இயற்கையாக பளபளப்பான மேனியை அடைய பதினோரு வழிகள் (Tips for glowing skin in tamil)

அழகு என்பது உள்நிகழ்வு. அழகு பொருட்களில் அல்ல, மனிதர்களிடம் அல்ல, காண்பவர்களின் கண்களில் கூட அல்ல. அது ஒவ்வொருவரின் மனதிலேயே உள்ளது என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். இந்த இதய அழகு ஒரு மனிதனின் முகத்தில் ஒளியாக இயற்கையாகவே வெளிப்படுகின்றது.

சரும அளவில் இல்லாது அதையும் தாண்டி உள்ளே இருப்பதுதான் அழகு. ஆயினும் வெளிப்புறமாகத் தெரியும் நமது தோல், அழகின் வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்று ஆகும்.

நாம் பொருள் மற்றும் ஆத்மாவினால் ஆக்கப் பட்டிருக்கின்றோம். நமது தோல் வெளிப் புறமாகத் தெரிவதையும் தாண்டி, உயிர்ச்சத்தும் செயல்பாடும் நிறைந்தது ஆகும். நமது உடலிலுள்ள பிற உறுப்புக்களைப் போன்றதே இது. இதை ஆரோக்கியமாகவும் வளர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று காணப்படும் பல அழகு சிகிச்சைகள் உடல் தேவைகளை மட்டுமே குறிப்பிட்டு காண்கின்றன. தோலின் ஒவ்வொரு செல்லையும் உள்ளிருந்து ஒளிவீசி ஆற்றலும் பளபளப்பும் மிக்கதாக எவ்வாறு ஆக்குவது என்பதைப் பற்றி எதையும் தெரியப் படுத்துவதில்லை.

வயதாகும்போது தோல் சுருங்குகின்றது. அழுத்தம், கவனிப்புக் குறைவு ஆகியவற்றாலும் சுருக்கங்கள், கரு வட்டங்கள், உலர் நிலை, துளைகள், பருக்கள், களைப்பு மங்கல் ஆகியவை வேண்டாத விருந்தினராக வந்து சேருகின்றன.ஆயினும், பல இயற்கையான எளிய குறிப்புகள்,உங்கள் தோலை சுத்தப் படுத்திப் பளபளப்பாக்கி, புத்துயிர் அளிக்கின்றன.

1: உங்கள் வேர்களுக்குச் செல்லுங்கள்

பழமையான ஆயுர்வேதத்தில், அழகின் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆயுர்வேத உப்தான் அல்லது துடைக்கும் முறை மெதுவாக சருமத்தினைச் சுத்தப் படுத்தி, அதன் சுவாசம் மேம்பட உதவுகிறது. இதற்குத் தேவையான உபகரணங்களை உங்கள் சமையல் அறையிலேயே அடையலாம்.

  • 1.கடலை மாவு - 2 மேசைக் கரண்டி
  • 2. சந்தனத் தூள்-
  • 3. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  • 4. கர்ப்பூரம் ஒரு சிட்டிகை
  • 5. தண்ணீர்/ பால்/ பன்னீர்

கடலை மாவு, சந்தனத் தூள், கர்ப்பூரம் மஞ்சள் தூள் ஆகியவற்ற தண்ணீரில் / பால் அல்லது பன்னீரில் கலந்து ஒரு பசை போன்று ஆக்குங்கள். அதை உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 20 நிமிஷங்கள் கழித்து, முகத்தைக் கழுவி விடுங்கள். இரண்டு பஞ்சுகளை குளிர்ந்த பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்துக் கொண்டால் மேலும் புத்துணர்வு பெறலாம். மெல்லிய இசை இதனுடன் சேர்ந்தால் மேலும் சுகமே! 20 நிமிடங்களில் என்ன கிடைக்கும்? பளபளப்பான சருமம் மற்றும் இளைப்பாறுதல்!

  • 2: வியர்த்து விடுங்கள்!

ஓடுதல், மெல்லிய குதிப்பு, சில சுழற்சிகள் சூரிய நமஸ்காரம் இவை உங்கள் உடலுக்கு ரத்த ஓட்டத்தினைத் தரும். வியர்வை மிக நல்லது. பின்னர் குளிர்ந்த நீரில் உங்கள் உடலைக் கழுவிக் கொள்ளுங்கள். அது சருமத்தைச் சுத்தப்படுத்தும்.

