ஆழ்ந்த தியான நிலைக்குச் செல்ல ஆறு குறிப்புகள் (Deep meditation in tamil)

நீங்கள் சீராக தியானம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் சில நேரங்களில் தியானத்தில் அமரும்போது, எண்ணங்களின் உலகிலிருந்து உங்கள் மனம் விடுமுறை எடுத்துக் கொள்வதைக் கவனித்திருக்கின்றீர்களா? ஆழ்ந்த அனுபவங்களை அடைய ஏணிப்படிகளில் ஏறுவதற்கு விரும்பினால், எவ்வாறு தியானம் செய்வது என்பதைக் கற்றுக் கொள்வது முதற்படி. சில குறிப்புக்களை பின்பற்றுவது இந்த திசையில் நீங்கள் செல்ல மிகவும் உதவும்.

தியானம் ஆழமாக சென்று 6 படிகள் :

  • மற்றொரு முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்துங்கள் | Bring a smile to the face.
  • நிசப்தத்தின் சப்தத்தினை அனுபவியுங்கள் | Experience the sound of silence
  • உங்கள் உடலுக்கு சில யோகா வளைவுகள் மூலம் சலுகை காட்டுங்கள் | Pamper Your Body With Some Yoga Twists
  • உங்கள் உணவின் மீது கவனம் வையுங்கள் | Keep A Watch Over Your Food
  • உங்களுக்கே பாடிக் கொள்ளுங்கள் | Sing To Yourself
  • அன்றாட தியான நேரத்தைப் பதிவு செய்யுங்கள் | Book Your Daily
  • Meditation Time
1

மற்றொரு முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்துங்கள் :

ஒருவருக்கு உதவி செய்யும்போது எவ்வாறு உணருகிறீர்கள்? மகிழ்ச்சியாக? திருப்தியாக? ஒரு நேர்மறையான ஆற்றல் வெடித்தெழுந்து உங்களில் ஏதோ ஒன்று விரிவடைவதை உணர்கின்றீர்களா? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், நீங்கள் உங்கள் தொண்டின் மூலம் மற்றொரு முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள். நேர்மறை அதிர்வுகள், ஆசிகள் உங்களை வந்தடைகின்றன. தொண்டு சிறப்பினைத் தருகின்றது இந்தச் சிறப்பானது தியானத்தின்போது நீங்கள் ஆழ்ந்த அனுபவங்களை அடைய அனுமதிக்கின்றது.

"நான் தொண்டில் ஈடுபடும்போது, நான் நேரிடையாகப் பயன் பெறுகின்றேன். நல்ல திருப்தியுணர்வு, என்னை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைக்கின்றது. நான் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்போது நிச்சயம் ஆழ்ந்த தியானம் நிகழ்கின்றது" என்று பகிர்ந்து கொள்கின்றார் ஷில்பி மதன்.

 

2

நிசப்தத்தின் சப்தத்தினை அனுபவியுங்கள்:

அதிகாலை வேளையில் மொட்டை மாடியில், சிவந்த வானம், சூரியோதயம் இவற்றின் அழகில் மெய்மறந்து நிற்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இயற்கையழகில் ஒன்றிணைந்து ஆழ்ந்த நிசப்தத்தினை உணருகிறீர்களா? உங்கள் மனம் மிக அமைதியாகவும் நிறைவுடனும் இருக்கின்றது. ஏன் என்று அதிசயித்திருக்கின்றீர்களா? நிசப்தத்தில் மிகச் சில எண்ணங்களே எழுகின்றன, உங்கள் மனம் நிறைவாக இருக்கின்றது.

பெரும்பாலான நேரங்களில் நாம் சலசல என்று பேசிக் கொண்டிருக்கும்போது, நமது மனமும் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறது. நமது புலன்கள் செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றன. நம்மைப் பல எண்ணங்கள், நினைவுப் பதிவுகள் ஆகியவை தாக்குகின்றன.

மௌனம் தியானத்திற்குத் துணை செய்கின்றது. நீங்கள் மௌனமாக இருக்கும்போது, உங்கள் மனம் மெதுவாக இயங்கி, உங்களை எளிதாகத் தியானத்திற்கு அழைத்துச் செல்கின்றது. மௌனமும் தியானமும் சேர்ந்து அனுபவிக்க வாழும் கலையின் இரண்டாம் நிலைப் பயிற்சியினை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒவ்வொரு வார இறுதியிலும் பெங்களூருவில் உள்ள வாழும்கலையின் சர்வ தேச மையத்தில் நடை பெறுகின்றது.

