கோபத்தைக் கட்டுப்படுத்தக் குறிப்புக்கள் (Tips to control anger in tamil)

கோபம் முற்றிலும் உங்களைக் கட்டுப்படுத்துவதை உணர்ந்து வருந்துகின்றீர்களா? எவ்வாறு கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்று யோசிக்கின்றீர்களா? தியானத்தினை முயற்சியுங்கள்

 

ஆசனங்கள்  தியானம்  என்ன உண்கின்றீர்களோ  அதுவே நீங்கள்

கோபம் கொள்வது சரியல்ல என்று எத்தனை முறை நீங்கள் நினைவு படுத்திக் கொண்டாலும் அந்தக் கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது என்பதை கவனித்திருக்கிறீர்களா?குழந்தைப் பருவம் முழுவதிலும் கோபப் படக் கூடாது என்பதை நன்கு கற்றிருக்கின்றீர்கள். ஆனால் எவ்வாறு கோபப் படாமல் இருப்பது என்பது ஓர் கேள்விக்குறியே. இத்தகைய உணர்ச்சிப் புயல் உங்களைத் தாக்கும்போது என்ன செய்கிறீர்கள்?

நல்லது, இப்போது நாம் கோபத்தின் மூல காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதைச் சமாளிக்க எளிய வழிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

கோபத்தைப் புரிந்து கொள்ளுதல்

உங்களைச் சுற்றி பூரணமற்ற குறைபாடுகள் நிறைந்தவற்றைக் காணும்போது உங்களால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லையல்லவா ?உதாரணமாக ஒருவர் ஒரு தவறு செய்யும்போது, உங்கள் கோபம் அலை போன்று எழுந்து உங்களை ஆட்டிவைத்து, குறைகின்றது.சில சமயங்களில் அது வருத்தப் படவும் வைக்கின்றது அல்லவா?

கோபம் வரும்போது நாம் அதை விழித்துருணவதில்லை. கோபம் குறைபாடுகளை அகற்றாது என்பது உணர்ந்து கொள்வதுதான் முதல் படியாகும்.அடுத்து நாம் நிலைமையை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொண்டால்தான் அதை விழிப்புணர்வுடன் சரியாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.இது கூறுவதற்கு எளிது செய்வது கடினம் என்று நீங்கள் எண்ணலாம். மனதையோ உணர்ச்சிகளையோ நேரிடையாக கையாள்வது எளிதல்ல. அதனால்தான் நமக்கு சில செயல் நுட்பங்கள் தேவைப் படுகின்றன.

கோபத்தை மேலாண்மை செய்யும் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

  • உடலிலும் மனத்திலும் ஓய்வற்ற படபடப்பு
  • கடந்த கால வலு நிறைந்த கோபமான எண்ணப் பதிவுகள்
  • விழிப்புணர்வற்ற நிலை மற்றும் குறைகளை ஏற்றுக் கொள்ளாத நிலை

இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

கோபம் கடக்க 7 குறிப்புகள் | 7 tips to control your anger

  1. உடலிலும் மனத்திலும் ஓய்வற்ற படபடப்பு நிலையைக் கையாளுதல் | You Are What You Eat!
  2. ஓய்வின் சக்தியை அனுபவியுங்கள்! |Experience The Power Of Rest! 
  3. யோகப் | யோகப் பயிற்சி நல்லது! | Yogic Twists Are Good!
  4. உங்கள் மனதை உங்கள் நெருங்கிய நண்பனாக்கிக் கொள்ளுங்கள் | Make Mind Your Best Friend
  5. உங்களுடைய அனைத்து நேர மாற்று மருந்து | Your All Time Antidote
  6. 20 நிமிஷ உள்நோக்கிப் பயணம் |A 20-Minute Journey Within
  7. ம்ம் என்பதை முயன்றிருக்கின்றீர்களா? | Have You Hmmed?
balanced-diet-for-hair-loss
1

உடலிலும் மனத்திலும் ஓய்வற்ற படபடப்பு நிலையைக் கையாளுதல்

என்ன உண்கின்றீர்களோ அதுவே நீங்கள்

சில நாட்களில் நீங்கள் அமைதியாகவும் இளைப்பாறியும் இருக்கின்றீர்கள், ஆனால் சில நாட்களில் படபடப்பாக இருக்கின்றீர்கள் என்பதைக் கவனித்திருகின்றீர்களா ? இது ஏனெனில், நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மனதையும் உணர்ச்சிகளையும் பாதிக்கின்றது. சில வகை உணவுகள் மனத்திலும் உடலிலும் படபடப்பை ஏற்படுத்துகின்றன.இவ்வகை உணவுகளைத் தவிர்த்து விடுவது உங்கள் கோபத்தை அடக்க உதவும். இவ்வுணவு வகைகள், பெரும்பாலும் அசைவ உணவு, காரமான எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகள் ஆகும்.

    experience the power of rest image
    2

    ஓய்வின் சக்தியை அனுபவியுங்கள்!

