குறைந்த இரத்தஅழுத்தத்தை  நிவர்த்திக்கும் யோகாசனப்பயிற்சிகள்

யோகாசனப்பயிற்சிகள்  குறைந்த இரத்தஅழுத்தத்தை  நிவர்த்திக்கும்

இரத்ததாழ் அழுத்தம் என்றால் என்ன?

 

இரத்ததாழ்அழுத்தம் அல்லது இரத்தஅழுத்தகுறைவு என்பது ஒரு உடல்நிலை. இந்த நிலையில் இரத்த அழுத்தம் 90/60 mm Hg கும் கீழே இறங்குமாயின் தலைச்சுற்றல்,மயக்கம்,அதிர்ச்சி முதலானஅறிகுறிகள் ஏற்படுகின்றன.

இல்லாவிடின்வைத்தியர்கள் இரத்தஅழுத்தம் குறைவாக இருப்பினும் உடல்நிலைக்கு ஏதும் அபாயம் ஏற்படும் என்று கருதுவதில்லை. சில சமயங்களில் தலைவலி, நெஞ்சுவலி, வலிப்பு,  நீடிக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

இரத்த அழுத்தக் குறைவுக்கு பல காரணங்கள் உண்டு. உடலில் உள்ள இரத்த அளவு, இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள்,  இருதயக்  கோளாறுகள்,  உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில்   (harmone ) ஏற்றத்தாழ்வு ஆகியவை  . இக்காரணங்கள் அதிகரித் தால் உடலில் பிராணவாயு குறைந்து மூளைக்கும் மற்றும் முக்கியாமான உடல் உறுப்புக்களுக்கும் செல்ல வேண்டிய சத்துக்கள் குறைந்து விடுகிறது.

இரத்த அழுத்தக்குறைவு (Hypotension) இரத்த அழுத்த மிகுதியைப்  ( Hyper tension) போல் அபாயகரமானது அல்ல எனினும், சிலவழி முறைகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையாகவும்,  வாழ்வு நெறியில் சிலமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டும் அபாயகரமான நிலையை  எட்டுவதை தவிர்க்கலாம். சரியான பாதுகாப்பு, மருந்துகள் முதலானவை இரத்த அழுத்தத்தை சமநிலைப் படுத்தும்.  வழக்கமாக உடற்பயிற்சி செய்தல், யோகாசனம் செய்தல் முதலானவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த அழுத்தம் கீழே இறங்காமல் பாதுகாக்கிறது. மேலும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும்  சீ ரான உணவை உண்பதால் இரத்த அழுத்தம் மிக விரைவில்  சமநிலைஅடைகிறது.

சில ஆசனமுறைகளும், யோகாசன பிராணாயமா விதிகளும்  குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்காக கீழே பட்டியல் செய்யப்பட்டுள்ளது.

யோகாசனப் பயிற்சிகள் —ஆரோக்கியமான வாழ்கை பயணத்தைத் துவங்கவும்:

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகாசனப் பயிற்சிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

1.  உத்தானாசனா

 

2.  அதோமுகஸ்வானாசனா

 

3.  பவனமுக்தாசனா

 

4.  சிசு ஆசனா

 

5.  ஸர்வாங்காசனா

 

6.  மத்ஸ்யாசனா    

      

1.உத்தானாசனா

 

 

 

இந்த ஆசனம், மூளைப்பகுதிக்கு  இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைச்சுற்றல் ஆயாசம் முதலானவற்றை நிவர்த்தி செய்கிறது.

 

2.அதோமுகஸ்வானாசனா

 

இந்த ஆசனஅப்யாசம் மூளையைஆசுவாசப்படுத்தி களைப்பை நீக்குகிறது.

 

3.பவனமுக்தாசனா

 

இந்த ஆசனப்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரித்து கீழ் பகுதியின் ஆயாசத்தை நீக்குகிறது.

 

4. சிசு  ஆசனா

 

 

இந்த ஆசனம் உடலின் அயர்வுமற்றும் ஆயாசத்தை நீக்கி மூளைக்கு ஓய்வைத் தருகிறது. 

 

5.ஸர்வாங்காசனா

 

இந்த ஆசனம் மூளைப்பகுதியில்  இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயக்கம், ஆயாசம் ஆகியவற்றை நிவர்த்திக்கிறது.

 

6.மத்யாசனா

 

இந்த ஆசனப்பயிற்சி முதுகு, கழுத்துப்பகுதித் தசைகளை நீட்டித்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் முழுவதும் பரவச்செய்து இரத்த  அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

 

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளோர் செய்யவேண்டிய  பிராணாயாம முறைகள்.

