அமைதி (Peace in tamil)

" உலகச் சூழ்நிலையில் கடந்த ஆண்டுகள் மிகுந்த சவாலாக அமைந்தன. நாம் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் போராட்டங்கள் சூடு பிடித்ததைப் பார்த்திருக்கின்றோம். இன்றைய சமுதாயத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது எளிதானது. அதிருப்தி மற்றும் மன அழுத்த அளவுகள் அதிகமாக இருக்கின்றன. எந்த ஒரு நியாயமான காரணமும் உணர்ச்சிகளைத் தூண்டி மக்களைத் தெருக்களுக்குக் கொண்டு வர முடியும். எனினும், உள் அமைதியை உருவாக்கி மக்களை அமைதியான, வன்முறையற்ற, மற்றும் மகிழ்வுடன் கூடிய முறையில் ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபடச் செய்வது ஒரு மிகவும் சவாலான மற்றும் திறமைமிக்க வேலையாகும். கோடிக்கணக்கான மக்கள் இத்திசையில் மாற்றம் வேண்டி ஒன்று சேர வாழும் கலை உலகெங்கும் ஒரு பணிவான முயற்சி செய்து வருகின்றது. இன்று, நாட்டுக் கட்டமைப்புக்கு மக்கள் தியானத்தை மேற்கொண்டு, அதனுடன், தேசத்தை கட்டியெழுப்பு வதற்கு உள் அமைதியின் பங்கினையும் ஒப்புக் கொள்கின்றனர் என்பதில் நான் மகிழ்ச்சி யடைகின்றேன்.”

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

முன்னுரை:

1981 ஆம் ஆண்டு வாழும் கலை துவங்கியதிலிருந்து,அதன் தோற்றுநர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், அமைதிப் பணியில் ஈடுபட்டிருக்கின்றார். வாழும் கலை அமைப்பு, சமுதாயத்திற்கு தொண்டாற்ற, ஆன்மீக வழியில் பலத்தையும், பொறுப்புணர்வையும் அளிக்கின்றது.

உலகம் முழுவதும் அமைதி தேவை என்னும் எண்ணத்திலிருந்தே பேரார்வம் மற்றும் ஆற்றல் வளர்கின்றன. ஒரு மன அழுத்தமற்ற , மற்றும் வன்முறையற்ற உலகை உருவாக்கும் ஸ்ரீஸ்ரீ யின் நோக்கத்தினால், அமைதிக்கான ஒரு அதிரடிபணிக்கு அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

போர் மற்றும் எந்த ஒரு பேரழிவும் மக்கள் மனதில் பயம்,பதட்டம், காட்டிக் கொடுக்கும் உணர்வு ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழி செய்கின்றது. ஆழ்ந்த வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் அவர்களுக்குள் தோன்றுகின்றன. வாழும் கலை, அமைதிக்கான பணியில், இத்தகைய அழுத்தங்களை நீக்கி, வாழ்க்கையை ஒரு புதிய புத்துயிர் பெற்ற கண்ணோட்டத்தில் காண, சிறப்புப் பயிற்சிகளை நடத்துகின்றது. இதில், குற்றம் புரிந்தவர்களும், பாதிக்கப் பட்டவர்களும் சமமான கருணையுடன் நடத்தப் படுகின்றார்கள். அமைதிக்கான பணி பல்வேறு பின்புலங்களுடைய மக்களை ஒன்று சேர்த்து அவர்களை நல்லிணக்கத்துடன் வாழ வைக்கும் நோக்கம் உடையது.

ஸ்ரீ ஸ்ரீ அமைதித் தூதுவர்:

தேக்கம் உள்ள நாடுகளில் ஸ்ரீ ஸ்ரீ ஒரு அமைதித் தூதுவர் என்னும் பங்கினை வகித்தார். முரண்பட்ட இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு ஒன்றிணைத்து, வன்முறை நிலையினைத் தணித்திருக்கின்றார்.மேலும் வாழும் கலை நிறுவனம், பல்வேறு சமய மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களிக்கிடையே சமய நம்பிக்கை நல்லிணக்கத்தை மேம்படுத்துகின்றது.

அதிர்ச்சி நிவாரணம்

வன்முறைக்கு அடிப்படைக் காரணம் அழுத்தமும் பதட்டமுமே என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ. மன அழுத்தம் விடுவிக்கப்படும் போது மனதில் அமைதி ஏற்படுகின்றது, ஒத்துழைப்பு, பொறுப்பு, நேசம் சார்புணர்வு என மனித மதிப்புகள் இயற்கையாகவே உருவாகின்றன. போர் மற்றும் பேரழிவுக் காலங்களில் இந்தப் புரிதலே எங்களது அதிர்ச்சி நிவாரணப் பட்டறைகளை உயிர்ப்பிக்கின்றது. போரினால் பாதிக்கப் பட்டவர்கள் பயம், பதட்டம், காட்டிக் கொடுக்கும் மனநிலை ஆகியவை நீங்குவதைக் அனுபவிக்கின்றனர். உள்மன அமைதியுணர்வு  நிலவு வதால், வெறுப்பு,குற்றம் புரிந்தவர்கள் மீது பழியுணர்வு ஆகியவை நீக்கப் படுகின்றன. வன் முறைக் குற்றங்களைச் செய்தவர்களுக்கும் சமுதாயத்தை விரிந்த பார்வையில் காண்பதற்காக சிறப்புப் பயிற்சிகள் நடத்தப் படுகின்றன. இவை, தீவிரவாதிகள்,போராளிகள் ஆகியோரும் வன்முறைப் பாதையினை விட்டு விடும் மாற்றத்தை ஏற்படுத்திருக்கின்றன.

நீடித்த சமாதானம்

வாழும் கலை அமைப்பு உலகெங்கும் பல்லாயிரக் கணக்கான மக்களிடையே சார்புணர்வை மேம்படுத்தியிருக்கின்றது.பல்வேறு பின்னணியுள்ள மக்களை ஒருங்கிணைத்து, தவறான அபிப்பிராயங்களைக் குறைத்து, பல்வேறு நாடுகளின் மக்களிடையே நல்லிணக்கப் புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது.

நியூயார்க் பயங்கரவாதத் தாக்குதல் (செப்டெம்பர் 2001)

2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் நாள், அல்க்வைதா வுடன் இணைந்த 19 இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்த தற்கொலைப் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டனர். இது நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே வாழும் கலையின் சகோதர அமைப்பான மனிதப் பண்புகளுக்கான பன்னாட்டு சங்கம், இந்த நிகழ்ச்சியைக் கண்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட அமெரிக்க குடிமக்களுக்கு அதிர்ச்சி நீக்கும் பட்டறையைத் துவங்கியது.