உங்களை நீராட்டி, சீராட்டிக் கொள்ளுங்கள்

உங்களை நீராட்டி, சீராட்டிக்  கொள்ளுங்கள்

 

மனம் , உடல் மற்றும் ஆத்மா ஆகிய மூன்றையும் சமநிலைப் படுத்தும்   சிகிச்சை - குளியல் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆற்றுப்படுத்தும் குளியல் உடலின் ஆற்றலை அதிகப் படுத்தி, மனத்தெளிவை மேம்படுத்தி, சுற்றுச் சூழல் நச்சுக்களைத்  தோலிலிருந்து அகற்றி, மனதை இளைப்பாற்றி உணர்ச்சிகளை சமநிலைப் படுத்துகிறது.

எனவே காலை நேரக்  குளியல் ஆயுர்வேத நடைமுறையில்  ஒரு முக்கிய பகுதியாகும். ஒரு நிதானமான குளியல், பதட்டமான தசைகளை இளைப்பாற்றுகிறது ; அடைத்துவிட்ட துளைகளைத் திறக்கிறது, திசுக்களுக்கு ஈரப்பதத்தை மீண்டும் தருகிறது, உங்கள் நாளுக்கு ஒரு சிகிச்சைமுறை பரிமாணத்தை சேர்க்கிறது.

வரலாறு:

இந்தியாவில் மட்டுமல்ல, பல உலக கலாச்சாரங்களும் குளியலை குணப்படுத்தும் நடவடிக்கையாக கருதுகின்றன.  பண்டைய கிரேக்கத்தில், கடவுளர்களிடமிருந்து பெறப் பட்ட பரிசாக நீர் கருதப் படுகிறது. ரோமில், பொம்பெயிலி என்னுமிடத்தில் சூடான மற்றும் குளிர் குளியல் தொட்டி இடிபாடுகள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. நெப்போலியன்  மனைவி ஜோசபின் போனபர்ட்டின் குளியல் தொட்டி 150 ஆண்டு களுக்கு மேலாக அதன் கஸ்தூரியின் வாசனையுடன்  தக்க வைக்கப் பட்டிருக்கின்றது.

மூன்று நிமிட அதிசயம்:

ஆயுர்வேதத்தின்  தினசரி சுய மசாஜ் என்பது அப்யங்கா  என்று அழைக்கப்படுகிறது. உங்கள் மனதையும் உடலையும் ரீசார்ஜ் செய்ய உதவுகிறது, ரத்த ஓட்டத்தை  மேம் படுத்துகிறது, நச்சுகளை  உடலில் இருந்து எளிதாக வெளியேற்றுகிறது.

மூன்று நிமிடங்களுக்கு தினமும் தலை, நெற்றி,  கை மற்றும் கால்களை எள்  எண்ணெயுடன் மசாஜ் செய்வது :

  • சருமத்தில் சேர்ந்திருக்கும்  அசுத்தங்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றை நீக்குகிறது
  • ஆற்றலுடன் ஒன்றிணைகிறது
  • உணர்ச்சிகளை அமைதிப்படுத்துகிறது

உங்கள் உணர்வுகளை ஊக்கப்படுத்துதல் :

எளிமையான வழிமுறைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தினந்தோறும் குளியல் பயன்களை அதிகப் படுத்தி உங்கள் உணர்வுகளை ஊக்கப் படுத்தி   கொள்ளுங்கள். 

  • குளிப்பதற்கு முன்னர், மூடிய கண்கள் மீது தூய ரோஜா நீரில்  ஊறவைத்திருக்கும் பஞ்சுப் பட்டைகளை வைக்கவும். அது மன அழுத்தத்தை அகற்ற உதவும்.
  • எண்ணெய் மசாஜ் செய்து ஊற வைத்திருக்கும்போதும், குளிக்கும்போதும்  ஆழ்ந்த மூச்செடுத்து விடுங்கள்.  ஆழ்ந்த சுவாசம் உடலின் சேனல்களை திறந்து, நுரையீரல்கள் மற்றும் உடலுக்கு ஆக்சிஜனை அழைக்கிறது. இது  களைப்பை நீக்கி மனத்  தெளிவை மேம்படுத்துகிறது.
  • மென்மையான அரோமாதெராபி மூலம்  குளியல் சிகிச்சையின்  மதிப்பு அதிகரிக்கும். குளிக்கும் நீரில்  3-4 சொட்டு அரோமா  எண்ணெய் (வாசனை மிகுந்த எண்ணெய்) அல்லது எங்கள் அரோமாதெரபி குளியல் உப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். நறுமணம் விரைவில் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் மனதில் ஒரு சிகிச்சைமுறை செய்தியைப்  பரப்புகிறது..
  • பசுமையான தாவரங்களை குளியலறையில் வைக்கவும், அது ஒரு சுத்திகரிக்கப் பட்ட சுற்றுச்சூழலை வழங்கி  காட்சிக்கு ஏற்றதாக அமையும்.

