அடிமட்டத்திலிருந்து பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி

மன, சமூக மற்றும் பொருளாதார தளங்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல்
icon

சவால்கள்

சமூகத்தின் பழமைவாத உளநிலையினால் தூண்டப்பட்ட பாலின சமத்துவமின்மை

icon

உத்தி

கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள பெருந்திரளான மக்களுக்கு எழுச்சியூட்டுதல், பெண்களுக்குத் திறன் பயிற்சி அளித்தல்

icon

விழிப்புணர்வு

1,11,000+ பெண்கள் தொழிற்திறன் பயிற்சி பெற்றுள்ளார்கள்

விரைவுப்பார்வை

இந்தியாவில் பெண்குழந்தைகள் பெரும்பாலும் ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். இது பாலின அடிப்படையில் கருக்கலைப்பு, குழந்தை திருமணம் போன்ற வெறுக்கத் தக்க நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது.

திருமணத்துக்குப் பின் இல்லத்தலைவியாகத்தான் இருக்கப்போகிறாள் என்று கருதுவதால், பெண்குழந்தையின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. இதனால், பொருளாதரத்தில் பங்கெடுக்க விரும்பும் பெண்களுக்கு திறன்களை வளர்த்துக்கொள்வதில் நிறைய சவால்கள் எழுகின்றன. விளைவாக, குறுந்தொழில் மூதலீட்டுக்கு பணம் கிடைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்து, அவர்களின் தற்சார்ப்புக்கு வழிவகுப்பதில் வாழும் கலை ஆர்வம் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு அதிகாரமளிக்க நாங்கள் பன்முக அணுகுமுறையை கையாள்கிறோம்.

எங்கள் அணுமுறை கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது:
பெண்களுக்கு திறன் பயிற்சி, பாலின சமத்துவம் குறித்து சமூகங்களுக்கு விழுப்புணர்வு கல்வி, பெண்களுக்கு மேம்பட்ட சுகாதாரச் சேவைகள் கிடைக்கச்செய்தல், அவர்கள் ஒன்றாக சேர்ந்து பணி செய்யவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் தளங்களை ஏற்படுத்திக்கொடுத்தல். இறுதியாக, மன அழுத்தத்தை குறைக்கவும், தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் தேவையான நுட்பங்களையும், கருவிகளையும் நாங்கள் பெண்களுக்கு அளிக்கிறோம்.

சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால், ஒரு சமூகம் வலுவாகவும், ஒத்திசைவுடனும் இருக்கிறதா இல்லையா என்பதை அதுவே தீர்மானிக்கிறது. பெண்களே சமூகத்தின் முதுகெலும்பு.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

உத்தி

எங்கள் உத்தி கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது:

தொழிற்பயிற்சி அளித்தல்: கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்பு பெற சணல் பைகள் தயாரிப்புக்கு வெட்டுதல், தைத்தல், எம்ப்ராய்டரி, மணிவேலை ஆகியவற்றிலும், ஊதுபத்தி தயாரிப்பிலும் அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.

சமூகக்குழுக்களுக்கு விழிப்புணர்வளித்தல்: இந்தியாவில் பாலின தேர்வுக்கும், பெண் கருக்கொலைக்கும் எதிராக விழிப்புணர்வை கொண்டுவர, தி கேர்ள் சைல்ட் கேம்பைன் (The Girl Child Campaign) 2013 மற்றும் தி ஆக்ட் நௌ கேம்பைன் (The Act Now Campaign) 2014, ஆகியப் பிரச்சாரங்களை மேற்கொண்டோம்.

தனிநபரை வலுப்படுத்துதல்: மன அழுத்தத்தை குறைப்பதற்கான நுட்பங்களை நாங்கள் பெண்களுக்கு கற்றுத்தருகிறோம். இவை அவர்களை உள்ளிருந்து வலுப்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த உதவுகிறது.

ஒரு ஆதரவான சமூககுழுமத்தை கட்டமைத்தல்: தனியொருவராக இல்லாமல், ஒரு குழுவாக சேர்ந்து சவால்களை எதிர்கொள்ள, சமூகமனப்பாங்கை வளர்த்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம். பெண்கள் தம்மிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சேர்ந்து பணி செய்யவும் உதவும் தளங்களை அமைத்துத் தந்து, அவர்கள் குரலை மேலும் வலுப்படுத்த உதவுகிறோம்

சுகாதர வசதிகள் கிடைக்கும்படி செய்தல்: நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்கிறோம்.

தாக்கம்

10 லட்சத்திற்கும் மேல்

நபர்கள்

பெண்குழந்தையை காக்க உறுதியெடுத்திருக்கிறார்கள்

2,00,000+

வளரிளம் பெண்கள்

மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி பெற்றிருக்கிறார்கள்

1 லட்சத்திற்கும் மேல்

மக்கள் பாலின சோதனைக்கெதிரான

விழிப்புணர்வை பெற்றிருக்கிறார்கள்

623+

சுய உதவிக் குழுக்கள்

அமைக்கப்பட்டுள்ளன

1.50 லட்சம்

மக்கள் பிகாரில்

குழந்தை திருமணத்திற்கெதிரான விழிப்புணர்வை பெற்றிருக்கிறார்கள்

1,10,000+

புகையா அடுப்புகள்

62 பெண் சுய தொழில்முனைவோரால் அளிக்கப்பட்டிருக்கின்றன

1,11,000+

கிராமப்புறப் பெண்கள்

தொழிற்பயிற்சி பெற்றிருக்கிறார்கள்

தொடர்ந்து

மருத்துவ முகாம்கள்

ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகாச்சியில் மருத்துவ தொடர்ந்து நடத்தப்படுகின்றன