கர்ப்பிணிப் பெண்களுக்கு தியானம் (Meditation for pregnancy in tamil)

கர்ப்பம் உற்சாகத்தையும், அதே போல் உடல் மற்றும் மனதில் மாற்றங்களையும் எடுத்து வருகின்றது.இந்த அழகான காலத்தை மேலும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க இதோ சில குறிப்புகள்:

நல்ல செய்தி: நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள் உற்சாகமாகவும் கூட! ஓர் புதிய உயிர் உங்களுள் மலர்வதை அறியும் உணர்வு விவரிக்க முடியாத ஒன்றாகும்.இது மிக்க மகிழ்ச்சி யுடன் ஓர் இளம் உயிரை உங்கள் வாழ்வில் வரவேற்க வேண்டிய காலம் இது. உடல் மனம், மற்றும் உணர்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்படும் காலம் இது. ஒவ்வொரு வாரமும் உங்கள் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது.அது உருவமடைவதை உணர்தல் ஓர் வேடிக்கையான விஷயமாகும்.

அதே சமயம் ஒவ்வொரு வாரமும் உங்களிடமும் புதிய வளர்சிகளைக் காண்கின்றீர்கள், சில சுவாரஸ்யமானவை, சில சிரமமானவை.

அனைத்து மாற்றங்களையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால என்ன? இந்த கால கட்டத்தினை அதிக அளவு அனுபவித்தால் என்ன?ஆம், சில நிமிஷ நேரம் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தால் இது சாத்தியம்தான். எளிதானதும் கூட. கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு மூன்று மாதங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களில் சிறந்து வாழ்வதற்கு இதோ சில குறிப்புக்கள்.

முதல் மூன்று மாதங்கள்

உங்களுக்கு என்ன நிகழ்கின்றது?

உடலில் ஹார்மோன்களின் மாற்றம் நிகழ்கின்றது.மசக்கை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், சில சமயங்களில் மயக்கம் இவை ஏற்படலாம். நீங்கள் மிக விரும்பிய உணவு வகைகளின் மீது வெறுப்புக் கூட ஏற்படலாம்.

எமது குறிப்பு:

இந்த நேரத்தில் தியானம் மிகவும் உதவும். அது ஆற்றுப் படுத்தும்.முக்கியமாக தலை சுற்றல் மற்றும் ஆற்றல் குறைந்த நிலை ஏற்படும்போது,ப்ராணா என்னும் உயிர் சக்தியின் அளவினை அதிகப் படுத்துகிறது. இதே சமயத்தில்தான் உங்கள் கருவின் வளர்ச்சிக்கு உதவ, உங்கள் உடலில் அதிக ஆற்றல் தேவைப் படுகிறது.தியானம் இயக்கியாக ஆற்றலை அளிக்கிறது.

மேலும் நீங்கள் தியானம் செய்யும்போது உங்கள் உடல் தானாகவே உயிர் மேம்படுத்தும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்கிறது. அன்றாட தியானம் மூலம் காலப் போக்கில் நீங்களே ஆரோக்கியமற்ற சத்தில்லாத உணவு வகைகளின் மீது விருப்பக் குறைவு ஏற்படுவதைக் காண்பீர்கள். இது உங்கள் குழந்தைக்கு நல்லது.

தினமும் தியானப் பயிற்சி செய்யும் மேகனா கல்தா  " என் கர்ப்ப காலம் முழுவதிலும் யோகாவும் தியானமும் மிகவும் பயனுள்ள கருவிகளாக இருந்து உதவின. இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு விதமான ஏக்கங்கள் ஏற்படக் கூடும். ஆனால் நான் பழங்கள், - ஆரஞ்சு, மாம்பழம் -மற்றும் பிற ஆரோக்கிய உணவின் மீதே விருப்பம் கொண்டேன். சிப்ஸ் போன்ற பொரித்த உணவுகளை என் உடல் ஏற்றுக் கொள்ள வில்லை" என்று கூறுகிறார்.

உங்கள் குழந்தைக்கு என்ன நிகழ்கின்றது?

கரு மிக மெதுவாக வளர்கின்றது. மயிர், நகங்கள், கண்கள், காதுகள், குரல்வளை,தசை போன்றவை உருப்பெறுகின்றன.