 

"சில சமயங்களில் முடிவில்லா எண்ணத் தொடர்களினால் நான் கட்டுண்டு விடுகிறேன். மௌனமாக இருப்பது படிப்படியாக இந்த எண்ணத் தாக்குதலைக் குறைக்கிறது. ஆழ்ந்த தியானத்தினை அனுபவிக்க முடிகிறது." என்று பகிர்ந்து கொள்கின்றார் ஹிதன்ஷி சச்தேவ்.

 
3

உங்கள் உடலுக்கு சில யோகா வளைவுகள் மூலம் சலுகை காட்டுங்கள்:

சில நாட்களில் உங்கள் தியானத்தின் போது, அமைதியின்றி ஆழ்ந்து செல்ல முடியாமல் போனதை கவனித்திருக்கிறீர்களா? இது ஏனெனில், நீண்ட பணி நேரம், உடலில் விரைப்பான நிலையை ஏற்படுத்தி, அதனால் வலிகளும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. சில யோகாசனங்கள் செய்வதன் மூலம் இந்த விறைப்புத் தன்மையிலிருந்து மற்றும் ஓய்வற்ற நிலையிலிருந்து வெளி வரலாம். இதனால் உங்கள் மனம் நிறைவடைந்து தியானத்தில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற அனுமதிக்கும்.

 
4

உங்கள் உணவின் மீது கவனம் வையுங்கள்:

எண்ணெய் நிறைந்த, பொரித்த உணவு, அசைவ உணவு இவற்றை உட்கொண்ட நாட்களில் உங்கள் தியானம் எவ்வாறு இருந்தது என்று எண்ணிப் பாருங்கள். வித்தியாசத்தை அறிகின்றீர்களா? ஏனெனில், உங்கள் உணவு உங்கள் மன நிலையுடன் நேரிடையாக சம்பந்தப் பட்டது. தியானம் செய்பவரின் உணவில் தானியங்கள், பச்சைக் காய்கள், புதிய பழங்கள், சாலடுகள், சூப்புகள் ஆகியவை இடம் பெற வேண்டும். மிக எளிதாக ஜீரணிக்கக் கூடிய அதிக ' ப்ராணா ' நிறைந்த உணவாக இருக்க வேண்டும்.

 
5

உங்களுக்கே பாடிக் கொள்ளுங்கள்:

வித்தியாசமான இசை வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை தூண்டுவதைக் கவனித்திருக்கிறீர்களா? நாம் 90% வெற்றிடத்தாலேயே ஆக்கப் பட்டிருக்கிறோம். எனவே ஒலி நம் மீது ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சத்சங்கத்தில் பாடுவது உணர்ச்சிகளைத் தூய்மைப் படுத்தி, உங்களுக்கு விரிவாக்கப் பட்ட ஓர் உணர்வினை ஏற்படுத்துகின்றது. எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் சிறிய மனம் தியானத்தில் மௌனப் படுத்தப் படுகின்றது. ஆழ்ந்த அனுபவத்தினை பெறுகின்றீர்கள்.

 
6

அன்றாட தியான நேரத்தைப் பதிவு செய்யுங்கள்:

ஒழுங்கு மற்றும் பயிற்சிக்கு மரியாதை ஆகிய இரண்டும் தியானத்தில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற உதவும் இரு திறவுகோல்கள் ஆகும். தினந்தோறும் தியான நேரத்தை நிச்சயப் படுத்தி, அதில் ஆழ்ந்து செல்லும் மாயத்தை அனுபவியுங்கள்.

“முன்பெல்லாம், நான் ஒரு நாளின் வெவ்வேறு சமயங்களில் தியானம் செய்தேன். கடந்த சில மாதங்களாக தினமும் மதிய உணவிற்கு முன்னர் தியானம் செய்கின்றேன். குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தினமும் தியானம் செய்வதால் மேம்பட்ட ஆழ்ந்த தியானத்தை அனுபவிக்கின்றேன்" என்று பகிர்ந்து கொள்கின்றார், திவ்யா சச்தேவ்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான ஞான உரைகளின் தூண்டுதலால், . திவ்யா சச்தேவ் எழுதிய இத்தொகுப்பு, பிரியதர்சினி ஹரிராம் என்னும் சஹாஜ் சமாதி ஆசிரியரின் கருத்துக்களையும் உள்ளடக்கியது.