யோகாவின் மூலம் அசுத்த சுவாசத்தை முறியடியுங்கள்! (How to get rid of bad breath in tamil)

உங்கள் நிறுவனம் ஒரு சமீபத்திய வெற்றிக்கான விழாவை நடத்துகிறது. ஒவ்வொரு ஊழியரும், குழுஉறுப்பினரும் அங்கே இருப்பார்கள். நீங்கள் சிறந்த மாலை நேரமேலங்கி அணிந்து அதற்கு பொருந்தும்படியான ஆபரணங்களோடும், அழகான காலணிகளோடும் மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் தோற்றத்தை ரசித்து உங்களை பாராட்டுகிறார்கள்.

உங்கள் சுவாசத்தில் இருந்து வரும் ஒரு துர்நாற்றத்தை நீங்கள் கவனிக்கும் வரையில் அனைத்தும் நன்றாக இருந்தது. ஒருவேளை நீங்கள் இப்பொழுது உண்ட உணவு துவக்கியாலோ என்னவோ ! மக்கள் இதையும் கவனித்ததோடு, குறுகிய உரையாடலோடு விரைவாக உங்களை விட்டு செல்கிறார்கள்.

உங்கள் முதலாளிகளை நீங்கள் ஈர்க்க வைக்க நினைத்தது ,திடீரென்று ஒரு பேரழிவாக மாறிவிட்டது. நீங்கள் சரியான உடை அணிந்து தோற்றம் அளித்தும் ,உங்களின் அசுத்த சுவாசம் உங்களுடைய மாலை பொழுதை சீரழித்துவிட்டது.

உகந்த வாய் சுகாதாரத்திற்கான சில கொசுறுகள்:

  1. தினமும் இயற்கை பற்பசைகளை கொண்டு பற்களை துலக்கவும்
  2. நாக்கு தூய்மை செய்யும் கருவியை உபயோகித்து நாக்கில் உள்ள பதிவுகளை சுத்தம் செய்யவும்
  3. ஒவ்வொரு முறையும் உணவு அருந்திய பின்னர் வாய் கொப்பளிக்கவும்
  4. நிறைய தண்ணீர் குடிக்கவும்
  5. புகை பிடித்தலையும் மது அருந்துதலையும் தவிர்க்கவும்
  6. உணவின் அளவை குறைத்து கொள்ளவும்
  7. உணவில் அதிகப்படியான அளவு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதை தவிர்க்கவும்
  8. குப்பை உணவுகளை தவிர்க்கவும்
  9. தினசரி யோக பயிற்சி செய்யவும்

நாம் அனைவரும் நம் வாழ்வில் இது போன்ற நிலைமையை அனுபவித்துள்ளோம். மருத்துவ ரீதியாக வாய்துர்நாற்றம் எனப்படும்அசுத்த சுவாசம், துரதிஷ்டம் அளிப்பதோடு, உங்களை சங்கடப்படுத்தி உங்கள்நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.

உங்களில்பல பேர்ஒழுங்காக பல்துலக்காமல்இருப்பது மட்டுமே அசுத்த சுவாசத்திற்கு காரணம்என்று நினைதால்அது முற்றிலும்உண்மை இல்லை.

ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், முறையற்ற செரிமானம், தண்ணீர் குறைவாக உட்கொள்ளும் மற்றும் உட்கொண்ட உணவு வகை போன்ற காரணங்களால் கெட்ட சுவாசம் உருவாகிறது. ஆராய்ச்சியாளர்கள், பொதுவாக ஈர வாய் கொண்டவர்களை காட்டிலும் உலர்ந்த வாய்கொண்ட மக்களுக்கே கெட்ட சுவாசம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.மது அருந்துவதும் ,புகை பிடித்தலும் கூட துர்நாற்றத்திற்கு காரணம். நாக்கில் உள்ள வெள்ளை படிவுகள் பாக்டீரியாவை உண்டு செய்து வாய்துர் நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. வாய் சுகாதாரத்திற்கு நிச்சயமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், நீங்கள் அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுத்தும் , மீண்டும் அசுத்த சுவாசம் வருவதை உணரலாம். அத்தருணத்தில் யோகா போன்ற ஒரு விருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.வாய் சுகாதாரத்திற்கு நிச்சயமாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், நீங்கள்அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுத்தும் , மீண்டும்அசுத்த சுவாசம் வருவதை உணரலாம். அத்தருணத்தில் யோகா போன்ற ஒரு விருப்பதை எடுத்துக்கொள்ளலாம்.

யோகா என்பது உடல்சம்மந்தப்பட்ட ஒரு பயிற்சி என்றாலும், அசுத்த சுவாசத்திலிருந்து மீண்டு வர உதவுகிறது. யோகா உள்மற்றும் வெளி உடல் தூய்மை செய்ய உதவுகிறது. மேலும்மனதை அமைதி படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும்உதவுகிறது.

ஸ்ரீஸ்ரீயோகா என்னும் பத்து மணி நேர உடல்நல பயிற்சி உடல்வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உங்கள் தேவை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற படி தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான பயிற்சியாளர்களால் வழி நடத்தப்படுகிறது. துவக்க நிலையாளர்களுக்கான இப்பயிற்சி, தங்கள் இல்லத்தில்மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு பயிற்சியாக அமைகிறது.

