தோல் தளர்வைத் தடுத்துப் பராமரிக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்

தோல் தளர்வைத் தடுத்துப் பராமரிக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்

 

 https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/styles/unity_carousel_inner/public/achievement_carousel_image/SSAP-Anti%20Aging.jpg?itok=YCokYrYm

 

வயது முதிர்வதிலிருந்து காத்துக் கொண்டு இளமையாகத் தோற்றமளிக்கும் ஆசை  தொன்று தொட்டு மனிதனுக்கு மிகப் பெரிய சவால் ஆக இருந்து வருகிறது. பாரம்பரிய இந்திய மருத்துவத்துடன்  ஆயுர்வேத வயது முதிர்வு எதிர்ப்பு மருந்துகளை இணைத்த நவீன தொழில்நுட்பத்திற்கு நன்றி - ஆயுர்வேதம் , இதன் மூலம் முடிவில்லாத சாத்தியக்கூறுகளை  அளித்து அழகு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கையின்  புதிய பகுதிகளைத்  திறக்க உதவுகிறது.

தோல் பராமரிப்பு மற்றும் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மூலிகை கொள்கை களைப் பற்றிய பரந்த அளவிலான தகவலை ஆயுர்வேதம்  வழங்குகிறது.  இது வயது முதிர்ச்சியால் ஏற்படும் தோல் தளர்ச்சியை தடுக்கும் இயற்கைப் பொருள் களைக் கொண்ட  தயாரிப்புகள், மற்றும் நுட்பங்களை வளர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய உதவுகிறது. ஏராளமான ஒப்பனை நிறுவனங்கள் தளரும் சருமத்தைக் காக்கும்  அழகு சாதனங்களை உருவாக்க ஆயுர்வேத அறிவுரைகளை பயன்படுத்துகின்றன.   ஆக்சிஜன் அடங்கிய செல்கள்  பாது காப்பு,  மற்றும் தோல்  பகுதியில் பல நன்மைகளை வழங்குவதற்கு 'உள்ளிருந்து அழகான வடிவம் ' பெறும் எதிர்கால நிலைமையை இது வடிவமைத்துத் தருகிறது.

இன்றைய நுகர்வோர் வயது முதிர்வினால் ஏற்படும் தோல் தளர்ச்சித்  தடுப்புக்கு எந்தவொரு பக்க விளைவுகளும் இன்றி இருக்கும் அழகு சாதனப் பொருட்களுக்கே   முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, இயற்கை  மற்றும் நல்வாழ்வு  என்பது  30-35 வயதுள்ள  நுகர்வோரின்  இலக்கு ஆகிறது. ஆயுர்வேதம் இந்தியாவில் நடைமுறையில் உள்ள பழமையான மருத்துவ மரபு களில் ஒன்றாகும்.  ஒரு தத்துவார்த்த மற்றும் அனுபவ ரீதியான அடிப்படை உள்ளதும் ஆகும்.  வயது முதிர்வால் ஏற்படும் தோல் தளர்வு மற்றும் தொடர்புடைய நிலைமைகளுக்கான பல சூத்திரங்கள் உள்ளன. ஆரோக்கியம் மற்றும் தோல் அழகுக்கான  200 மூலிகைகள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு களை அச்சூத்திரங்களின் விளக்கவுரைகள் விவரிக்கின்றன.

ஆயுர்வேத முறை அதிக அளவில்  பிரபலமடைந்து, தோல் இறுக்கத்திற்கும், பல் வேறு மருத்துவ பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாகிறது. இது லேசர் முறையில் தோல் இறுக்கம் ஏற்படுத்துதல் போன்ற நவீன தோல் பராமரிப்பு மற்றும் இறுக்கமான தோல் செயல்முறை தொழில் நுட்பங்களால் ஏற்படும்  தோல் நிற மாற்றம், வீக்கம், சிராய்ப்புண், மருந்து தொடர்பு போன்ற ஆபத்துக்களுக்கும் தீர்வாகிறது.

மக்களின்  கோரிக்கைக்கு இணங்கி, ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத பஞ்சகர்மா அளித்து வரும்  தோல் பராமரிப்பு சிகிச்சைகள் பிரத்தியேகமாக பல்வேறு இயற்கை நுட்பங்களைக் கொண்டு சருமத்தை இறுக்கமாக்குவதற்கு உதவுகிறது. இத்தகைய சிறப்பு மற்றும் நன்கு அறியப்பட்ட சிகிச்சைகளில் ஒன்று 'காயா லெப்பம்' ஆகும். காயா லேப்பம் என்பது  பால், அரிசி சாறு, மற்றும் மூலிகை பொடிகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன் ஒரு அதிவேக சிகிச்சை முடிச்சு செயல்முறை ஆகும்.  இந்த சிகிச்சை முடிச்சு, மடிந்த  செல்களை அழிக்க உதவுகிறது, இது தோலின் நிறத்தை மேம்படுத்துவதோடு தோலை இறுக்கமாக்குகிறது. காலம்காலமாகப் பரிசோதனைக்குட்பட்டுள்ள  இயற்கை யான இச்சிகிச்சை முறையில்  ,  கரிம தோட்டங்களிலிருந்து   கையால்  தேர்வு செய்யப் பட்ட பழமையான ஆதார மூலிகைகள்  உடனடியாக பயன்படுத்தப்  பட்டுப் புதிதாகத் தயாரிக்கப் படுகின்றன.

