பெண்களுக்கு அதிகாரமளித்தல் (Women empowerment in tamil)

ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பங்குகளை முயற்சியின்றி ஏற்று வாழும் பெண்கள் எந்த சமுதாயத்திலும் சற்றும் சந்தேகமின்றி சமுதாயத்தின் முதுகெலும்பாகவே  திகழ்கின்றனர். அருமையான மகள், அக்கறையான தாய் திறமையான சக பணியாளர் மற்றும் பல பங்குகளை நம்மைச் சுற்றி  மகளிர் குறையின்றி நயம்பட வகித்து வருகின்றனர். ஆயினும் சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப் பட்ட பகுதியினராகவே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் சமத்துவமின்மை, அடக்குமுறை, பொருளாதார சார்பு  மற்றும் பல சமூக கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.பல நூற்றாண்டுகளாக பணித்துறையிலும் சொந்த வாழ்விலும் உயரங்களை எட்ட தடைகளுடனேயே மகளிர் வாழ்ந்து வருகின்றனர்.

மகளிர் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு பெறச் செய்தல் |Empowering Women Socially and Economically

அவர்களுக்கு உரிமையான, மரியாதைக்குரிய நிலையினை மீட்டெடுத்து வரவும், அவர்களது உள்மன வலிமை, படைப்பாற்றல், சுய மதிப்பு அனைத் தையும் அளிக்கும் வகையில் வாழும்கலை மகளிர் மேம்பாட்டுத் திட்டங் களை முன்னெடுத்து வந்திருக்கின்றது.

இந்த அடிப்படை நன்கு கட்டமைக்கப் பட்ட நிலையில், மகளிர் எந்த சவாலையும் திறன்கள் நம்பிக்கை மற்றும் நளினத்துடன் ஏற்றுக் கையாளத் தயாராகி விட்டனர்.அவர்கள் முன்னிலைக்கு வந்து  தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கு பிற மகளிருக்கு மற்றும் சமுதாயத்திற்கு நேர்மறையான மாற்றம் எடுத்து வரும் சமாதானத் தூதுவர்களாகவும் ஆகி விட்டனர்.

வாழும் கலை மேற்கொண்டிருக்கும் ஆறு மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் | 6 Women Empowerment programs taken up by The Art of Living

  • பொருளாதார சுதந்திரம்
  • பெண் குழந்தைக்கு கல்வி
  • ஹெச் ஐ வி மற்றும் எய்ட்ஸ்
  • சிறைப் பயிற்சித் திட்டம்
  • தலைமைத்துவம்
  • சமுதாய அதிகாரம்

ஊக்குவிக்கும் மகளிர் மேம்பாட்டுக் கதைகள் 

குண்டூர் ஸ்ரீ ஸ்ரீ சேவா மந்திருக்கு மூன்று பெண்கள் வந்தனர். அவர்கள் மனதில் ஆழமான காயங்களடங்கிய கடந்த காலப் பதிவுகள் இருந்தன. அன்னையின் கவனமான மற்றும் அன்பு நிறைந்த வழிகாட்டுதலில் ஜோதி, தத்வமஸி மற்றும் ஸ்ரவாணி ஆகிய மூன்று பெண்களும் இப்போது அழிக்க முடியாத ஆனந்த வாழ்க்கையினை உற்சாகத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

 

கல்வி மூலம் மகளிருக்கு அதிகாரமளித்தல் | Women Empowerment through education

வாழ்க்கையில் முன்னேற கல்வி முக்கியமான கருவியாகும். மகளிரை மேம்படச் செய்து அதிகாரமளிக்க   கல்வியை விட வேறென்ன சிறந்த வழி யுள்ளது? வாழும் கலை தனது பல்வேறு முயற்சிகளின் மூலம் இளம் பெண்கள் மகளிர் ஆகியோருக்கு இந்தியாவின் ஒதுக்குப் புறமுள்ள கிராமங்களிலும் சிறந்த தரம் வாய்ந்த கல்வியை அளிக்கிறது.இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

 

இந்தியாவில் மகளிருக்கு அதிகாரமளிக்கும் பணித் திட்டங்கள் | Women Empowerment Programs in India

வாழும்கலையின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் இதியாவில்  மற்றும் பல நாடுகளில் மகளிர் பொருளாதார சுதந்திரம் அடைந்து சமூக அநீதியை எதிர்த்திருக்கின்றனர். அவர்கள் மாற்றங்களை எடுத்து வரும் முகவர்களுமாகி  பிற மகளிருக்கு கல்வி, சுய அதிகாரம்,  சுயமாக  தாங்களே தங்கள் வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்குத் தயார் செய்கின்றனர்.

 

வாழும்கலையின் மகளிர் மேம்பாட்டுத்  திட்டங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைத் தகர்க்கும் ஊக்கியாக அமைந்து, மகளிருக்கு அவர்களுக்குரித்தான சுதந்திரம் மற்றும் சமஉரிமை ஆகியவற்றை அடையும் மேடையை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

 

வெவ்வேறு திட்டங்களின் பற்றி மேலும் அறிய :

சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Environment protection in tamil)

கல்வி (Importance of education in tamil)

அமைதி (Peace in tamil)

எங்களது அதிகாரமளிக்கும் உருப் படிவம் (Youth Leadership Programs in tamil)

எங்களது முழுமையான அணுகுமுறை (Our Holistic Approach In tamil)