குளியலின்  நன்மைகள்

  • உணர்ச்சிகளை, மனதில் மற்றும் நரம்பு மண்டலத்தை சமப் படுத்துகிறது.
  • இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
  • மனதை மென்மையாக்கி அமைதிப் படுத்தி  ஆற்றல் நிலையை உயர்த்துகிறது
  • பசியைத் தூண்டும் ஜாடராக்கினியை ஊக்குவிப்பதன்  மூலம் செரிமான செயல் பாட்டை மேம்படுத்துகிறது
  • சோர்வு, தூக்கம், களைப்பு எரியும் உணர்வு, தாகம், அரிப்பு மற்றும் வியர்வை ஆகியவற்றை நீக்கும்.

குளிர் நீரில் குளியல்

ஒரு குளிர்நீர்  குளியல் எடுத்துக்கொள்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அது உங்கள் பிராணாவை அதிகரிக்கிறது. உங்கள் கண்பார்வை மேம்பட உதவுகிறது;  மற்றும் சரியான நேரத்தில்  எடுத்துக்கொண்டால்  செரிமான செயல்பாடு மேம்பட உதவுகிறது ஆயுர்வேதத்தில்  மூன்று வகையான பிரகிருதி (தன்மை) - வாதம் , கபம்  மற்றும் பித்தம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக குளிர்காலத்தில், குளிர்ந்த நீரில் குளிப்பது,  கபம் மற்றும் வாதம் சமநிலையின்மை ஏற்பட வழி வகுக்கலாம்.

வாத தன்மை கொண்டவர்கள் சீரான  நடைமுறைகளை வெறுக்கின்றனர். புதிய விஷயங்களைச் செய்ய முற்படுவர். கப பிரகிருதி மக்கள் வழக்கமான நடைமுறைகளையே விரும்புவர்; ஆனால் பெரும்பாலும் அவை ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.  இதற்கிடையில், பித்தப்  பிரகிருதி வகையைச் சேர்ந்தவர்களால்   பழக்க வழக்கங்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும், ஆனால் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்களுக்கு இடையில் வித்தியாசத்தை கண்டறிய மிகவும் சிரமப் படுவர்.

சூடான நீர் குளியல்:

வாத  வகையினருக்கு வெதுவெதுப்பான நீர் குளியல் நல்லது. அது  வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், கோடை காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கக் கூடாது. அது பித்தத்தை அதிகரித்து விடும். மேலும், தலையில் சூடான நீரை பயன்படுத்துவது கண்கள், முடி மற்றும் இதயத்திற்கு நல்லது அல்ல. தலையில் சூடான நீரை விடுவது உணர்வு புலன்களின் ஆற்றலைக் குறைத்து விடும்.

வீட்டில் தயாரிக்கும் ஸ்நானப் பவுடர்:

இதற்கிடையில், ஆயுர்வேத பல்வேறு வகையான உடல் சுத்தப் பொடிகளை பற்றிக் கூறுகிறது. வெதுவெதுப்பான  மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது பயன் படுத்தப்படலாம். இந்த பயன்பாடு இயற்கை அழகு மற்றும் பிரகாசத்தை தக்க வைத்து கொள்ள  உதவுகிறது. சூடான நீரில் குளிக்கும் போது, ​​ 2 டீஸ்பூன் கடலைமாவுப் பொடி, 1 தேக்கரண்டி சந்தனப் பவுடர், ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி, ஒரு சிட்டிகை கற்பூரம்  ஆகியவற்றை கலந்து  அப்பொடியைப் பயன்படுத்தலாம். குளிர் நீரில் குளியல் எடுத்துக்  கொண்டால், கற்பூர   தூள்,  நீர், பால் அல்லது ரோஜா நீர் கலந்து அந்தப் பசையை உடல் முழுவதும் தடவித் தேய்த்துக் குளியுங்கள்.

வீட்டில் தயாரிக்கும்  ஷாம்பு

நீங்கள்  வீட்டில் ஷாம்பு செய்யலாம். 100 கிராம் அரிதா பவுடர், 10 கிராம் வேப்பம்  பவுடர், 20 கிராம் அம்லா பவுடர் மற்றும் 10 கிராம் மெதி பொடிஆகியவற்றை நீரில்  கலந்து  ஒரு தளர்வான பசையை செய்து, கொள்ளுங்கள் அதை ஷாம்பூவாகப் பயன் படுத்தலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

குளியலின்போது  எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை ஆயுர்வேதம்  பட்டியலிடுகிறது. சாப்பிட்ட பிறகு ஒரு மணிநேரத்திற்கு குளிக்கக்கூடாது. செரிமானத்திற்குத்  தேவைப்படும்  வெப்பநிலையைக் குளியல் தடுத்து விடும்.  கடுமை யான வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாந்தி, நாள்பட்ட ஜலதோஷம்,சைனடிஸ், மூச்சுக் குழாய் அழற்சி, காது, கண் அல்லது தொண்டை தொற்று மற்றும் கடுமையான குடல் தொந்தரவுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது நீங்கள் குளியலைத்  தவிர்க்க வேண்டும்.

இதை எழுதிய  டாக்டர் நிஷா மணிகண்டன் வாழும் கலையின் , மூத்த ஆசிரியர் மற்றும்  பஞ்சகர்மா சிகிச்சை முறைகளின் சர்வ தேச  ஆசிரியருமாவார். இந்த கட்டுரையை  நீங்கள் விரும்பினால், எங்களுக்கு webteam.india@artofliving.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு  எழுதவும்;  அல்லது உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.