விருதுகள் மற்றும் மரியாதைகள்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (Sri Sri ravishankar contribution in tamil)

உலகம் ஞானத்தை வணங்குகிறது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பார்வையாய் விளங்கும் வன்முறையற்ற, மன அழுத்தம் இல்லா சமூகம் மனித மதிப்புகளால் மீட்டெடுக்கப் பட்டு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப் பட்டு பாராட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ  அவர்கள் மோதல் தீர்மானம், அமைதி, மனித மதிப்புகளை ஊக்குவித்தல் போன்ற துறைகளில் பங்களித்ததற்காக கௌரவிக்கப்பட்டுள்ளார் . ஸ்ரீ ஸ்ரீ அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விருதுகள் அவரை  முதன்மையானவர் என்றும் அவருடைய ஒரு உலக குடும்பம் என்னும் கோட்பாட்டினைக் கொண்டாடும் விதமாகவும் அமைந்துள்ளன.

பல்வேறு பின்புலங்கள் மற்றும் சமயங்கள் சார்ந்த சமுதாயங்கள், மன அழுத்தமற்ற, வன்முறையற்ற ஒரு உலகத்தை உருவாக்கும் ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் பணியில் சேர்ந்துள்ளனர். ஸ்ரீ ஸ்ரீ அவர்களுக்கு அக்டோபர் 2009 ஆம் ஆண்டு கலாச்சார சமநிலை விருது வழங்கப்பட்ட போது அவர் கூறியதாவது நான் இந்த விருதை வன்முறையற்ற, மன அழுத்தமற்ற சமூகம் வேண்டும் என்று நினைக்கும் மக்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த விருது ஓர் தனி மனிதனுக்கானது அல்ல, மாறாக, ஓர் உலகக் குடும்பம் மற்றும் பன்முகக் கலாச்சாரம் என்னும் கோட்பாட்டிற்கு அளிக்கப் பட்ட விருதாகும்.

உலகம் முழுவதிலும் பல நாடுகள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை கௌரவபடுத்தியுள்ளன.அவற்றில் சில நாடுகள் பின்வருமாறு:

  • பராகுவே: மிக உயரிய சிவிலியன் விருதான மேரிடோ டி கம்யுநிரோஸ்  பராகுவே, செப்டம்பர் 13, 2012
  • மங்கோலியா: ஆர்டர் ஒப் தி போல் ஸ்டார் 2006 (உயரிய சிவிலியன் விருது)
  • இந்தியா: 1986 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி அவர்களால்  யோகா சிரோமணி தலைப்பு வழங்கப்பட்டது.
  • கனடா: பிராம்ப்டன் நகரில் மனித நேய விருது, ஒன்டாரியோ, 2006
  • ரஷ்யா: உலக மனித விருது , ஜூலை 1, 2011 (ரஷ்யா தேசிய பாதுகாப்பு அகாடமி)

நான் அனைத்து மரியாதைகள் பட்டியலை  பார்க்க விரும்புகிறேன்

கௌரவ முனைவர் பட்டம்

ஸ்ரீ ஸ்ரீ அவர்கள், உலகெங்கிலுமுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்தும் 15 முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்.

  • இந்தியா: இலக்கிய முனைவர் பட்டம்  (ஹோநோரிஸ் கௌசா ), உத்கல் பல்கலைக்கழகம், இந்தியாவின் ஒரிசா, ஏப்ரல் 25, 2013
  • பராகுவே: முனைவர் பட்டம்  (ஹோநோரிஸ் கௌசா ), ஆட்டோ நோமா டி  அசுன்சியன் ஆப் பராகுவே பல்கலைக்கழகம் செப்டம்பர் 13, 2012
  • அர்ஜென்டினா: டிப்ளோமா ஆப் ஹானர்  புநோஸ் ஏரேஸ் பல்கலைகழகம் ,செப்டம்பர் 6, 2012
  • நெதர்லாந்து: கௌரவ முனைவர் ந்யென்றோடு பல்கலைக்கழகம், நெதர்லாந்து, ஜூன் 15, 2012
  • ஹங்கேரி: பேராசிரியர் ஹோநோரிஸ் கௌசா, ஷெண்ட் இஸ்தவன் பல்கலைக்கழகம், புடாபெஸ்ட், (ஹங்கேரி), ஜூன் 24, 2009

நான் 15 கெளரவ முனைவர்  பட்டியலை பார்க்க விரும்புகிறேன் !

உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் வழங்கிய மரியாதைகள்

  • பத்ம விபூஷண் - இந்திய அரசின் மிக உயரிய விருது, 26 ஜனவரி 2016.
  • மிக உயரிய சிவிலியன் விருதான மேரிடோ டி கம்யுநிரோஸ், பராகுவே,செப்டம்பர் 13, 2012
  • டிரதேன்ட்ஸ் பதக்கம், ரியோ , ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின், மிக உயர்ந்த மரியாதை செப்டம்பர் 3, 2012
  • மங்கோலியன் பிரதமர் விருது, மங்கோலியா, 2006
  • உலக மனித விருது , ஜூலை 1, 2011 (ரஷ்யா தேசிய பாதுகாப்பு அகாடமி)
  • 1986 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி அவர்களால்  யோகா சிரோமணி தலைப்பு (யோகா உச்ச நகை)  வழங்கப்பட்டது.

நான் அனைத்து மரியாதைகள் பட்டியலை  பார்க்க விரும்புகிறேன்.

 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தினங்கள்

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள நகரங்களில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வந்தபோதெல்லாம் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தினம் என்று அறிவித்தார்கள். அதே போல் வேறு நாடுகளில் அவருக்கு ஒப்பற்ற பார்வையாளர் என்ற மரியாதையை அளித்தார்கள்.வாஷிங்டன் டிசி யில் (2007) அவர் பயணம் மேற்கொண்டபோது 'மனித கலாச்சாரம் வாரம் ' என அந்த வாரத்தை அறிவித்து கௌரவித்தது.மேலும் சில அமெரிக்க மற்றும் கனடிய நகரங்களில் கௌரவ  குடியுரிமை வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜெய்ப்பூரில் அவரது வருகையின் போது, ஜெய்ப்பூர் மேயர்  அவர்களால் அடையாள குறியீடு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

 

மற்ற விருதுகள்

  • காந்தி, அரசர் , இகேடா சமூகம், கட்டிடம் கட்டுபவர்கள் பரிசு,அமெரிக்கா, ஏப் 3, 2013
  • க்ரான்ஸ்  மொன்டானா கருத்துக்களம் விருது, ப்ருஸல்ஸ், ஜூன் 24, 2011
  • கலாச்சார இருப்பு விருது, டிரெஸ்டென், (ஜெர்மனி), அக்டோபர் 10, 2009
  • தாரா ஷிகோ நல்லிணக்க தேசிய விருது, புது தில்லி,இந்தியா, 2005
  • தேசிய படைவீரர் அறக்கட்டளை விருது, அமெரிக்கா, 2007

நான் இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

 


 

அனைத்து விருதுகளின் முழு பட்டியல்

முனைவர் விருது  பட்டியல்:

