எங்களது முழுமையான அணுகுமுறை (Our Holistic Approach In tamil)

எவ்வாறு பணி புரிகின்றோம்?

வாழும் கலை , சமூகத்திற்கு ஒரு பார்வையைப் புகட்டி, முன்மாதிரிகளை உருவாக்கி, சமூக உணர்வினைத் தூண்டி, மக்களுக்கு ஓர் குரலைக் கொடுத்து, சமுதாய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

வாழும் கலைத் திட்டங்களின் மேலாண்மை அலகு ஒரு சிறப்பு வாய்ந்த தொழில் நுட்ப அலகு ஆகும். இது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளை செயல் படுத்துகின்றது. பல்வேறு வளம்வழங்குனர்கள் மற்றும் சமூகங்களுக் கிடையே பொது நபராகச் செயல்பட்டு மாற்றத்தினை செயலாக்கம் செய்வதே எங்களது குறிக் கோளாகும். எங்கள் அதிகாரமளித்தல், பொறுப்புடைமை மற்றும் பேண்தகைமை உருப் படிவங்கள் ஆகியவை எங்களது பகிர்ந்த இலக்குகளை நோக்கி ஒரு நீடித்த தாக்கத்தை செயல்படுத்த உதவுகின்றன.

அதிகாரமளிக்கும் உருப்படிவம் :

எங்களது இளைஞர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் பயிற்சி பாதிக்கப் படத்தக்க இளம் ஆண்கள் மற்றும் பெண்களை அவரவர் சமூகத்தில் தலைவர்களாக உருமாற்றம் செய்கின்றது. அவர்கள் மாறுதலை விரும்பும், தங்களுடைய சவால்களைச் சந்திக்கும், உயிர்ப்பான வக்கீல் களாக ஆகின்றனர். நாங்கள் இத்தகைய அதிகாரம் பெற்ற தலைவர்களுடன் இணைந்து அவர்களது சமூகத்தின் வளர்ச்சிக்காக பணி புரிகின்றோம்.

பொறுப்புடைமை உருப்படிவம்

நாங்கள் பணித்திட்டத்தின் முழுமைக் காலத்திலும் திட்டப் பணிகளின் கணக்குகளையும் அறிக்கைகளையும் சரியான கால இடைவெளியில் அளித்து வருகின்றோம். திட்டமிட்ட பணி முடியும் தருவாயில், நிதியானது எங்கே எவ்வாறு செலவழிக்கப் பட்டது என்னும் இறுதியான நிதி நிலைப் பொறுப்புடைமை அறிக்கையையும், அளிக்கின்றோம். மேலும், இத்தருவாயில், திட்டப் பணியிடத்தில் அதன் பயனை தீர்மானிக்கும் வகையில் எங்களது வழிகாட்டலின் தாக்கத்தினை மதிப்பீடு செய்ய ‘தாக்கப் பகுப்பாய்வு அறிக்கை’யையும் அளிக்கின்றோம்.இது எதிர்கால திட்டங்களை வலுப்படுத்தத் தேவையான மேம்பாடுகளை அடையாளம் காண அனுமதிக்கின்றது.

பேண்தகைமை உருப்படிவம்

அதிகாரம் பெற்ற சமூகத் தலைவர்கள் , திட்ட நேரவரையறைகள் முடிந்து அதிக காலம் ஆன பின்னரும் எங்கள் தாக்கம் நிலைத்திருக்க, ஒளிகாட்டும் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.

 
Founded in 1981 by Sri Sri Ravi Shankar,The Art of Living is an educational and humanitarian movement engaged in stress-management and service initiatives.Read More