  • 3: யோகா பாயினை எடுங்கள்

யோகப் பயிற்சியினால் உங்கள் கவனம் உடலில் மற்றும் மூச்சில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் மூச்சினை வெளிவிடும்போது நச்சுப் பொருட்களை வெளியேற்று கின்றீர்கள். மூச்சின் மீதே கவனத்துடன் செய்யப் படும் யோகப் பயிற்சி உடல் முழுவதையும் சுத்தப் படுத்தி, உங்கள் சருமத்தைப் புத்துணர்வுடனும் ஆற்றலுடனும் வைத்துமுகத்திற்குப் பளபளப்பைக் கூட்டுகின்றது.

  • 4: நீங்கள் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்!

எவ்வளவோ லோஷன்களை பயன்படுத்தினாலும் உங்கள் சருமம் வரண்டு காணப் படுகின்றதா? சில சமயங்களில் நீங்களும், உங்கள் சிநேகிதர்களும் ஒரே பொருளைப் பயன் படுத்தினாலும் அதன் பயன் வெவ்வேறாக இருப்பதை கவனித்திருக்கின்றீர்களா? உங்கள் உடல்வாகு என்பதன் பங்கினை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆயுர்வேதத்தின் படி, ஒவ்வொருவரும் வாதம், பித்தம் ,கபம் என்னும் மூன்று கூறுகளினால் ஆக்கப் பட்டிருக்கின்றனர். இந்த ஒவ்வொன்றும் உடலில் சில குறிப்பிட்ட குணங்களையும், சருமத்தின் தன்மையையும் ஏற்படுத்துகின்றன. உலர்ந்த சருமம் இருந்தால் வாதம் அதிகமாக இருக்கலாம். பித்த உடலில் சாதாரண சருமத் தன்மையும், கப உடலில் எண்ணைப் பதம் அதிகமாகவும் காணப் படலாம். எந்த விதமான உடல்தன்மை உங்களுடையது என்று அறிந்து கொண்டால், என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

  • 5: என்ன உண்கின்றீர்களோ அதுவே நீங்களாவீர்கள்!

என்ன உண்கின்றோமோ அதைப் பொறுத்தே நமது உடல் அமையும். புதிய சுத்தமான நீரதிகமுள்ள உணவினை உண்டால் சருமத்திற்கு நல்லது. சமவிகித உணவு, தேவையான அளவு ப்ரோடீன், விட்டமின்கள், அதிகப் பழங்கள், பச்சைக் காய்கள், இவற்றை சரியான நேரத்தில் சரியான அளவில் உண்பது நல்லது.

  • 6: வாரம் ஒரு முறை செய்யுங்கள்

வாரமொரு முறை எண்ணைகளுடன் மென்மையான முக மசாஜ் செய்வது அற்புதங்களை நிகழ்த்தும். உங்களுடைய சருமம் எவ்விதமானது என்பதை அறிந்து, அதற்கேற்ப, சிரிதலா, அல்லது நாராயணத் தைலம் இவற்றைத் தேர்ந்தெடுத்து, மசாஜ் செய்யுங்கள். கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய்,பாதாம் எண்ணெய், அல்லது கும்கதி ஆகியவை பளபளப்பான சருமத்தை அளிக்கும் சத்துள்ள எண்ணெய்கள் ஆகும்.

  • 7: சுதர்சனக் க்ரியாவினை உங்கள் மந்திரமாக்கிக் கொள்ளுங்கள்

சரியான மூச்சு முறை முகத்தில் புள்ளிகளையும்,பருக்களையும் நீக்கும் என்று எண்ணுகின்றீர்களா? ஆம் அது சரியே. நாம் தளர்வாக இருக்கும்போது, அழுத்த அறிகுறிகளான பருக்கள் தடித்தல்கள், ஆகியவை குறையும். சுதர்சனக் க்ரியா என்னும் மூச்சுப் பயிற்சி, உடலில் மற்றும் மனதில் தேங்கியிருக்கும் அழுத்தத்தை வெளிப்படுத்தி, நமது அமைப்பில் ஒத்திசைவையும் சமனிலையையும் ஏற்படுத்துகின்றது.