எங்கள் குறிப்பு:

கருவின் காதுகள் உருவாகும்போது, நல்ல பண்ணிசைப்பினையும், வீணை போன்ற மெல்லிய இசையையும்,இனிமையான திரைப்படங்களையும் கவனியுங்கள். இவையனைத்தும் குழந்தையின் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

முதல் இரண்டு மூன்று மாத காலத்தில்,நீங்கள் சில யோகப் பயிற்சிகளையும் செய்யலாம். கர்ப்ப கால அறிகுறிகளைச் சமாளிக்க அவை உதவும். எளிதான பிரசவத்திற்கும் உதவும். பூனை ஆசனம்,போன்ற சில ஆசான்களை ( கர்ப்ப காலத்தில் யோகா ஆசனங்கள் என்னும் பகுதியினைப் பாருங்கள்) ஆயினும் இந்த ஆசனங்களைச் செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.

உணவுக் குறிப்புக்கள்:

முதல் மாதம்குளிர்ந்த பால், அருந்துங்கள். புளிப்பும் காரமும் மிகுந்த உணவினைத் தவிர்த்து விடுங்கள்.எளிதாக சீரணிக்கும் உணவு வகைகளையே உட்கொள்ளுங்கள்.மலச் சிக்கல் ஏற்பட்டால், ஆயுர்வேத மருந்தான மிருது அனுலோமம் அல்லது மத்ரவஸ்தி எடுக்கலாம்.

இவற்றை எடுக்கும் முன்னர் ஓர் ஆயுர்வத மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

இரண்டாவது மாதம்சத்தான உணவினை ஒரு நாளில் குறைந்த இடைவேளையில், குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.பழ ரசத்தைத் தவிர்த்து விடலாம்.பால், சாதம், இளநீர், அரிசிக் கஞ்சித் தண்ணீர்,கீர், வெண்ணை ஆகிவை நல்லவை.

மூன்றாம் மாதம்பாலேடு, தென், மற்றும் நெய் ஆகியன

இரண்டாம் மூன்று மாத காலம்

ஆரோக்கியமான கர்ப்ப கால தியானம்

  • தினமும் ஒரு நேரத்தை வரையறுத்துக் கொள்ளுங்கள் ஒரே குறிப்பிட்ட நேரம் என்றால் மேம்பட்ட பலன்கள் கிடைக்கும். மதிய உணவிற்கு முன்னால், அல்லது மாலை நேரம்.
  • தொந்தரவற்ற நிசப்தமான இடத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  • சற்றுப் பதட்டமாகவோ, அல்லது மன நிலை மாற்றத்தை உணர்ந்தாலோ சில நிமிஷ தியானம் பெரிதும் மனதை அமைதிப் படுத்த உதவும்.
  • இசையினைக் கேட்கும் போதோ பண்ணிசைக்கும்போதோ கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்போதெல்லாம் தியானம் தானாகவே நிகழும்.

உங்களுக்கு என்ன நிகழ்கின்றது?

இப்போது குழந்தை சற்றே அசையத் துவங்குகின்றது. உங்களுள்ளே பட்டாம்பூச்சி பறப்பது போன்று உணர்வீர்கள். ஹார்மோன்களின் மாற்றத்தால், பல மனப் பதட்டங்களும் மன நிலை மாற்றங்களும் ஏற்படுவதையும் உணர்வீர்கள்.

எங்கள் குறிப்பு: மன நிலை மாற்றங்கள் ஏற்படும் இக்காலத்தில், உங்கள் கணவரையும் உங்களது மாற்றங்களை பொறுமையுடன் ஏற்பவராக மாற்ற வேண்டும்.ஆகவே இருவரும் இணைந்து தினமும் சில நிமிஷங்கள் தியானம் செய்வது நல்லது.அது உங்களிருவருக்கும் சாந்தத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, உங்கள் கர்ப்ப கால மனமாற்றங்களுக்கு நீங்கள் இரையாவதைத் தடுக்கும்.

உங்கள் குழந்தைக்கு என்ன நிகழ்கின்றது?

அதன் உணர்வுகள் வளர்கின்றன.அதற்கு கருப்பைக்குள் விக்கல், கொட்டாவி போன்றவை கூட ஏற்படலாம்!

எங்கள் குறிப்பு:

உங்கள் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் உங்கள் குழந்தை உணர்ந்து கொள்ளக் கூடும் என்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக தளர்வாக சாந்தமாக இருப்பது மிக முக்கியம். இந்த அதிர்வுணர்வுகளை அது சுலபமாக ஏற்றுக்கொள்ளும். சஹஜ் சமாதி தியானம் இந்த கால கட்டத்தில் உங்களுக்கும் உங்களுக்குள்ளே இருக்கும் சிசுவிற்கும் மிக நல்லது. உண்மையில் கர்ப்ப காலம் முழுவதும் ஓர் நாளில் மூன்று அல்லது நான்கு முறை கூட சஹஜ் மந்திரத்துடன் தியானம் செய்யலாம்.

