தியானம் செய்யுங்கள்! தலைவலியிலிருந்து விடுபடுங்கள்(How to get rid of a headache naturally in tamil)

தலை வலி- இந்த ஒரு சொல், நமக்கு முன்னர் வந்த தலை   வலி யினைப் பற்றிய நினைவுகளை மீண்டும் எடுத்து வருகின்றது.லேசாகத் துவங்கும் தலை வலி, மெதுவாக அதிகரித்து,பின்னர் சில சமயங்களில் தாங்க முடியாத அளவுக்கு எடுத்துச் செல்கின்றது. உங்கள் உள்ளங்கைகளுக்கிடையே தலையைப் பிடித்துக் கொள்ளும் உணர்வு,கைகளை முறுக்கித் தலையை சுவரில் மோதிக் கொள்ளலாம் போன்ற உணர்வு இவையனைத்தும் ஏற்படுகின்றன அல்லவா ?

மூடி முடக்கி வைத்திருக்கும் உள்ளங்கைகளைத் திறந்தால் தலை வலி விலகும் என்றால் எப்படியிருக்கும்? ஆம். அடுத்த முறை தலை வலி ஏற்படும்போது, கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளை கூரையை நோக்கி, விரித்துக் கொள்ளுங்கள். சில ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து விடுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தளர்வான நிலையில் இருங்கள். அதுதான் தியானம்.

ஏன் தலை வலி ஏற்படுகிறது என்பதற்கு இதோ சில காரணங்கள்:

காரணம் #1 அழுத்தம்

தியானமே இதை நீக்கும்.உடல் மற்றும் மனம் அதிகமான அளவு அழுத்தம் அடைந்தால் தலை வலி உண்டாகும். தியானம் இதற்கு நேர்மாறான விகிதாசாரம் உடையது. எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அழுத்தம் விலகி விடும். குறைந்த பட்சம் 10 முதல் 20 நிமிடங்களுக்குத் தினமும்<strong> தியானம்</strong> செய்யுங்கள்

காரணம் #2 – உடல் மற்றும் மன உழைப்பு

தியானமே இதற்கு மீட்பு. நாள் முழுவதும் அதிகமாக வீட்டிலும் பணியிடத்திலும் வேலை செய்தால் தலை வலி ஏற்படலாம். இருபது நிமிஷங்கள் தியானம் செய்வது புத்துணர்வு அளிக்கும். காலை நேரத்து புத்துணர்ச்சி மாலை நேரத்திலும் ஏற்பட்டு புன்முறுவலை வரவழைக்கும்.உங்களை முற்றிலும் தளர்த்தி, குடும்பத்தினருடன் மாலை நேரத்தினை மகிழ்வுடன் அனுபவிக்கலாம்.

காரணம் #3 – உடல் அமைப்பில் சம நிலைக் குறைவு

தியானமே இதற்கு மீட்பு. சில சமயங்களில் வயிற்று கோளாறு, உண்டாகி அதனால் தலை வலிக்கலாம். நமது உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால்,ஒன்றில் ஏற்படும் கோளாறு மற்றொன்றைப் பாதிக்கக் கூடும். உடலின் உறுப்புக்களில் சேர்ந்துள்ள நச்சுகள் மற்றும் அழுத்தத்தை விடுவித்து, உடலமைப்பின் சமநிலையினை தியானம் மீட்டெடுத்து வரும். மேலும் அது ஜீரண சக்தியின் மீதும் ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுத்தும். தியானத்தினால் ஏற்படும் விழிப்புணர்வினால் நீங்கள் என்ன உண்கிறீர்கள் என்பதில் கவனமாகவே இருப்பீர்கள்.நீங்கள் உணவினைக் கவனிக்கத் துவங்கியவுடன் உங்கள் ஜீரணம் மேம்பட்டு உடலில் ஒத்திசைவு ஏற்படுகிறது. அதனால் தலைவலி ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறையும்.

