கோபம் உங்களைக் கட்டுப் படுத்துவதற்குள் நீங்கள் கோபத்தைக் கட்டுபடுத்துங்கள்(How to control anger in tamil)

கோபத்தை குறைக்கக் குறிப்புகள் என்னும் கட்டுரையின் தொடர்ச்சி...

கோபத்தைக் குறைக்க, கீழே இன்னும் சில வழிகள் தரப்பட்டுள்ளன.

மனதிலிருந்து எண்ணப் பதிவுகளை நீக்கி சுத்தம் செய்யுங்கள்.

அழுத்தத்தை மூச்சு விட்டு அகற்றுங்கள்

சுதர்சனக் க்ரியா ஒரு சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சி. உடலில் சேர்ந்திருக்கும் அழுத்தத்தை வெளியேற்றவும் மனதில் எண்ணப் பதிவுகளை அகற்றவும் உதவுகின்றது. நமது அமைப்பினையே தூய்மைப் படுத்திநல்லிணக்கத்துடன் வைக்கின்றது.

“முன்பெல்லாம், எனக்குக் கோபம் உச்ச நிலையில் இருக்கும். என் நண்பர்கள் என்னுடன் நேரம் செலவழிப்பதை தவிர்ப்பதுண்டு. சுதர்சனக் க்ரியா ஒழுங்காகச் செய்து, என் கோபம் பெருமளவில் குறைந்து விட்டது. இப்போது என் நண்பர்கள் என்னிடம் மிக நன்றாகப் பழகுகின்றார்கள்." என்கிறார் ஆதித்யா சிங் தனேஜா

அசைக்க முடியாத சாந்தம்

மந்திரத்துடன் இணைந்த சஹஜ் சமாதி தியானம் தியானம் செய்பவரை ஆழ்ந்த அமைதிக்குக் கொண்டு செல்லும்.மந்திரம் மிகுந்த சக்தி வாய்ந்தது.அது, நமது விழிப்புணர்வின் அடுக்கு களை அதில் சேர்ந்திருக்கும் எண்ணப் பதிவுகளிலிருந்து விடுவித்து விடுகின்றது. ஒழுங்கான சஹஜ் சமாதி <strong>தியானம்</strong> அளவில்லா கருத்துத் தெளிவையும் அசைக்க முடியாத சாந்தத்தையும் அளிக்கின்றது.

உங்கள் வாழ்வில் ஞானத்தினை ஒருங்கிணைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் கோபத்திற்கு ஆணியடியுங்கள்

கோபம் வரும் ஒவ்வொரு முறையிலும் வேலிக்கு ஆணியடித்த சிறுவனின் கதையைக் கேட்டிருப்பீர்கள். இப்போது அவ்வாறு செய்ய வேண்டாம், கோபம் ஏற்படும் கணத்திலேயே உங்களிடமிருந்து எழும் அந்த உணர்ச்சியினை உணருங்கள். அந்த விழிப்புணர்வு ஏற்பட்டவுடன்,உங்கள் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கோபம் குறைகிறது. ஆயினும் ஒழுங்காக செய்யும் தியானத்தினால் உங்கள் மனதையும் அதில் எழுந்து ,வீழும் உணர்ச்சிகளையும் நீங்கள் சாட்சி போன்று காணும் திறன் பெறுவீர்கள்.

சிறப்பான பணி= சாந்தமான மனம்

"நீங்கள் நிறைவானவற்றை விரும்புவதாலேயே கோபம் நிகழ்கின்றது" என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ.

அதாவது, நீங்கள் விரும்பும் வகையில் ஏதேனும் நிகழவில்லையெனில் உங்களுக்குக் கோபம் ஏற்படுகிறது.ஆனால் பெரும்பாலும் கோபத்திற்குப் பின்னர் நீங்கள் வருந்துகிறீர்கள் அல்லவா?இந்த வருத்தம் மேலும் மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

நிகழ்வினை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதில்தான், இதன் பதில் அடங்கியிருக்கின்றது. சரி,கோபித்துக் கொண்டு விட்டோம், என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியாகுங்கள். சாந்தமான மனம் உங்களுக்கு ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் மற்றும் செயல்படும் திறனை அளிக்கும்.