  • 8: தினமும் தியானம் செய்யுங்கள்

ஒரு மெழுகுவர்த்தியால் ஒளியினைப் பிரகாசிக்கச் செய்யாமல் இருக்க முடியாது. தியானம், உங்கள் உள் ஒளியின் பிரகாசத்திற்கு உதவுகின்றது.அதிக தியானம் அதிக பிரகாசத்திற்கு வழி வகுக்கின்றது. ஓவியர்கள், தியானம் செய்பவர்களை ஒளி வட்டத்துடன் வரைவதுண்டு. இது கற்பனை அல்ல. உண்மையாகும். தியானம் செய்பவர்கள் எந்த விதமான ஒப்பனையும் இன்றியே உள்ளும் புறமும் ஒளி வீசுகின்றனர்.

  • 9: மௌனம் உண்மையில் பொன் போன்றது

நீண்ட நேரம் பேசிய பின்னர் எவ்வாறு உணருகின்றீர்கள்? முற்றிலும் உலர்ந்து உணரு கின்றீர்கள் அல்லவா? மணிக் கணக்காகப் பேசும் அத்தகைய பேச்சு விளையாட்டாக இருக் கலாம், ஆனால் அது தவறானது. மௌனம் ஆற்றலைச் சேமிக்கின்றது.வாழும்கலையின் இரண்டாம் நிலைப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மௌனத்தினுடன் இணைந்த தியானங்களின் மூலம் அற்புதமான பயன்களை அடைவீர்கள்.உங்கள் சருமமும் பளபளப்பாகும்!

  • 10: உங்கள் மனத்தைக் காத்துக் கொள்ளுங்கள்

மகிழ்ச்சியின்றி, கோபமாக வெறுப்புடன் அல்லது வருத்தத்துடன் இருந்தால் பார்க்க நன்றாக இருக்க மாட்டீர்கள். எனவே சற்று மன அமைதி மகிழ்ச்சி இவற்றுடன் நீங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போது யாரும் உங்களை அசைக்க முடியாது. இதற்கு தியானம் மட்டுமே சிறந்தது. அது ஆடம்பரம் அன்று, மிகத் தேவையான ஒன்று ஆகும்!

  • 11: 18 வரையில் ..... ஏன் கூடாது?

வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும். அதில் சுருக்கங்களும் நரையும் தவிர்க்க இயலாதவை. சாதரணமாக அழகான தோற்றம் என்பது இளமை மற்றும் புதுமை இவற்றோடு சம்பந்தப் படுத்தப் படுவது. ஆயினும், நீங்கள் இளமையாக உணர்ந்தால், இளமையாகவே தெரிவீர்கள். தியானம் இந்த முதிரும் நிலையினை இயல்பாக்கி, உங்களுக்கு இளமையையும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது. எனவே, மனதளவில் என்றும் 18 ஆகவே இருங்கள்!

  • 12: அந்த முக தசைகள் வளையச்செய்ய

உங்கள் ஆடை அணிகலன்கள் ஆகிய அனைத்தும் மிகச் சரியாகவே உள்ளன. ஆயினும் ஏதோ ஒன்று உங்கள் தோற்றத்திற்குத் தேவை. அது என்ன? புன்னகை ! அதிக நேரம், ஆற்றல், பணம் ஆகியவற்றை நம் உடலை அழகு படுத்திக் கொள்வதற்குச் செலவிட்டாலும் நமது உள்மன ஆனந்தத்தை வெளிக்காட்ட மறந்து விடுகிறோம். அதுதான் கண்களை எட்டும் உள்ளம் நிறைந்த சிரிப்பு!

எனவே புன்னைகையுங்கள், உங்களை அழகாக்கிக் கொள்ளுங்கள் உலகினுக்கு அழகு சேருங்கள்!

நாங்கள் பொய்யுரைக்க வில்லை. இந்தக் குறிப்புக்களைப் பின்பற்றுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.

சஹஜ்சமாதி ஆசிரியரான பாரதி ஹரீஷ், மற்றும் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிஷா மணிகண்டன் ஆகியோரின் குறிப்புக்களை உள்ளடக்கியது.

உண்மையான அழகை அனுபவியுங்கள் >>