 

·        கபாலபாத்தி பிராணாயாமா

·        பஸ்தரிகா பிராணாயாமா

·        சூரியபேதனா பிராணாயாமா

 

கபாலபாத்தி பிராணாயாமா

 

ஆசனம் பயிலும் போது கற்பிக்கப்படும் இந்த மூச்சுவிடும் முறை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அமைதியையும், மனத்தை உற்சாகப்படுத்தும்   தன்மையையும் ஏற்படுத்துகிறது.

 

பஸ்திரிகா பிராணாயாமா

 

இந்தப்பயிற்சி , மூச்சுவிடும் முறை அதாவது மூச்சை உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றை சீராக்குகிறது. மேலும் நம் உடலில் இரத்த ஓட்டத்தில் பிராணவாயுவைப்  போதுமான அளவில் இருத்தி, இரத்தத்தை சுத்தரிக்கிறது. இதனால் உடல்  ஓய்வடைகிறது.

 

சூரியபேதனா பிரணாயாமா

 

இந்தப்பிராணாயாமா பயிற்சி மனதைக் கட்டுப்படுத்தி நம் சுவாச விகிதத்தை (rate of breathing) நிதானப்படுத்துகிறது. பிராணவாயு உட்சென்று, நச்சுக்களை வெளியேற்றி ஒரு நிதானத்துடன் செயல்பட்டு நம் மனதை ஆசுவாசப்படுத்தி நம் தலைப்பகுதியை குளிர்ச்சி அடையச் செய்து தலைச்சுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்தயோகாசனம்  ஸ்ரீ ஸ்ரீ யோகா முறையில் நல்ல பயிற்சி பெற்ற ஆசானிடம் கற்கவேண்டும். இந்த மேம்பட்ட  யோகாசனப் பயிற்சி. ஸ்ரீ ஸ்ரீ  யோகா 2வது நிலை வகுப்பில் கற்பிக்கப்படுகிறது.

 

கீழ் இரத்த அழுத்தம்உள்ளவர்கள் தவிர்க்கவேண்டியவை  கடைப்  பிடிக்க வேண்டியவை:

 

·        திடீர் இயக்கங்கள் (sudden movements) தலைச் சுற்றல், மற்றும் மயக்கம் முதலானவை ஏற்பட ஏதுவாக இருக்கும் ஆதலின் அவைகளைத் தவிர்க்க வேண்டும்.

 

·        யோகாசனம் செய்யும் போது சரியான முறையில் மூச்சுவிடுதல் அவசியம்.

 

·        நிறைய தண்ணீர் அருந்துதல், மது உட்கொள்ளாதிருத்தல் அவசியம்

 

·        உப்பு மற்றும் காபியில் உள்ள“காபின்”(coffine) இரண்டையும் சற்று அதிகப்படியாகவே சேர்த்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக் கின்றனர்.

யோகாசனம்  என்பது  பண்டைகாலத்து அறிவியல் ஆகும். அந்த அறிவியலானது பல தோரணைகள் (postures), பிராணாயமப் பயிற்சிகள்  தியானம் முதலியவற்றால் உடல்நிலையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. மனத்தை நிம்மதியாகவும் உடலை மிருதுவாகவும் வைத்து சொந்த வாழ்க்கையில் உற்சாகத்துடனும் தொழில் முறையில் புதுத்தெம்புடனும் திகழ ஊக்கம் அளிக்கிறது.

 

ஆகவே பாயை விரித்து யோகாசனத்தில் உடனடியாக ஈடுபடுங்கள்! இரத்த அழுத்தம் குறைவதை விரட்டி அடியுங்கள்!

 

யோகசனத்தால் மேற்கூறிய படி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியுமானாலும் அதுவே மருந்தாக மாறமுடியாது. யோகாசனஅப்யாசங்களை  ஸ்ரீ ஸ்ரீ யோகாப்யாசத்தில் நல்ல பயிற்சிப் பெற்ற ஆசிரியரிடம் கற்பது அவசியம். ஏதாயினும் உடல் உபாதை இருப்பின் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பின்  ஸ்ரீ ஸ்ரீ  யோகாசன ஆசரியரிடம் யோக பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தங்கள் இருப்பிடத்திற்கு  அருகில் உள்ள வாழும் காலை மையத்துடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டிய தகவலை பெறவும்.

info@srisriyoga.in : என்பதுஎங்கள்“இணையதள” முகவரி.