கிராமப்புற மேம்பாடு (Rural development in tamil)

வாழும் கலையின் கிராமப் புற மேம்பாட்டு திட்டங்களை பெரும்பலாக யுவாச்சாரியார்களே ஏற்று நடத்தி வருகிறார்கள். கிராம உள்ளுர் சமூகங்களிலிருந்து "இளைஞர் தலைமைத்துவப் பயிற்சி(YLTP)" மேற்கொண்டவர்களே யுவாச்சாரியார்கள் எனப்படுவர். இப்பயிற்சியின் வாயிலாக அவர்களின் திறன், செயல் நோக்கம், தன்முனைப்பாற்றல், உந்துகைத்திறன் மற்றும் அவர்களின் ஆற்றல் மேம்பாட்டு, அவர்களின் கிராம வட்டாரங்களின் தேவைக்கேற்ப சேவைத் திட்டங்களைத் துவக்கி வழிநடத்த உதவுகிறது.

வலுவான ஆன்மீக அடித்தளமே ஒரு மனிதனுக்கு அசைக்க முடியாத சுய மரியாதையையும் தன்னம்பிக்கையையும் நிறுவ வழி வகுக்கிறது. தனிப்பட்ட உள் வலிமை, திறன்கள் மற்றும் தலைமைப் பயிற்சியின் கலவையே இத்திட்டத்தின் நீண்டகால திறன் மற்றும் மேதகைமைக்கு உறுதுணையாக இருக்கிறது.

5H திட்டங்கள் (வீடற்றவர்களுக்கு வீடு, உடல்நலம், சுகாதாரம், மனித விழுமியம் மற்றும் வேற்றுமை யில் ஒற்றுமை காணும் திட்டம் ) அனைத்து கிராமங்களையும் சென்றடைய உறுதி செய்யப்படுகிறது. மேலும் இத்திட்டம் உலகம் முழுவதிலும் உள்ள கிராம மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து வறுமை, துயர், நோய் போன்றவற்றை ஒழித்து அமைதியை நிலை நாட்டுவதையே குறிக்கோளாக வைத்து செயல்பட்டுவருகிறது.

அடிமட்டத்திலிருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கும் தனி நபர்களும், சமூகங்களும், இத் திட்டத்தின் மூலம் சமூக மற்றும் பொருளாதார அளவில் சுயமாக இயங்குவதற்கான அடித்தளமாக அமைகிறது. மேலும் இத்திட்டம், மேற்கூறியனவற்றை அவர்களிடம் நீண்ட காலம் தக்க வைக்க உதவுகிறது.

5 H திட்டத்தின் சாதனைகள்

  • 40,212 கிராமங்களைச் சென்றடைந்துள்ளது
  • 110,000 கிராமப்புற இளைஞர்களுக்கு இளைஞர் தலைமைத்துவப் பயிற்சி(YLTP)அளிக்கப் பட்டுள்ளது
  • 165,000 மன அழுத்த நிவாரணப் பட்டறை பயிற்சிகளின் மூலம் 5,688,000 பயனாளி களைக் கண்டுள்ளது
  • 49,500 சுகாதார முகாம்கள் மற்றும் 25,950 மருத்துவ முகாம்களின் மூலம் 2,582,500 மக்கள் பயனடைந்துள்ளனர்.
  • நூறாயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன
  • 55 மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் 115,000 மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்
  • இயற்கை வேளாண்மைப் பயிற்சி 600க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது

ரக மின்மயமாக்கல்:இல்லந்தோறும் ஒளியேற்றுதல்

இல்லந்தோறும் ஒளியேற்றுதல் திட்டத்திற்கான அடித்தளம், 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 74 ஆயிரம் கிராமங்களைச்சேர்ந்த மூன்று லட்சத்து அறுபதாயிரம் மக்களுக்கு சுத்தமான மற்றும் மலிவான மின் விளக்குகளைக் கொண்டு சேர்ப்பதையே மையமாகக் கொண்டது இவ்வியக்கம். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்ணெண்ணை மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் இதர எரிபொருட்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை இல்லந்தோறும் ஒளியேற்றுதல் திட்டத்தின் வாயிலாக பீஹார், உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த 1,100 இல்லங்கள் சூரிய ஒளி விளக்குகளைப் பெற்று 6000 மக்கள் பயன் அடைந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டுக்குள் 1,00,000 மின்சாரமற்ற இல்லங்களுக்குச் சென்றடைவதே இட்த்திட்டத்தின் நோக்கமாகும்.

இயற்கை வேளாண்மை (Organic Farming)

2007 ஆம் ஆண்டு முதல், வாழும் கலை அமைப்பு, இரசாயனமற்ற விவசாய முறை களைப் பட்டறைப் பயிற்சிகளாக வழங்கி வருகிறது. இதன் மூலம் 32,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையின் உத்திகள், இரசாயன உரங்களின் மூலம் விளை  நிலங்களுக்கு வரும் சீர்கேடுகள், இரசாயன உரங்களை உபயோகப்படுத்துவதால் படிப்படியாகக் குறையும் மகசூல் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இப்பயிற்சியின் மூலம் விவசாயிகளுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாற்றத்திற்கான புரட்சியில் இணைந்திடுவீர்

  • இந்த சமூகத்திற்காகப் பொறுப்பேற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ?
  • நீங்கள் விரும்புகின்ற மாற்றத்தைக் காண விழைகிறீர்களா ?
  • தலைவர்களைக் கொண்ட குழுவினை உருவாக்க நீங்கள் தயாரா?

எங்கள் குடும்பத்தில் இணையுங்கள் . YLTP ஒருங்கிணைப்பாளரை அணுகுங்கள்.

நைரோபியா குழந்தைகளுக்குக் கை கொடுப்போம்

இத்திட்டத்தின் கீழ், கென்யா நாட்டுக் குழந்தைகளுக்கு மனம் மற்றும் உணர்ச்சிகளைக் கையாளும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு, வறுமையை ஒழிக்கவும், ஆரோக்கிய மான சுற்றுசூழலை உருவாக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

வாழும் கலை அமைப்பில் இயங்கும் பல திட்டங்களில் ஒன்றான, "குழந்தைகளுக்குக் கை கொடுக்கும் திட்டம் " , நைரோபி குழந்தைகளுக்கான கார்டேன் ஹோம் & ஸ்கூல் உடன் இணைந்து செயல்படுகிறது.