பேரழிவு நிவாரணம் (Disaster management in tamil)

தனது உலகளாவிய தொண்டர்களைக் கொண்ட வாழும் கலை அமைப்பு உலகில் எங்கு பேரழிவு ஏற்பட்டாலும் உதவி செய்வதோடு, உடல் மற்றும் மன நிவாரணம் தருவதுடன் பொருள் உதவி யும் வழங்குகிறது. வாழும் கலை அமைப்பு பேரழிவு மறுவாழ்வுத் திட்டங் கள் அனைத்தையும் தன் தொண்டர்கள் மூலம் உலகம் முழுவதும் செயல்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்துள்ளது.

வாழும்கலையும் மற்றும் அதன் சகோதர நிறுவனமான மனித கலாசாரத்திற்கான சர்வதேசசங்கம் (IAHV) மற்றும் வியக்தி விகாஸ் கேந்திரா இந்தியா (VVKI), இணைந்து வன்முறை மற்றும் பிற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் புனர்வாழ்வளித்துள்ளனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து குஜராத் பூகம்பம் வரை நிவாரணம் அளித்த வாழும் கலை தொண்டர்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக் கவலைகளைக் கடந்து பேரழிவுகளில் பாதிக்கப் பட்ட மக்களின் உணர்ச்சிக்கு குரல்கொடுத்ததோடு உடல் மற்றும் மன அதிர்ச்சி நிவாரணத்தையும் வழங்கினர்.

உடனடிப் பொருளுதவி மற்றும் நிவாரணம்

வாழும்கலை நிறுவனம், பேரழிவுகளுக்கு பின்னர் அவசர சேவைகள் மற்றும் பொருள் உதவி வழங்குகிறது. உணவு, உடை, மருந்து, தங்குமிடம் முதலியவை இதில் அடக்கம். மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏனைய உடல் மற்றும் மனநல நிபுணர்கள் ஆகியோர் இந்த உடனடி நிவாரண முயற்சிக்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

உடனடி அதிர்ச்சி நிவாரணம்

கடுமையான உடல், மற்றும் உணர்ச்சி அதிர்வு ஏற்பட்டு உயிர் தப்பிய மக்களுக்கு பொருள் உதவி மட்டும் போதுமானதல்ல. மக்களை அதிர்ச்சியிலிருந்து மீட்டு அவர்களுக்கு தங்களுடைய வாழ்வை மீண்டும் அளித்தல் மிகவும் அவசியமான ஒன்று. வாழும் கலையின் மன வேதனை மற்றும் அதிர்ச்சி நிவாரண நிகழ்ச்சியின் மூலம் தென்கிழக்கு ஆசிய சுனாமியால் பாதிக்கப் பட்டவர்கள் நான்கு நாட்களிலேயே தங்கள் மன உளைச்சலிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட கால புனர்வாழ்வு

பேரழிவில் உயிர் பிழைத்தவர்கள் முற்றிலுமான உடல் மற்றும் மன உணர்வின் புனர் வாழ்வுக்கு உட்படுத்தப் படுவதன் மூலமாக ஒரு தனிப்பட்ட மற்றும் சமுதாய நிலையில் உண்மையான நிவாரணத்தை அடைகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஒருநிலையான வாழ்வாதாரத்தையும் சம்பாதிக்கவேண்டியுள்ளது. இதை அடைவதற்கு எங்கள் தொண்டர்கள் கிராமங்களிலும் உள்ளூர் சமூகங்களிலும், வீடு கட்டுமான வேலை, சுகாதார அமைப்புகள், சாலைகள், பள்ளிகள், தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் பிற தேவையான உள்கட்டமைப்பு வேலைகளை செய்கின்றனர்.

பாகிஸ்தானில் வெள்ள நிவாரண முயற்சிகள்

2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடும் பருவமழை காரணமாக வீடுகள், சாலைகள், பாலங்கள், பயிர்கள் மற்றும் கால்நடை ஆகியவை அடித்து செல்லப்பட்டன. வடக்கு பாகிஸ்தானிலிருந்து தெற்கு சிந்து மாகாணம் வரை ஒருபெரிய அழிவு ஏற்பட்டது. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12 சதவிகிதமாய் விளங்கும் 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கியநாடுகளின் விவரப்படி, 10 மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்திற்கான அவசரத் தேவை இருந்தது.

பாகிஸ்தானில் உள்ள வாழும் கலை, பேரழிவு நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய தேவை ஏற்பட்டது. ஒரு பொது சுகாதாரப் பேரழிவை தவிர்க்க, தற்காலிகத் தங்குமிடம், சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறைகளுக்கு ஒரு பெரும்தேவை இருந்தது. மக்களின் மருத்துவப் பராமரிப்பு மற்றும் அடிப்படைஉணவுப் பொருட்களுக்கும் தேவை இருந்தது . கைபர்பஃதுங்கவா மாகாணத்தில் பேரழிவு, மிக்க மோசமான நிலையில் இருந்ததால் அது, நிவாரணப் பணியின் மையப்புள்ளியாக கருதப்பட்டது. நௌஷீரா விலுள்ள அப்ஸாய், பெஷாவரில் உள்ள ஜலோசி மற்றும் கார்சடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிவாரணப் பணி நடைபெற்றது. கூடாரங்கள், ஆடைகள், உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், குடிநீர் மற்றும் போர்வைகள் உட்பட நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.