தியானமும் உறக்கமும்- ஒத்தவை ஆயினும் வேறுபட்டவை(Tips for good sleep in tamil)

சில விதங்களில் தியானமும் உறக்கமும் ஒத்தவை ஆயினும் மிகவும் வேறுபட்டவை.

அது எவ்வாறு என்று பார்ப்போம்

#1 ஆற்றலைத் தட்டுதல்

தூக்கத்தை விட தியானத்தில் கிடைக்கும் ஆற்றல் அதிகம். "தியானம் செய்வதன் மூலம் நீங்கள் உள் மூல ஆற்றலை உருவாக்கி, உங்கள் உடலை ஒரு மின்விசைநிலையமாக ஆக்க முடியும்"என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

#2 ஆழ்ந்த ஒய்வு

தியானம் தூக்கம் இரண்டுமே ஆழ்ந்த ஓய்வினை அளிக்கும்.ஆனாலும் தியானத்தின் மூலம் கிடைக்கும் ஒய்வு அதிக ஆழமானது. " ஆழ்ந்த உறக்கத்தில் பெரும் ஓய்வினை விட அதிகமான ஓய்வினைத் தியானம் தருகிறது" என்கிறார்,ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள்.20 நிமிட நேரம் செய்யும் தியானம் எட்டு மணி நேர உறக்கத்திற்கு ஒப்பானது.

#3 அளவில்லா ஒய்வு

வழக்கத்தை விட அதிக நேரம் தூங்கி விட்டால் என்ன ஆகிறது? சோம்பேறித் தனமும் மந்தமும் ஏற்படுகிறது. ஆறு முதல் எட்டு மணி நேர உறக்கமே சிறந்தது.அதிக அல்லது குறைந்த உறக்கம் அழுத்தம் மற்றும் சமநிலைக் குறைவை ஏற்படுத்துகின்றது. ஆனால், தியானத்திற்கு அத்தகைய இரு பக்கங்கள் இல்லை. அதே சமயம் ஆழ்ந்த அனுபவம் பெற முழு நாளும் தியானம் செய்யத் தேவையில்லை.ஒரு நாளில் இரு முறை 20 நிமிஷம் தியானம் செய்தால் போதும்.

#4 உண்மையான இட்டுநிரப்புதல்

தியானம் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆனால் அது தூக்கத்திற்கு மாற்று அல்ல. தூக்கமும் தியானமும் முக்கியமானவை.உண்மையில் தியானம் தூக்கத்தினை இட்டு நிரப்புகிறது.தினமும் தியானம் செய்தால் ஆழ்ந்த ஓய்வான தூக்கத்தை அனுபவிக்கிறோம். உறக்கமில்லா இரவுகளில் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தால், ஒழுங்கான தியானம் அதற்கான சிகிச்சையாகும்.

#5 ஜீவத்துவ பரிணாமத்தைக் குறைக்கிறது

உறக்கம் தியானம் இரண்டிலுமே வளர்சிதை செயல்பாடு குறைகிறது.அது மனதை சாந்தமான நிலைக்குக் கொண்டு செல்கின்றது.

#6 விழிப்புணர்வு எச்சரிக்கை

நான்கு விதமான மெய்யுணர்வு நிலைகள் உள்ளன. விழித்திருத்தல், தூக்கம், கனவு, மற்றும் தியான நிலை. உறங்கும்போது ஒய்வு கிடைக்கிறது ஆனால் விழிப்புணர்வு இல்லை. எழுந்தவுடன் புது உணர்வு அடைகிறோம், ஆனால் நாம் தூங்கும்போது நிகழ்ந்தவற்றை நினைவு கூற முடியாது. தியானம் விழிப்புணர்வுடன் கூடிய ஓய்வெடுத்தல் ஆகும்.

"விழிப்பு நிலை மற்றும் தூக்கம் சூரிய உதயம் மற்றும் இருட்டு போன்றது. கனவு அந்தி வெளிச்சம் போன்றது. தியானம் என்பது விண்வெளியில் பறப்பது போன்றது-அங்கு சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் எதுவும் கிடையாது." என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

#7 உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள்

தூக்கம் மற்றும் தியானம் இரண்டுமே நம்மைப் புதுப்பிக்கும்,ஆயினும் தியானம் நமது கடந்த கால நினைவுப் பதிவுகளிருந்து விடுவிக்கும்.ஒழுங்கான தியானப் பயிற்சியின் மூலம், பல ஆண்டுகளாக நமது மனதில் சேர்ந்துள்ள உணர்ச்சிக் குப்பைகளை வெளியேற்றி புத்துயிர் பெறலாம்.

#8 விருப்பத் தேர்வு

நம்மால் உறக்கத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது. எப்போது உறக்கம் வருகிறதோ அப்போதுதான் உறங்க முடியும்.ஆனால் நம்மால் எப்போது வேண்டுமோ அப்போது தியானத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். காலை வேலை சிறந்தது என்றாலும் .ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும்,செய்யலாம்.

ஆழ்ந்த ஒய்வு,முழுமையான விழிப்புணர்வு உள்ஆற்றல் தட்டபடுதல் போன்ற அனைத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட பின்னர், எந்த தாமதமும் இன்றி தியானத்தைத் தேர்ந்தெடுங்கள்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஞான உரைகளின் தூண்டுதலால் எழுதப் பட்டது.

தியானம் தூக்கத்திற்கு மாற்று அல்ல. தூக்கம் தியானம் இரண்டுமே பயனுள்ளவை. ஒழுங்காக செய்யப் படும் தியானத்தின் மூலம் உங்கள் தூக்கத்தின் தரம் உயரும்.