சுதர்சனக்ரியா என்றால் என்ன? (Sudarshan Kriya in tamil)

சுதர்சனக் கிரியா என்பது ஒரு இரகசியம்!

சுவாசம் என்பதே வாழ்க்கையின் முதல் செயலாக உள்ளது. மூச்சுக்குள்ளேயே வாழ்க்கையின் கண்டுபிடிக்கப்படாத இரகசியம் உள்ளது. சுதர்சனக் கிரியா ஒரு சக்திவாய்ந்த, எளிமையான தாள இசைவுடன் கூடிய மூச்சுப் பயிற்சியாகும். உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தும் தனித்துவம் பொருந்திய இயற்கையான தாள இசைவுடன் கூடிய சுவாசத்தின் ஒத்திசைவாக இது திகழ்கிறது.

இந்த நுட்பமான மூச்சுப்பயிற்சி, மன அழுத்தம், சோர்வு மற்றும் எதிர்மறை உணர்வுகளான கோபம், விரக்தி, மனஅழுத்தம் போன்றவற்றை நீக்குகிறது. மனதை முழுவதுமாய் நிம்மதியாகவும் அமைதியாகவும் கவனம் நிறைந்ததாகவும் மாற்றுகிறது. உடல், முழுமையான சோர்வு நீங்கி, சக்தி நிறைந்ததாகவும் ஆகிறது.

சுதர்சனக் கிரியா துக்கங்களின் புதிர்களைப் பிரித்தெடுத்து, வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்தத்தத்தைத் தருகிறது. இது ஓர் எல்லையில்லாத அனுபவத்தைக் கொடுத்து, ஆன்மீகத்திற்கான திருப்புமுனையாக இருக்கிறது. சுதர்சனக் கிரியா என்பது ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி மற்றும் வாழ்க்கையைத் தாண்டிய ஒரு தரிசனத்தைத் திறந்துகாட்டி உணரச் செய்யும் இரகசியம்!

தினமும் நல்ல ஆரோக்கியத்தை உள்ளிழுங்கள்!

சுவாசமே பிராணசக்திக்கு ஆதாரம் – வாழ்க்கையின் முக்கியமான சக்தி ஆற்றல். பிராண சக்தியே உடல் மற்றும் மனம்ஆகிய இரண்டின் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக உள்ளது. பிராண சக்தி அதிகமாக இருக்கும் போது, ஒருவர் ஆரோக்கியமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் சுறுசுறுப்பாக இருப்பதையும் உணர முடியும்.

 சுதர்சனக் கிரியா பிராண சக்தியை அதிகரித்து, 90% நச்சுகளையும் அடக்கி வைக்கப் பட்டிருக்கும் மன அழுத்தத்தையும்,தினமும் வெளியேற்றுகிறது.

சுதர்சனக் கிரியாவை பயிற்சி செய்பவர்கள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருப்பதையும், சகிப்புத் தன்மைஅதிகரித்துள்ளதையும், அதிகமான அளவில் ஆற்றல் நிறைந்திருப்பதை உணர்வதையும் பகிர்ந்திருக்கின்றனர்.

சுதர்சனக் கிரியாவை தினமும் செய்வதால் மருத்துவரைப் பார்க்கச் செல்வதைக் குறைத்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.

சரியாக சுவாசித்து வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக இருங்கள்!

அறியப்படாத சுதர்சனக் கிரியா மகிழ்ச்சியையும் புன்னகையையும் தனக்குள் பொதிந்து வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா? சுதர்சனக் கிரியா எப்படி உங்களை மகிழ்வாக வைத்திருக்கும்?

கோபம், எரிச்சல், விரக்தி, சோகம் ஆகிய எதிர்மறை உணர்வுகளிலிருந்து வெளியே வர நீங்கள் எவ்வளவு நேரம்எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? சுதர்சனக் கிரியா வின் மூலமாக, மூச்சின் மூலமாக உணர்வுகளை, நீங்கள் விரும்பும்படி மாற்றிக்கொள்ளும் வழியைக் கற்றுக்கொள்வீர்கள். அவற்றால் இனிஉங்களை ஆட்சி செய்ய முடியாது.

கற்பனை செய்து பாருங்கள்; தினமும் கோபம், எரிச்சல், பொறாமை, பயம் இவை அனைத்தும் ஆழ்ந்தசுவாசத்தினால் மகிழ்ச்சியாகவும், சிரிப்பாகவும், ஆனந்த வாழ்க்கையாகவும் மாற்றப்படும் என்பதை! நட்பில்,உறவுகளுடன், வேலையில், குடும்பத்தில், திருமணத்தில் பெறும் மகிழ்ச்சியில் நீங்கள் யார் என்பதை சற்றே காண முடியும். ஆனால் உண்மையான உங்களை அல்ல...!

சுவாசியுங்கள் இப்போது…. சுவாசியுங்கள் சுதர்சனக் கிரியா வை, இந்தக் கண்ணாடி சிரிக்கும் உங்களைப்பிரதிபலிக்கும்!

உங்களுக்கு ஒரு வாய்ப்பினை அளித்துப் பாருங்கள் ..!

ஏன் சுதர்சனக் கிரியா தனித்தன்மை மிக்கது?

பகல் இரவைப் பின் தொடர்கிறது; பருவங்கள் வந்து போகின்றன; ஒரு மரம் பழைய இலைகளை உதிர்த்து புதிய இலைகளைப் பெறுகின்றன. இது இயற்கையின் ஒத்திசைவு.

இப்போது, இயற்கையின் ஒரு பகுதியாக, நமக்குள் ஒரு தாள ஒத்திசைவு உள்ளது. உயிரியல் தாள ஒத்திசைவாக உடல், மனம் மற்றும் உணர்வுகளிடையேயான ரிதம். மனஅழுத்தம் அல்லது நோய், இந்த உயிரியல் தாளங்களின் அலைவரிசையை மாற்றும்போது, நாம் சகஜமாக இல்லாமல், கவலையுடனும்வருத்தமாகவும் அதிருப்தியை அனுபவிக்கிறோம்.

சுதர்சனக் கிரியா உடலையும், உணர்வுகளையும் தாள ஒத்திசைவில் ஒன்றிணைத்து, மீண்டும் இயற்கையான அதே இசைவில் அவைகளை வைக்கிறது. தாள ஒத்திசைவில் இருக்கும்போது, நாம் நம்மைப் பற்றி நல்லதாகவும், மகிழ்வாகவும் உணர்கிறோம், அனைத்து உறவுகளுடனும் இயல்பான அன்பு இயற்கையாகப் பரவுகிறது.

சுதர்சனக் கிரியா உடலை, மனதை, உணர்வுகளை, சமூக நல்வாழ்வு வசதியையும் மேம்படுத்துகிறது; வாழும்கலையின் நிகழ்வுகளில் இது ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும். உலகம் முழுக்க மில்லியனுக்கும் மேலான மக்களை தங்கள் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக உணரும்வகையில் பயனடையச் செய்துள்ளது!

ஏன் இது விலைமதிப்பில்லாதது?

உங்களின் நல்ல ஆரோக்கியமும் உண்மையான மகிழ்ச்சியான வாழ்க்கையும் விலைமதிப்பற்ற வையல்லவா?

சுவாசம் என்பது மனிதரின் புரிந்துகொள்ளும் ஆற்றலை விட மிகவும் அதிகமானது. தினமும் உங்கள் மூச்சில் விலைமதிப்பற்ற 20 நிமிடங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!