அசுத்த சுவாசத்தில் இருந்து விடுபட உதவும் சில உடல் தோரணைகள்:

கபால் பதி பிரணாயாமம்

சவுகர்யமாகவும் வசதியாகவும் முதுகு தண்டவளம் நிமிர்ந்து உட்காருங்கள்.ஆகாயத்தை பார்க்கும்படி உங்கள்கைகளை பிரித்து முழங்காலின் மேல் வைத்து கொண்டு ஒரு ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளவும். சுவாசத்தை வெளிவிடும் பொழுது, வயிற்றை உள்ளே இழுத்து கொள்ளவும். உங்கள் தொப்புள் மற்றும் அடிவயிற்றை தளர்த்தி கொள்ளும் பொழுது சுவாசம்தானாக உங்கள்நுரையீரலில் மீண்டும்பாய்கிறது. 20 முறை இதை செய்யவும்.

யோகா முத்ரா

 

பத்மாசனம்/சுகாசனத்தில் உட்காரவும். கண்களை மூடிய படியே உங்கள் உடலை ,நெற்றி தரையில் படும் வரை வளைக்கவும். இந்த நிலையில் தளர்ந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதை     5 -10 முறை செய்யவும்.

 

ஷீத்காரி பிரணாயாமம்: (குளிர்ந்த சுவாசம்)

உங்கள் வாயை திறந்த படியே பற்களை இறுக்கிக் கொண்டு, பற்களுக்கு எதிராக நாக்கை அழுத்தவும். ஒரு சுவாசத்தை எடுத்துக் கொள்ளவும். வாயை மூடி மூக்கின் வழியாக சாதாரணமான சுவாசத்தை வெளியே விடவும் . இதை 5-10 முறை செய்யவும். இடமிருந்து சுவாசித்து வலது பக்கமாக வெளிவிடவும்.

ஷீதலி பிரணாயாமம்: (குளிர்ந்த சுவாசம்)

 

நாக்கை வெளி நீட்டி,நாக்கின் பக்கங்களை மேல்நோக்கி நடுபக்கமாக சுழற்றவும். வாய்வழியாக சுவாசித்து , சுவாசத்தை பிடித்து மெதுவாக மூக்கு வழியாக வெளிவிடவும். இதை 5 முதல் 10 முறை செய்யவும்.

 

ஷங்க்க பிரக்ஷலன்

ஸ்ரீஸ்ரீயோகா நிலை 2 திட்டத்தின் கீழ் இந்த நுட்பத்தை கற்றுக்கொள்ளவும்.

பத்மசாதனா

இதை டி.எஸ்.ன் பயிற்சியில் கற்றுக் கொள்ளவும்.

 

சிம்ஹாசனம் (சிம்ம நிலை)

யோகப்பாயில் முழங்காலிட்டு ,வலது காலை இடது பிட்டதிற்கு கீழும் இடது காலை வலது பிட்டதிற்கு கீழும் வைத்து மண்டியிட்டு உட்காரவும். உங்கள் கைகளை பிரித்து மடி மேல் வைத்து முன்னோக்கி சாய்த்து கொள்ளவும். கைகளை நேராக இருக்கும் போது உடல் எடை கைகளில் இருக்க வேண்டும். உங்கள் வாயை திறந்து நாக்கை வெளி நீட்டவும். கண்கள் திறந்து முகத்தசைகளை பதட்டமாக வைத்து , உங்கள் பார்வையை மூக்கு நுனி அல்லது புருவங்கள் மையத்தில் வைத்து கொள்ளவும்.

 

அசுத்த சுவாசம் என்பது எல்லா இடங்களிலும் மக்கள் மத்தியில் ஒரு மிகவும் பொதுவான நிகழ்வு என்பதால் இதை கண்டு வெட்கப்பட எதுவும் இல்லை. பரபரப்பாக வேலை அட்டவணை மற்றும்மன அழுத்தம் ஆகியவை அசுத்த சுவாசம், தூக்கமின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவிட்டு, உடல் சமநிலைக்கு தொந்தரவு கொடுக்கிறது. ஸ்ரீஸ்ரீயோகா இந்த நிலையில்அகற்ற உதவுகிறது. நம் வாழ்வில் இங்கு பரிந்துரைக்கப்பட்ட குறிப்புகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளை நீக்கி அனைத்து துறைகளிலும் உங்கள் திறனை மேம்படச்செய்கிறது. இதனுடன் சேர்த்து யோக பயிற்சிகளை மேற்கொண்டால், அனைத்து தடைகளும் நீங்கி உங்கள் வாழ்க்கையை அனுபவித்து ஒரு நிம்மதி பெருமூச்சோடு வாழலாம்!

உடல் நலக்குறைவுகளால் வாழ்கையில் பின்னோக்கி செல்வது போல் உணர்கிறீர்களா? உங்கள் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்கையில் உணர்ச்சிகள் முதலிடம் வகுக்கிறதா ? கீழே கொடுக்க பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து குறைந்த பட்ச வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இயல்பாகவே பிரச்சினைகளை யோகத்தின் மூலம் எப்படி கடப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.