1. கௌரவ முனைவர் பட்டம், தேஷ் பகத் பல்கலைக்கழகம்,பஞ்சாப், இந்தியா, அக்டோபர் 21, 2013
2. இலக்கிய முனைவர் பட்டம்  (ஹோநோரிஸ் கௌசா ), உத்கல் பல்கலைக்கழகம், இந்தியாவின் ஒரிசா, ஏப்ரல் 25, 2013
3. கௌரவ முனைவர் பட்டம், குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அகமதாபாத், குஜராத், இந்தியா, ஜனவரி 19, 2013
4. முனைவர் பட்டம்  (ஹோநோரிஸ் கௌசா ),ஆட்டோ நோமா டி  அசுன்சியன் ஆப் பராகுவே பல்கலைக்கழகம் செப்டம்பர் 13, 2012
5. டிப்ளோமா ஆப் ஹானர்  புநோஸ் ஏரேஸ் பல்கலைகழகம் ,செப்டம்பர் 6, 2012
6. முனைவர் பட்டம்  (ஹோநோரிஸ் கௌசா ), சிக்லோ XXI பல்கலைக்கழகம் வளாகம், கார்டோபா, அர்ஜென்டீனா, செப்டம்பர் 5, 2012.
7. கௌரவ முனைவர் ந்யென்றோடு பல்கலைக்கழகம், நெதர்லாந்து, ஜூன் 15, 2012
8. கௌரவ முனைவர் பட்டம் கியான் விஹார் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் 2012
9. பேராசிரியர் ஹோநோரிஸ் கௌசா, ஷெண்ட் இஸ்தவன் பல்கலைக்கழகம், புடாபெஸ்ட், (ஹங்கேரி), ஜூன் 24, 2009.
10. ஹோநோரிஸ் கௌசா, பெங்களூர் பல்கலைக்கழகம், இந்தியா, 2009
11. D.Litt ஹோநோரிஸ் கௌசா, நாகார்ஜூனா பல்கலைக்கழகம், இந்தியா, 2008
12. D.Litt ஹோநோரிஸ், மகாராஜா சிவாஜி ராவ் பல்கலைக்கழகம், இந்தியா, 2007
13. D.Sc, ராஜீவ் காந்தி அறிவியல் பல்கலைக்கழகம் , இந்தியா, 2007
14. தத்துவ முனைவர் (முழுமையான மருந்து) திறந்தவெளி சர்வதேச பல்கலைகழகம், இலங்கை, 2006
15. உயரிய முனைவர் பட்டம் ,குவெம்பு பல்கலைகழகம், இந்தியா, 2004

உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் வழங்கிய மரியாதைகள்

1. அங்கீகார சான்றிதழ், கலிபோர்னியா சட்டமன்றம் , அமெரிக்கா, ஜூன் 30, 2014 
2. ஒப்பற்ற சிறப்பு விருந்தினர் விருது, பெரு, செப்டம்பர் 15, 2012, லிமா மேயரால் வழங்கப்பட்டது.
3. மிக உயரிய சிவிலியன் விருதான மேரிடோ டி கம்யுநிரோஸ் பராகுவே, செப்டம்பர் 13, 2012
4. ஒப்பற்ற  குடிமகன், பராகுவே நகராட்சி , செப்டம்பர் 12, 2012
5. ஒப்பற்ற விருந்தினர் ,அசுன்சியன் நகரம் , பராகுவே, செப்டம்பர் 13, 2012
6. டிரதேன்ட்ஸ் பதக்கம், ரியோ, ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் மிக உயர்ந்த மரியாதை செப்டம்பர் 3, 2012
7. விஸ்வ சேத்தனா விருது, இந்தியா, டிசம்பர் 19, 2011
8. உலக மனித விருது , ஜூலை 1, 2011 (ரஷ்யா தேசிய பாதுகாப்பு அகாடமி)
9. பீனிக்ஸ் விருது, அட்லாண்டா, அமெரிக்கா, 2008
10. கௌரவ குடிஉரிமை மற்றும் நல்லெண்ண தூதர், ஹூஸ்டன், அமெரிக்கா, 2008
11. பிரகடன பாராட்டு ,நியூ ஜெர்சி, 2008
12. உலக அமைதி சிற்பி உலக அமைதி விருது, இந்தியா, 2008
13. கீழை நாட்டு ஒளிவிளக்கு தேசிய விருது, இந்தியா, 2008
14. மில்லீனியம் அபிவிருத்தி இலக்கு அடைந்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரம் ஆண்டு பிரச்சாரம் (UNMC) விருது , 2007
15. வாஷிங்டன் டிசி யில் அவர் பயணம் மேற்கொண்டபோது 'மனித கலாச்சாரம் வாரம் ' என அந்த வாரத்தை அறிவித்து கௌரவித்தது, மார்ச் ,2007
16. அசாதாரண உலக சமாதான ஊக்குவிப்பு மற்றும் நல்லிணக்க . தலைமை விருது ,அமிட்டி பல்கலைக்கழகம், புது தில்லி, 2007
17. கௌரவ  குடியுரிமை , பால்டிமோர் நகரம் , கனடா, 2006
18. கௌரவ  குடியுரிமை , கேல்கரி  நகரம் ,கனடா, 2006
19. நூற்றாண்டு நிறைவு மெடல்லியன், கால்கரி சட்டமன்றம், கேல்கரி  நகரம் ,கனடா, 2006
20. மனித நேய விருது பிராம்ப்டன் நகரம், ஒன்டாரியோ, 2006
21. ஆர்டர் ஆப் போல் ஸ்டார், மங்கோலியா, 2006
22. பீட்டர் கிரேட் முதல் தர விருது, ரஷ்யா, 2006
23. மங்கோலியன் பிரதமர் விருது, மங்கோலியா, 2006
24. அல்பேர்டா சட்டமன்ற நூற்றாண்டு நிறைவு மெடல்லியன், 2006
25. உலக மனித நேய விருது, இல்லினாய்ஸ், அமெரிக்கா, 2005
26. பாரத சிரோன்மணி விருது, புது தில்லி, இந்தியா, 2004
27. ஒப்பற்ற  பார்வையாளர்கள் விருது, ஏர்ஸ், அர்ஜென்டீனா, 2004
28. பீனிக்ஸ் விருது, அமெரிக்கா, 2004
29. குரு மகாத்மியம் விருது , மகாராஷ்டிரா அரசு, இந்தியா, 1997
30. யேல் இறைப்பணி பள்ளி ஆலோசனைக் குழுவில் பரிந்துரைக்கப்பட்டார். அமெரிக்கா, 1990
31. 1986 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி அவர்களால்  யோகா சிரோமணி தலைப்பு (யோகா உச்ச நகை)  வழங்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தினங்கள்

1. அக்டோபர் 23, 2014, செயின்ட் லூயிஸ், அமெரிக்கா
2. ஏப்ரல் 25, 2010, ஹாமில்டன் கௌன்ட்டி , ஓஹியோ, அமெரிக்கா
3. ஏப்ரல், 23. 2010, மில்வாக்கி, அமெரிக்கா
4. ஏப்ரல் 20, 2010, டென்வர், அமெரிக்கா
5. அக்டோபர் 29, 2008, இர்விங், டெக்ஸாஸ், அமெ
6. ஜூலை 4 - 6, 2008, எடிசன், நியூ ஜெர்சி, அமெரிக்கா
7. ஜூலை 29, 2007, கலிபோர்னியா, அமெரிக்கா
8. மார்ச் 28, 2007, வாஷிங்டன் டிசி, ஐக்கிய அமெரிக்கா
9. டிசம்பர் 4, 2006, ரெஜினா, கனடா
10. நவம்பர் 25, 2006, விண்ட்சர், கனடா
11. நவம்பர் 21, 2006, சர்ரே, கனடா
12. நவம்பர் 21, 2006, ரிச்மண்ட், கனடா
13. செப்டம்பர் 13, 2006, ஒட்டாவா, கனடா
14. செப்டம்பர் 10, 2006, ஹாலிஃபேக்ஸ், கனடா
15. செப்டம்பர் 7, 2006, எட்மோண்டன், கனடா
16. ஜூன் 28, 2002 சிகாகோ, இலினொய்ஸ், அமெரிக்கா
17. மே 9, 2002 பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா,  அமெரிக்கா
18. ஏப்ரல் 29, 2002, அட்லாண்டா, ஜார்ஜியா,  அமெரிக்கா
19. ஜனவரி 10, 2002, ஆஸ்டின், அமெரிக்கா
20. ஆகஸ்ட் 26, 2000, வாஷிங்டன் டிசி, அமெரிக்கா
21. ஜூன் 28, 2002, சிகாகோ, இலினொய்ஸ், அமெரிக்கா
22. மே 8, 2002, பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா,  அமெரிக்கா
23. ஏப்ரல் 2002, அட்லாண்டா, ஜார்ஜியா, அமெரிக்கா
24. ஜனவரி 10, 2002 இல், ஆஸ்டின், அமெரிக்கா
25. ஆகஸ்ட் 26, 2000, வாஷிங்டன், அமெரிக்கா