காரணம் #4 – தலைப் பகுதிக்கு குறைந்த ரத்தம் வழங்கப் படுதல்:

தியானமே இதற்கு மீட்பு. தினமும் இரு முறை 10 முதல் 20 நிமிடங்கள் செய்யும் தியானம் மனதிற்கு இளைப்பாறுதலைத் தருவதோடல்லாமல் தலைப் பகுதிக்கு ரத்தம் செல்லவும் வழி வகுக்கின்றது.அதனால் தலை வலி ஏற்படும் நிலை குறைகிறது. தியானம் தவிர சில <strong>யோகாசனங்களும்</strong> செய்யலாம். இவை ரத்த ஓட்டத்தினைக் கூட்டும். உதாரணமாக, ஹஸ்த படாசனா, சர்வாங்காசனா மற்றும் ஹலாசனா போன்றவை.

காரணம் #5 – இரவில் சரியான தூக்கமின்மை

தியானமே இதற்கு மீட்பு : நீண்ட பணி நேரம்,பரபரப்பான வேலை கலாசாரம், அல்லது தொலைக் காட்சியைஅல்லது வலைத்தளங்களை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருத்தல், இவையெல்லாம் படுக்கைக்குச் செல்ல நேரத்தினை மறுக்கின்றன. இவையெல்லாம் சிறந்தவையல்ல என்றாலும் சில நேரங்களில் தவிர்க்க இயலாதவையாகின்றன. உடனடியாக ஒரு பணிப்பொறுப்பினை முடிக்க வேண்டிய கட்டாயம், அல்லது ஒரு வாடிக்கையாளரின் அழைப்பினைப் பின்னிரவில் ஏற்க வேண்டிய கட்டாயம் இவை போன்றவற்றில் நாம் எதுவும் செய்ய முடியாது.அந்த சமயங்களில் 20 நிமிட நேரம் தியானம் செய்வது அந்தப் பணியின் அழுத்தத்தை சமாளிக்க உதவும்.

அது உங்கள் மனதையும் தளரச் செய்யும். அதனால் உங்கள் ஆற்றல் கூடும். செயல்திறன் அதிகரிக்கும். உண்மையில் சீரான தினசரி தியானத்தால், உங்கள் ஆக்கத் திறன் அதிகரிக்கின்றது. நீங்கள் வெகு நேரம் கண்விழிக்காமலேயே உங்கள் பணியினைக் குறைந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும்.

மேலும் <strong>தியானம்</strong> உங்கள் தூக்கத்தின் தரத்தையும் கூட்டுகிறது. 20 நிமிட நேர தியானம் எட்டு மணி நேர உறக்கத்தை விட கூடுதலாக ஆழ்ந்த ஓய்வளிக்கும் என்று தெரியுமா? அதனால் தியானம் உறக்கத்திற்கு மாற்று அல்ல. தியானம் செய்தால் நன்றாக உறங்கலாம்.

காரணம் #6 – நாராசமான சப்தம்

தியானமே இதற்கு மீட்பு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இதை அனுபவித்திருப்போம். சப்தத்தைத் தாங்க முடியாத சிலருக்குத் தலை வலி ஏற்பட்டிருக்கலாம். தியானத்தின் ஒரு விளைவு என்னவென்றால், எல்லா நிலைமைகளையும் ஏற்றுக் கொள்ளும் திறனையும், எங்கேயும் எப்போதும் சாந்தமாக இருக்கும் மனநிலையையும் அளிக்கிறது.ஆகவே சீரான தியானப் பழக்கம் உள்ள உங்களுக்கருகில் பெரும் ஒலி இருந்தாலும் அது உங்களைப் பாதிக்காது.

குறிப்பு: இத்தகைய நிலை நீங்கள் தொடர்ந்து ஒழுங்காக தினமும் தியானம் செய்து வந்தால் மட்டுமே கிடைக்கும். சில சமயங்களில் அதிக சப்தத்தினால் தலை வலி ஏற்பட்டு, ஆனால் ஒழுங்கான தியானப் பயிற்சியினால் அதை ஏற்றுச் சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.