நினைவில் கொள்ளுங்கள் சாந்தமான மனதுடன் இருந்தால்தான் சிறப்பான பணி நிகழும்.மனம் மகிழ்வுடனும் திருப்தியுடனும் இருக்கும்போது, நீங்கள் சாந்தமாகவும் தியான மன நிலையிலும் இருக்கும்போது கோபம் என்பதே வராது. கோபத்தினால் எந்தத் தவறையும் திருத்த முடியாது என்று அறிந்து கொள்ளுங்கள்.விழிப்புணர்வு இருந்தால்தான் எதையுமே சரி செய்ய முடியும்.

அடிக்கடி கோபம் வந்தால், அப்போது:

  • என்ன உண்கிறீர்கள் என்று கவனியுங்கள். தானியங்கள், பச்சைக் காய்கள் பழங்கள்,சாலடுகள் நிறைந்த ஆரோக்கியமான சைவ உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு நாளில் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • தினமும் தியானம் செய்யுங்கள்.நாளில் எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்தால், தொந்தரவுகள் இன்றி ஆழ்ந்த அனுபவத்தை அடையலாம்.
  • உங்கள் நண்பர்களுடன் இணைந்தும் தியானம் செய்யலாம். குழுத் தியானம் அதிகத் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

கோபப் படுவதை விடுத்து, கோபத்தை காட்டி விடுங்கள்

சில சமயங்களில் காரியங்களை நடத்திக் கொள்வதற்கு கோபப் படுவது முக்கியம் என்பது போலத் தோன்றுகிறது.உதாரணமாக நீங்கள் சிறு குழந்தையின் பெற்றோராக இருந்தால்,நீங்கள் கண்டிப்பாகவும் சில சமயங்களில் கோபத்தை காட்ட வேண்டியிருக்கும். ஆனால் கோபத்தை காட்டுவது என்பது வேறு, கோபப் படுவது என்பது வேறு.நீங்கள் கோபத்தை காட்டும்போது,நீங்கள் கோபத்தைக் காட்டுவது பாவனைதான். மன ஆழத்தில், நீங்கள் சாந்தமாக இருக்கின்றீர்கள். நீங்கள் சீராக தியானம் செய்யும்போது,உங்களால் கோபப் படாமல் தேவையான போது,கோபத்தைக் காட்ட வேண்டும்.

ஒழுங்கான தியானம் ஒவ்வொரு நிலையிலும் என் மனதை சாந்தமாக வைத்திருக்க உதவுகின்றது. இப்போது தேவைப்பட்டால் கூட, நான் கோபப் படுவதில்லை. ஆயினும் உள்ளே சாந்தமாக என்னால் கோபத்தை காட்ட முடிகிறது," என்கிறார் தீப்தி சச்தேவ்.

உங்கள் கோபம் அதிக விலையுள்ளதாகவும், புன்சிரிப்பு மலிவான தாகவும் ஆக்குங்கள்

அடிக்கடி புன்முறுவல் புரியுங்கள். நீங்கள் ஓயாமல் புன்முறுவலுடன் இருக்கும்போது,கோபப் பட முடியாது. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் கோபமில்லாத மனிதராக இருப்பதற்குப் பெருமைப் படுங்கள்.

அனைத்து லேபல்களையும் விட்டு விடுங்கள்

இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதில் கோபப் படுங்கள். ஸ்ரீ ஸ்ரீ, "தண்ணீரில் வரையப் பட்ட கோடு நிலைத்திருக்கும் அளவே, எந்த உணர்ச்சியும் நிலைத்திருக்கும்.உங்கள் கோபத்திற்கும் அதுவே பொருந்தும்.வந்து போகும்.என்னவாயினும்,உங்களுடைய ஆன்மீகப் பயிற்சியினைத் தொடர்ந்து கொண்டிருந்தால்,கோப உணர்வு எழும் அலைவரிசை குறிப்பிடத் தக்க முறையில் குறையும்.முன்பு உங்களை வருத்தப் படுத்திய சந்தர்ப்பங்கள் இப்போது உங்களுக்கு ஒன்றுமில்லாததாக தோன்றக் கூடும்.

நமது மனம் கோபத்திலே ஊறி வெறுப்பாக மாறுவதை அனுமதிக்காமல் இருப்பது முக்கியமாகும். ஏனெனில் அது நமது வாழ்வில் அன்பையும் சந்தோஷத்தையும் அகற்றி விடும். சந்தோஷமாக இருப்பது ஆடம்பரம் அன்று. அது தேவையாகும். தியானத்தின் மூலம்,நம்மை நம்முடனே இணைத்துக் கொள்ளும் திறன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல் ஆகும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.

பாரதி சச்தேவின் குறிப்புகளை உள்ளடக்கி திவ்யா சச்தேவ் எழுதியது.