எங்களை பற்றி

நாம் தனிமனிதனை வலிமைப்படுத்தி சமுதாயத்தை வளப்படுத்துகிறோம்!

ஓர் உலகளாவிய இயக்கம்...

  • 44 வருட மரபு
  • 182 தேசங்களில் 10,000+ மையங்கள்
  • 80 கோடிக்கு மேல் வாழ்க்கைகளைத் தொட்டிருக்கிறோம்

இன்று 182 நாடுகளில் இயங்கிவரும் வாழும்கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) ஓர் தன்னார்வ, கல்வி மற்றும் மனிதநேய செயலாற்றும் தொண்டு நிறுவனமாகும். இவ்வமைப்பு 1981 ஆம் ஆண்டு உலகம் போற்றும் மனித நேயரும், ஆன்மீக குருவுமான குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்டது. ‘அழுத்தமற்ற மனதையும் வன்முறையற்ற சமூகத்தையும் பெறாமல் உலகளாவிய அமைதியை அடைவது இயலாததாகும்’ எனும் குருதேவரின் தத்துவார்த்த வழிகாட்டுதலின்படியே நமது அனைத்து பயிற்சி திட்டங்களும் அமைந்துள்ளன.

வாழும்கலை ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக பலதரப்பட்ட மக்களையும் ஈர்த்திருக்கிறது.

வாழும் கலை என்பது ஒரு கொள்கை, வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான ஒரு தத்துவம். அது ஒரு அமைப்பு என்பதை விட அதை ஒரு இயக்கம் எனலாம். அதன் முக்கிய அம்சம், நமக்குள் அமைதியைக் கண்டறிவதும், நமது சமூகத்தில் உள்ள மக்களை - வெவ்வேறு கலாச்சாரங்கள், மரபுகள், மதங்கள், தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதும் ஆகும்; இதன் மூலம், எல்லா இடங்களிலும் மனித வாழ்க்கையை உயர்த்துவதே நமக்கான ஒரு குறிக்கோள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

- குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

எமது மையங்கள்

182 நாடுகளில் 10,000+ வாழும் கலை மையங்கள் அமைந்துள்ளன. இவை அமைதியைப் பரப்புவதோடு, ' உலகம் ஒரு குடும்பம்’ என்பது உருவாகிட உதவுகின்றன.

எங்களை தொடர்புகொள்ளவும்

இந்திய அலுவலகம்

+91 80 6761 2345, +91 80 2843 2833 (தொலைநகல்)

பயிற்சி நிரல்கள் மற்றும் பதிவு பற்றிய கேள்விகளுக்கு:  support@artofliving.online

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அலுவலகம், ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையம், 21வது கி.மீ, கனகபுரா சாலை, உதயபுரா, பெங்களூரு தெற்கு, கர்நாடகா - 560082, இந்தியா secretariat@artofliving.org

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பலதரபட்ட இனம், மரபு, பொருளாதார, சமூக வட்டம் மற்றும் நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்திருக்கிறார். 182 நாடுகளில் விரிந்திருக்கும் இக்குழுமம், ஒரு உலக ஆன்மீகக் குடும்பமாக உருவாகியுள்ளது.

குருதேவரின் செய்தி எளிமையானது: “அன்பும் ஞானமும், வெறுப்பையும் வன்முறையையும் வெல்லக்கூடும்.” இச்செய்தி ஒரு முழக்கம் மட்டும் அல்ல, வாழும் கலை அமைப்பின் மூலம் இது தொடர்ந்து செயல்வடிவம் பெற்றிருக்கிறது, இனியும் இது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

மேலும் அறிக

வாழும் கலையின் இலவசப் பள்ளிகள்

ஒரு புன்னகையை பரிசளியுங்கள்

நாங்கள் ஆண்டுக்கு 1,00,000+ க்கும் மேற்பட்ட, பின்தங்கிய குழந்தைகளுக்கு முழுமையான (மன, உடல், ஆளுமை) கல்வியை வழங்குகிறோம். உங்கள் நன்கொடை இன்றியமையாதது. அவை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. 95% க்கும் மேற்பட்ட தொகை நேரடியாக கல்வித் திட்டத்திற்கே செல்கிறது.

நன்கொடை அளிக்கலாம்