    இரவு நன்கு உறங்கவில்லைஎனில் அடுத்த நாள் காலை எவ்வாறு உணருகின்றீர்கள்? அதிகக் கோபம் ஏற்படுகிறதல்லவா? உடலின் களைப்பும் படபடப்பும் உங்கள் மனதில் எரிச்சலையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். 6-8 மணி நேர உரைகள் மிக முக்கியமானது ஆகும். இது உடலுக்கும் மனதிற்கும் சரியான ஓய்வினை அளித்து, உங்கள் கோபக் கிளர்ச்சிகளைக் குறைக்கின்றது.

    yogic twists are good
    3

    யோகப் | யோகப் பயிற்சி நல்லது!

    பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் யோகாசனங்கள் செய்தால் உங்களுடைய அமைதியின்மை விலகி விடும்.சில சுழற்சிகள் சூரிய நமஸ்காரம் செய்து துவங்குவது நல்லது. யோகாசனங்கள் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அவை மூச்சுடன் இணைந்த பயிற்சியாதலால்,உங்கள் உடலுக்கு நீட்டுவித்தல் பயிற்சியோடு உங்கள் ஆற்றலையும் அதிகரிக்கிறது.

    சில நாட்களில் நான் மிகுந்த அழுத்தத்தில் களைத்திருக்கும்போது ஏன் உடலில் அதிக இறுக்கம் ஏற்படும். இது என்னை மேலும் அமைதியற்று படபடப்பாக்கும். எளிதில் கோபம் ஏற்படும். யோகா உடலில் இத்தகைய இறுக்கத்தைத் தளர்த்தி, என்னை இளைப்பாறியும் மன மகிழ்ச்சியுடனும் வைக்கின்றது" என்கிறார் ப்ரியம் கன்னா.

    Nadi Shodhan to make your mind the best friend
    4

    உங்கள் மனதை உங்கள் நெருங்கிய நண்பனாக்கிக் கொள்ளுங்கள்

    பாஸ்த்ரிகா மற்றும் நாடி சோதன் போன்ற  பிராணயாமபயிற்சிகள் உங்களுடைய மன அமைதியின்மையை குறைக்க உதவும். மனம் அமைதியாகவும் நிசப்தமாகவும் இருக்கும்போது உங்களுக்குக் கோபமோ கிளர்ச்சியோ ஏற்படாது.

    5

    உங்களுடைய அனைத்து நேர மாற்று மருந்து

    ஒரு சில மூச்சுக்கள் உள்ளேயும் வெளியேயும் எடுத்து விட்டால் உங்கள் கோபம் உடனடியாக குறைந்து விடும். கோபம் வந்தவுடனேயே கண்களை மூடிக் கொண்டு சில ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விடுங்கள்.உங்கள் மன நிலை மாற்றத்தினை உணருங்கள்.மூச்சு அழுத்தத்தை விளக்கி உங்கள் மனதை அமைதிப் படுத்தும்.

    meditation relaxation
    6

    20 நிமிஷ உள்நோக்கிப் பயணம்

    சீரான யோகா, பிராணயாமம் உணவில் கவனம் இவையாவும் அமைதியின்மையை குறைக்கும், ஆனால் எவ்வாறு அத்தகைய மன சமநிலையினை நீடித்து வைத்துக் கொள்வது? தினமும் தியானம் செய்தல் என்பதே அதன் விடையாகும்.தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் அது முழுநாளுக்கும் போதுமானது ஆகும்.

    7

    ம்ம் என்பதை முயன்றிருக்கின்றீர்களா?

    தியானம் என்னை அமைதியாக வைத்து கோபத்திலிருந்து விலக்கி வைக்கின்றது" என்று கூறுகிறார் சுரபி சர்மா

    இது கோபத்திற்கு இன்னொரு மாற்று மருந்தாகும். ஹ்ம்ம் என்னும் செயல்முறை ஓரிரு நிமிட நேரம் தான் எடுக்கும், ஆனால் உடனேயே நீங்கள் அமைதியடைவீர்கள்.இதை எவ்வாறு செய்வது என்பதை வீடியோவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

     

    Read Now: Control your Anger before it Controls You >>

    ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் அருளுரைகளிருந்து எடுக்கப் பட்டது

    திவா சச்தேவ் அளிக்கும் இத்தொகுப்பு, பாரதி ஹரீஷ் என்னும் சஹஜ் சமாதி ஆசிரியரின் குறிப்புக்களை உள்ளடக்கியது.