மனித கலாச்சார வாரம்

1. மனித கலாச்சார வாரம், லூசியானா  - பிப்ரவரி 23, 2007
2. மனித கலாச்சார வாரம்,பால்டிமோர்  - மார்ச் 25 - மார்ச் 31, 2007
3. மனித கலாச்சார வாரம் ,கொலம்பியா - மார்ச் 2007 
4. வாழும் கலை துவக்க விழா - சயிரகுசே - மே 7, 2004

மற்ற விருதுகள்

1. சுதந்திர அறக்கட்டளைகளோடு அமெரிக்க சீலும் சிறப்புகளும்,  கலிபோர்னியா, அமெரிக்கா, அக்டோபர் 2013
2. முதல் ஒரு உலக குடும்பம் நாட்கள் 2013 மாநாட்டில், ஒரு உலக குடும்பம் விருது ஸ்டுட்கார்ட், ஜெர்மனி  செப் 13, 2013
3. காந்தி, அரசர் , இகேடா சமூகம், கட்டிடம் கட்டுபவர்கள் பரிசு, மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் சர்வதேச சேப்பல், மோர் ஹவுஸ் கல்லூரி, அட்லாண்டா, அமெரிக்கா, ஏப்ரல் 3, 2013
4. சித்த ஸ்ரீ விருது, பெல்காம், கர்நாடகம், இந்தியா, டிசம்பர் 2, 2012
5. சர் விஸ்வேரய்யா நினைவு விருது, பெங்களூரு, இந்தியா, அக்டோபர் 1, 2012
6. சிவானந்தா உலக அமைதி விருது, சிவானந்த அறக்கட்டளை, தென் ஆப்ரிக்கா, ஆகஸ்ட் 26, 2012
7. வியக்கத்தக்க குடியுரிமை,ரோட்டரி இண்டர்நேஷனல், பெங்களூரு, இந்தியா, மார்ச் 27, 2012
8. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விருது, அல்முஸ்தபா பல்கலைக்கழகம், தில்லி, இந்தியா, மார்ச் 11, 2012
9. க்ரன்ஸ்  மொன்டானா கருத்துக்களம் விருது, ப்ருஸல்ஸ், ஜூன் 24, 2011
10. ஆத்ம ஜோதி விருது, தில்லி, இந்தியா (செப்டம்பர் 23, 2010)
11. இருப்பு கலாச்சார விருது, டிரெஸ்டென், (ஜெர்மனி), அக்டோபர் 10, 2009
12. அமைதி பந்து, அமைதி டோவ்ஸ்,நார்வே, ஜூன் 13, 2009
13. தேசிய படைவீரர் அறக்கட்டளை விருது, அமெரிக்கா, 2007
14. துறவி ஸ்ரீ தியாநேஸ்வரா உலக அமைதி பரிசு, புனே, இந்தியா, ஜனவரி 11, 2007
15. குழந்தைகள் அன்பு சமூகத்தின் , சர்வதேச சமாதான விருது, ஆல்பர்ட்டா ,கனடா  2006
16. தாரா ஷிகோ நல்லிணக்க தேசிய விருது, புது தில்லி, இந்தியா, 2005
17. மஹாவீர் மகாத்மா விருது இந்தியா, 2005