காரணம் #7 – தொலை பேசியில் அதிக நேரம் பேசுதல்

தியானமே இதற்கு மீட்பு- தியானமே இதற்கு மீட்பு- சில நேரங்களில் இந்த நிலைமையைத் தவிர்க்க இயலாது. வாடிக்கையாளர்களின் அழைப்பு நாள் முழுவதிலும் இருக்கலாம். உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்கள் உறவினரிடம் நாம் பேசிக் கொண்டிருப்பதும் நிகழக் கூடியதே.சில சமயம் அது மிக அதிகமாகும் போது தலை வலி ஏற்படலாம்.

கவலைப் படாதீர்கள். சில நிமிஷங்கள் தியானம் செய்யுங்கள். அது , மின்னியல் கருவிகளால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து உங்களை விடுவித்து நரம்பு மண்டலத்திற்கு ஆழ்ந்த ஓய்வினை அளிக்கும். எனக்கு ஒற்றைத் தலை வலி கடந்த பத்து வருடங்களாக இருந்து வந்தது.நகரவே முடியாத அளவுக்கு அது மிகவும் துன்புறுத்தும் வழியினைத் தந்து வந்தது. நான் தியானம் செய்யத் துவங்கினேன். சில நாட்களிலேயே மாறுதலைக் கண்டேன். வலியின் வேகம் குறையத் துவங்கியது. தினமும் தியானப் பயிற்சி செய்வதால் இப்போது அடிக்கடியும் வலி வருவதில்லை”. என்கிறார் சாரா ஜோசப், போலந்து

I had migraine for almost 10 years and it was pretty severe to the extent that I could not move at times – the pain was excruciating. As I started to meditate, I noticed a difference almost within a few days. It started with the intensity of the pain coming down and now the frequency of headache has also reduced with daily practice – Sara Joseph, Poland.

காரணம் #8 - அதிக சிந்தனை

தியானமே இதற்கு மீட்பு - ஒரே தீர்வு அதிகம் யோசிக்காதீர்கள். சில நேரங்களில் இது தவிர்க்க இயலாததாகி விடுகின்றது.அன்றாட அழுத்தம், பணிப் பளு, குடும்பப் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகள் இவற்றையெல்லாம் பற்றி எப்படி யோசிக்காமல் இருக்க முடியும்? சரி! ஆனால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்றால், நாளின் சில நிமிஷ நேரத்தை எடுத்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து தளர்வாக, வெளியுலகைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, உங்களுடைய சொந்த நேரம் என்று சற்று எடுத்துக் கொள்ளுங்கள். இதை முயன்று பாருங்கள். வித்தியாசத்தைக் காணுங்கள்.

உங்கள் தலை வலியை நீக்க வேறென்ன உதவ முடியும்?

  • தினமும் செய்யும் யோகப் பயிற்சி ஆசனங்கள் ப்ராணா யாமம், - நாடி சோதன மற்றும் ப்ரம்மரி தேனீ மூச்சு இவையனைத்தும் பயனுள்ளவை.இவற்றுக்குப் பின்னர் தியானம் செய்யவும்.
  • தினமும் நிறையத் தண்ணீர் குடியுங்கள் சில நேரங்களில் யோகா தியானம் செய்யும்போதும் தலை வலி ஏற்படலாம். ஏனெனில், தியானத்தின்போது நச்சுப் பொருட்கள் வெளியேறுகின்றன.ஆகவே உங்களுடைய அமைப்பில் நீர்நிலை சரியாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் நச்சுக்கள் நன்கு வெளியேறும்.
  • ஆயுர்வேதம் உதவும். ஆயுர்வேத மூலிகைகள் உங்களைத் தலை வலியிலிருந்து விடுவிக்கும். வெற்றிலை, கிராம்பு, பூண்டு, இஞ்சி,மற்றும் மருதாணி போன்ற இவை பயன் தரும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.

பிரித்திகா நாயர் எழுதிய இது, சஹஜ் சமாதி ஆசிரியரான பாரதி ஹரீஷ் மற்றும் ஆயுர்வேத வல்லுனரான நிஷா மணிகண்டன் ஆகியோரின் கருத்துக்களை உள்ளடக்கியது.