முழு நிலவுத் தியானம்
  • பஞ்சகோஷா தியானம்
  • ஆரா தியானம்
  • ஹரி ஓம் தியானம்
  • புன்னகையில் மலருங்கள் தியானம்
  • ஓம் தியானம்
  • மன நிறைவு தியானம்
  • ராம் தியானம்
  • ஹர தியானம்

இவற்றில் சிலவற்றை இலவசமாக இப்போது ஆன் லைன் வழிகாட்டுதல்இணைந்த தியானமாகச் செய்யுங்கள்.

மேற்கண்ட அனைத்துத் தியான சீ டீ க்களும் வாழும் கலையின் அங்காடியில் உள்ளன.

""ஆழ்ந்த தியான நிலையில் நீங்களே காலம், அனைத்தும் உங்களுள்ளேயே நிகழ்கின்றன. வானத்தில் மேகங்கள் வந்து போவதைப் போன்று நிகழ்வுகள், உங்களில் ஏற்படுகின்றன. நீங்கள் காலத்திற்கு முன்னே சென்று விட்டால் அப்போது அலுப்பும் சலிப்புமாக உணருகின்றீர்கள். காலம் உங்களை முந்தி விட்டால், ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுகின்றன. உங்களால் நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாது. காலத்துடன் இணைந்திருந்தால், நீங்கள் ஞானத்துடனும் அமைதியுடனும் இருக்கின்றீர்கள்" என்கிறார் " - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்.