நாகநதி ஆற்றுக்குப் புத்துயிர் அளிக்கும் திட்டம் (Rejuvenating River Naganadhi in tamil)

தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலை, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பசுமையான நிலப்பரப்பாகத் திகழ்ந்தது. ஆயினும், இன்று கதையே முற்றிலும் வேறாக, ஆங்காங்கே நீர் வளமற்ற தரிசு நிலங்கள் நிறைந்ததாக உள்ளது. வளங்களை அறிவியல் பூர்வமாகக் கையாளா ததும், நாகநதி ஆற்றின் கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப் படாததும் இதற்குக் காரணங்களாகக் கூறப் படுகின்றன.

ஜவ்வாது மலைகளில் உற்பத்தியாகும் நாகநதி ஆறு திருவண்ணாமலையின் ஜீவ நாடியாக விளங்குகின்றது. பாலாற்றில் கலப்பதற்கு முன்னர் அது காஞ்சீபுரம் வழியாகச் செல்கின்றது. திருவண்ணாமலை, வேலூர் , தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் கடலூரில் மதிப்பாய்வுகள் நடத்தப் பட்டன. அம்மதிப்பாய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் நாகநதி ஆற்றின் நீர் நிலை சில மாவட்டங்களில் உயர்த்தப்பட்டால் நிலைமை தலைகீழாய் ஆகிவிடும் என்று சுட்டிக் காட்டுகின்றன.

தீர்வினை நோக்கி

நீர் இழப்பிற்கு தடுப்பணைகள் முக்கிய காரணமாகத் தெரிகின்றன. நிரம்பி வழியும் நீரைச் சேமிக்க பயன்படுத்தப்பட்ட தடுப்பணைகள் நீரின் அளவு குறையும் போது ஆபத்தான வைகளாக மாறி விட்டன. தேங்கும் நீர் ஆவியாகி விடுவதுடன். நிலத்தடி நீரின் அளவும் குறைகின்றது. தடுப்பணைகளுக்கு அருகில் மீழ் நிரப்புக் கிணறுகளை அமைப்பது இதற்கு ஓர் தீர்வு ஆகும். வாழும் கலையின் தன்னார்வத் தொண்டர்களின் குழு, நாகநதியாற்றின் நிலத்தடி நீர் அளவினை அதிகரிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளனர்.

இது போன்ற வாழும்கலைத் தொண்டர் குழுக்கள் அண்மையிலுள்ள ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும் குமுதவதி, வேதவதி ஆறுகளை புத்துயிர் பெறச் செய்ய உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், ஒன்றிணைந்து, இறந்து கொண்டிருக்கும் ஆறுகளுக்குப் புத்துயிர் அளித்து அவற்றுடன் நெருங்கி இணைந்துள்ள மனித வாழ்வினைக் காக்க உறுதி பூண்டுள்ளனர்.

2014 செப்டம்பர் முதல், தன்னார்வத் தொண்டர்கள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதிக அளவு நீர் ஊடுருவலை ஏற்படுத்தும் பொருட்டு ஐந்து மீழ் நிரப்புக் கிணறுகள், மூன்று பாறாங்கல் தடுப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.

இவை நிறைவு பெற்றவுடன் பெய்த முதல் மழையில் இந்த முயற்சிகள் பயனளித்தன. பல ஆண்டு காலமாக வறண்டிருந்த ஏழு திறந்த கிணறுகளில் நீர் நிறைந்திருக்கின்றது.

அண்ணாமலை என்பவர், ஐந்து ஆண்டுகளாக தனது கிணறு வரண்டிருந்ததாக கூறுகின்றார். 32 அடி ஆழமுள்ள கிணறு இப்போது 26 அடி நீரினைக் கொள்கின்றது. ஏனெனில் நிலத்தடி நீர் மீழ் நிரப்பப் பட்டிருக்கின்றது. அது போன்றே பலராமன் என்பவர் 45 அடி ஆழமுள்ள வறண்டிருந்த தனது கிணற்றில் 30 அடிக்கு நீர் நிரம்பியுள்ளதாகக் கூறுகின்றார்.

குடி நீர் வழங்கும் பொதுப் பணித் துறையின் ஆழ் துளைக் கிணறுகள் நீடித்த நீர் வழங்குதல் நிலையில் இப்போதுள்ளது. முன்பெல்லாம் குடி நீர் வழங்குதலில் அடிக்கடி தடைகள் ஏற்படு வதுண்டு.

69 கிராமங்களில் இந்தத் பணித்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப் பட்டுள்ளன.

இது இளைஞர்கள் தலைமைத்துவப் பயிற்சி ஆவணங்களில் அம்பரேச்வர் அளித்திருக்கும் தகவல்

அவ்வப்போது மேலும் குறிப்புகள் வெளியிடப்படும். இந்தப் பணித்திட்டத்தில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் தயவு செய்து

aolchandru@yahoo.co.in அல்லது naganadhiaol@gmail.com

என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு  எழுதுங்கள்.

அல்லது 09566009453 என்னும் அலை பேசி எண்ணை அழையுங்கள்