வாழும் கலையின் யோகா (Art of Living Yoga in tamil)

வாழும் கலை யோகா - அழுத்தமில்லா உடல் மற்றும் மனதிற்கான வழி

வாழும் கலை யோகா என்பது யோகாவின் பன்முகத்தன்மையினை மிக எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுகிறது. யோகாவின் அத்தியாவசியமானவைகள், மூச்சின் நுட்பங்கள், யோகாவின் உடல் தோரணைகள், தியானம், ஓய்வளித்தல், யோக அறிவு ஆகிய அனைத்தையும் இணைத்து அளிக்கின்றோம். யோகாவின் இந்த அழகிய அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாம் ஸ்தூல உடல் என்னும் நிலை தாண்டி உணர முடிகின்றது. நம் உணர்திறன் உண்மையிலேயே கூர்மையடைந்து நம் இருப்பின் நுண்ணிய நிலைகளை அறிய முடிகின்றது. வாழும் கலை பயிற்சி ஆரோக்கியம் மற்றும் ஆனந்தமான வாழ்க்கை முறையினை ஏற்படுத்துகின்றது.

வாழும் கலை யோகாவில் எனக்கென இருப்பது என்ன?

வாழும் கலை யோகப் பயிற்சிகள் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களால் உடல் நலன் காப்பதுடன் மனம் மற்றும் ஆன்மாவை பேணிக்காக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆரம்பப் பயிற்சியாளராக இருந்தாலும் சரி, அல்லது யோகப் பயிற்சியில் ஆழ்ந்து செல்லும் விருப்பத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்பவராக இருந்தாலும் சரி உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் வாழும் கலை யோகா திட்டத்தில் காண்பீர்கள். யோகா என்பது உடலை முறுக்கும் தோரணை களை செய்வது மட்டுமல்ல. அது உடல், மனம் மற்றும் மூச்சு ஆகியவை இணைவதை உணரும் நிலையாகும். வாழும் கலை யோகா இந்த அனுபவத்தை உங்களுக்கு அளிக்கின்றது. ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி உடல் , மனம் மற்றும் ஆன்மாவின் நலனை மேம்படுத்த விரும்பும் முது நிலை பயிற்சியாளர் களுக்கும் இது ஏற்றதாகும்.

வாழும் கலை யோகா முதல் நிலை : ஆனந்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கான உங்கள் முதல் படி

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் 10 மணி நேர திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாழும் கலை  யோகா நிலை 1 யோகா கற்பதை விளையாட்டாக வழங்குகின்றது. வேடிக்கை நிறைந்த தயார் படுத்தும் பயிற்சித் தொடர்கள், மிதமான மற்றும் தீவிரமான யோக நிலைகள், புத்துயிரளிக்கும் பிராணாயாமங்கள், வழிகாட்டுதலுடன் கூடிய தியானம், பழமை வாய்ந்த பதஞ்சலி யோக சூத்ரங் களிலிருந்து எளிமையான தேவையான ஞானம், ஆயுவேதத்தின் சிறு கண்ணோட்டம், நம் உடலின் தனிப்பட்ட கட்டமைப்பு பற்றிய அறிவு போன்ற அனைத்தும் கலந்து வழங்கப் படுகின்றது.

தேவைப்படும் முன் நிபந்தனைகள்:

  • எதுவும் இல்லை

 வாழும் கலை யோகா இரண்டாம் நிலை : உடலின் நச்சு மற்றும் மன அழுத்தம் நீக்குதல்

வாழும் கலை யோகா நிலை 2 ல் ஆழ்ந்து செல்ல விரும்பினால், நீங்கள் உடல் மற்றும் மனம் இரண்டும் முழுமையாக தூய்மையடையும் அனுபவத்தை அடைவீர்கள். நீங்கள் மிகவும் லேசாகவும் புத்துணர்ச்சியோடிருப்பதையும் உணர்வீர்கள். மேம்பட்ட யோகா தோரணைகள், மூச்சு நுட்பங்கள், நுண்ணிய நிலையில் பலம் பெறுதல், சிகிச்சை முறைகள் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. வாழும் கலை யோகா இரண்டாம் நிலையின் சிறப்புக்கூறு உடல் நச்சு மற்றும் மன அழுத்தம் நீக்கும் ஒரு சிறந்த வழிமுறை ஆகும். நான்கு நாட்களும் அமைதியான ஆனந்தமான விடுமுறை போன்று அமையும். அடிக்கடி இந்த அனுபவம் பெற நீங்கள் காத்திருப்பீர்கள்.

யோகாவின் ஒரு புது கோணத்தை உணருங்கள்.வெளிப்படையாக உணரக் கூடிய உடல் நலன்களுடன் மனம் மற்றும் ஆன்மாவின் நுண்ணிய பயன்களையும் அனுபவியுங்கள்.உங்கள் அருகாமையில் இருக்கும் வாழும் கலை யோகா திட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

தேவைப்படும் முன் நிபந்தனைகள் : வாழும் கலை யோகா நிலை 1, வாழும் கலை ஆனந்த அனுபவப் பயிற்சி /எஸ் பிளஸ் பயிற்சி.

பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

ஸ்ரீ ஸ்ரீ யோகா தேசீய ஒருங்கிணைப்பாளர்national@srisriyoga.in

இந்தியாவில் ஸ்ரீ ஸ்ரீ யோகா மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

நுட்பங்கள்                                                                                                                               பலன்கள்

  • சக்தி வாய்ந்த யோகா தோரணைகள்
  • மனத்தைத் தூய்மைப்படுத்தும் மூச்சுப் பயிற்சிகள்
  • விழிப்புணர்வோடு யோக தோரணைகள் செய்யும் வழிமுறைகள்
  • வழிகாட்டுதலுடன் கூடிய தியானம்
  • நவீன உலகத்திற்கு ஏற்ற யோக தத்துவம்
  • வாழ்க்கைமுறைக் குறிப்புகள்
  • நுட்பங்கள்
  • பலன்கள்
    • சக்தி வாய்ந்த யோகா தோரணைகள்
    • மனத்தைத் தூய்மைப்படுத்தும் மூச்சுப் பயிற்சிகள்
    • விழிப்புணர்வோடு யோக தோரணைகள் செய்யும் வழிமுறைகள்
    • வழிகாட்டுதலுடன் கூடிய தியானம்
    • நவீன உலகத்திற்கு ஏற்ற யோக தத்துவம்
    • வாழ்க்கைமுறைக் குறிப்புகள்
  • உடலுக்கு

    • உள் உறுப்புகளை பலப்படுத்தி உயிரூட்டுகின்றது
    • நெகிழ்வுத்திறன், உடல் தோரணை, மற்றும் உடல் சீரமைப்பு மேம்படுகிறது.
    • தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையச் செய்கின்றது
    • செரிமானம், சுழற்சி மற்றும் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துகிறது
    • சக்தியை அதிகரிக்கின்றது

    மனதிற்கு

    • உள்ளுணர்வு மேம்படுகிறது
    • அழுத்தம் குறைந்து மனம் அமைதி அடைகின்றது
    • அறிவு கூர்மையாகின்றது
    • ஞாபக சக்தி அதிகரிக்கின்றது
    • தெளிவை அதிகரிக்கின்றது
    • ஒருவரது வாழ்வில் படைப்பாற்றலை மலரச் செய்கின்றது