மூன்றாவது மூன்று மாதங்கள்

உங்களுக்கு என்ன நிகழ்கின்றது?

பிரசவத்திற்கு முன்னதான காலம், மிகவும் சவாலான காலமும் கூட. இப்போது சற்று அசௌகரியமாக உணருவீர்கள். ஏனெனில் நீங்கள் குண்டாகி விடுவீர்கள். அதிக எடை கூடுதலாலும், குழந்தை பிரசவத்திற்குத் தயார் நிலைக்கு வருவதாலும், இடுப்புப் பகுதியில் மற்றும் அந்தரங்கப் பகுதிஎலும்பில் ஓர் நீட்டுதல் உணர்வினை பெறுவீர்கள்.முதுகும் வலிக்கும். நன்கு நடமாடுதல் சற்று சிரமமாக இருக்கும்.

எங்கள் குறிப்பு:

தியானம் உங்கள் மனதைத் தளர்த்தும். உணர்ச்சிகளை கையாள உதவும். உடலையும் இக இது நன்றாகத் தளர்த்தும். முதுகெலும்பில் உள்ள அழுத்தத்தை நன்கு விளக்கி, உங்கள் கர்ப்ப காலத்தின் கடைசிப் பகுதியில், நீங்கள் வசதியாக உணருவீர்கள். பிரசவம் நிகழும்போதும், நீங்கள் , பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அளித்துள்ள தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சியான சுதர்சனக் க்ரியா செய்யலாம். இது பிரசவத்தினை எளிதாக்கி, குழந்தை மற்றும் தாய்க்கு மிக்க பலனளிக்கும்.

பிரசவ தேதி நெருங்கும்போது உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்போருக்கும் ஓர் பரபரப்பு ஏற்படும்.புதிய வரவினைப் பற்றி குடும்பமே உற்சாகத்துடன் காத்திருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் மீறி சற்று பதட்டமும் அழுத்தமும் உள்நுழையக் கூடும். இப்போதும் தியானம் மிக உதவும். குடும்பத்தினர் அனைவரும் குழுவாகத் தியானம் செய்யலாம். இது மிக்க பயனுள்ளதாக இருக்கும். அனைவரையும் இது மகிழ்வுடனும் இளைப்பாறி இருக்க வைக்கும்.அதே சமயம் அனைவரும் எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் பற்றிய எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பார்கள்.

கர்ப்பிணிகளுக்கான சமையல் குறிப்பு

கர்ப்ப மற்றும் பாலூட்டும் தாய்களுக்கான குறிப்பு

அத்திபழம் - 250 கிராம்
வாதுமைப் பழம் - 250 கிராம்
கருப்பு பேரீச்சம் பழம் - 250 கிராம்
பாதாம் - 100 கிராம்
பிஸ்தா (உப்பில்லாதது ) - 100 கிராம்
வெள்ளரி விதை - 100 கிராம்
சூரியகாந்தி விதைகள் - 100 கிராம்
பூசணி விதைகள் - 100 கிராம்
முலாம்பழம் விதைகள் - 100 கிராம்
வாதுமை கொட்டை வகை - 100 கிராம்
சிறோஞ்சி - 50 கிராம்
ஜாதிக்காய், - 3 இலை
ஏலக்காய் - 25 கிராம்
குங்குமப்பூ - 2 சிட்டிகை

மேக்கண்ட பழங்களையும் கொட்டைகளையும் பொடிபொடியாக நறுக்கி அனைத்தையும் நன்றாக மாவு போலப் பிசைந்து கொள்ளுங்கள்.அதை ஓர் தட்டில் பரப்பி, சதுரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் காலையும் ஓர் துண்டினை இளம் சூடான பாலுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

 

இது சஹஜ் சமாதி ஆசிரியரான பாரதி ஹரீஷ் மற்றும் ஆயுர்வேத வல்லுனரான வித்யா ஆகியோரின் குறிப்புக்களை உள்ளடக்கி பிரித்திகா நாயரால் எழுதப் பட்டது.

சமையல் குறிப்பு: ஆயுர்வேத உணவு வல்லுனரான கௌஷானி தேசாய்

பட விரைவு: வர்ஷா சக்சேனா