கூடுதலாக, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு ஆயுர்வேத தோல் பராமரிப்பு சிகிச்சைகள்  உள்ளன.  ஆயுர்வேத தோல் பராமரிப்பு சிகிச்சையில் சில இங்கே அளிக்கப் பட்டிருக்கின்றன:

  • டார்வி  லெப்பம் அல்லது மஞ்சள் உடல் உறை : இது ‘ஹரித்ரா கந்தா’ மற்றும் அற்புதமான மூலிகைகள் ஆகியவற்றின் கலவையாகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும்  தோலையை மென்மையாக்கி, முழு உடலுக்கும்   ஒரு இயற்கை சுத்திகரிப்பு முறையாக  செயல்படுகிறது, இதன் விளைவாக தோல்  ஒரு பிரகாசமான நிறத்தை அடைகிறது.
  • ஹரிடகலேபம் அல்லது பசுமையாக உடல் உறை:   ஒரு அதிசய சிகிச்சையான  இதில்,  நமது கரிம தோட்டத்திலிருந்து ' அதிசய மரம் ' என்றழைக்கப் படும் மோரிங்கா ஓலீஃபெரா மர  இலைகள்   கையால் சேகரிக்கப் பட்டு, பவித்ரா சுக்ஷோசான்  ஜலம்  சேர்க்கப் பட்டு, ஒரு நறுமண மிக்க பசை புதிதாக தயாரிக்கப் படுகிறது.  வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த , ஹரிடகலேபா திறமையாக  ஆக்ஸிஜனேற்றிகளை சரும செல்களுக்கு அளித்து, ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றை நிறைத்து, தோலை சுத்தப்படுத்துகிறது.
  • காயா லெப்பம்  : அரிசி சாறு, மூலிகை பொடிகள், தேங்காய் மற்றும் பாதாம் பால் ஆகியவை அடங்கிய ஒரு தனிப்பட்ட கலவை தோலை இறுக்கமாக ஆக்கும் ஒரு கவர்ச்சியான சிகிச்சை  செயல்முறை. மடிந்து விட்ட செல்களை நீக்கி,தோல்  நிறத்தை  அதிகரித்து  தோலை இறுக்கமாக்குகிறது.
  • தேன் மற்றும் எள் உடல் உறை: இயற்கையான  தேன் மற்றும் எள்  கொண்ட ஒரு மென்மையான தோல் உறை. இது மந்தமான மடிந்து விட்ட தோல் செல்களை அகற்றி விடுகிறது.
  • வேப்பிலை உடல் உறை: குளுமையான வேப்பிலைகளிருந்து தயாரிக்கப் படும் இது, மென்மையான யூகலிப்டஸ் எண்ணெயுடன் சேர்த்துத் தயாரிக்கப் பட்டது. தெய்வீக அம்ரிதம்  என்று கருதப் படும் இது சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட தோல் சுருக்கம், மற்றும் வலி ஆகியவற்றை நீக்கி , உங்கள் தோல் மென்மையாகவும், பிரகாசமாகவும் இருக்க வைக்கிறது.
  • பழ உடல் உறை : புதிய கரிம பழக்  கூழ் , சுத்தப்படுத்திகள் மற்றும் எண்ணெய்கள் அடங்கிய இந்த உடல் உறை கலவை நச்சுக்களை நீக்கி ஈரத்தன்மையை அளிக்கிறது. இது உங்கள் உடலை மென்மையாக்கி  ஆரோக்கியமான இளைமை மிகுந்த உணர்வை ஏற்படுத்தும்.
  • காய்கறி உடல் உறை: செறிவூட்டப்பட்ட காய்களைப் பயன்படுத்தி தயாரிக்கப் படும் இந்த உறை, தோலுக்கு ஒரு நல்ல தொனி, மற்றும் பிரகாசத்தை அளிக்கிறது.
  • சந்தன உடல் உறை : புதிதாக அரைக்கப் பட்ட சந்தனத்திலிருந்து உருவாக்கப் பட்ட இந்த சிறந்த உடல் உறை, ஆண்டிபயாடிக் தன்மையுடன், தோலின் கரும்புள்ளிகளை அகற்றி பிரகாசிக்க வைக்கிறது.

இந்த பழங்கால சிகிச்சை முறைகளின் விளைவாக தோல் மென்மையாகவும், புத்துணர்வுடனும் ஒளிரும். வயதான அறிகுறி இல்லாமல் புதுமலர்ச்சியுடன் இளமையாக உங்களைத் தோற்றமளிக்கச் செய்யும்.

ஆயுர்வேதத்தின்  படி, சரியான ஈரப்பதம் இன்மை   (கப சமநிலையின்மை ), பல்வேறு இரசாயன மற்றும் ஹார்மோன் எதிர்விளைவுகளை ஒருங்கிணைக்கும் வளர்சிதை மாற்ற வழிமுறைகளின் செயல்திறன்மிக்க செயல்பாடு குறைவு (பித்த சமநிலையின்மை) சருமத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்கு சரியான ரத்த ஓட்டமும் சத்துக்களும் இல்லாமை  (வாத சமநிலையின்மை ) ஆகிய   பல காரணிகள் தோல் ஆரோக்கியத்தையும் இளமைத்தன்மையையும் தீர்மானிக் கின்றன.

ஒரு பயனுள்ள ஆயுர்வேத  ஒப்பனை இந்த மூன்று பகுதிகளுக்கும் ஆதரவ ளிக்கிறது. வாத வகைத் தோல் இளமையாக இருக்க,   ஈரத் தன்மையுடன்,  சுருக்கங்கள் மற்றும் சீக்கிரமே ஏற்படும் முதிர்வு நிலையைத் தவிர்ப்பதற்கு தகுந்தவாறு சத்துக்களைப்  பெறுதல் வேண்டும்.  சூடான எண்ணெய் மசாஜ் மற்றும் இயற்கையான  ஈரப்பதமூட்டிகள் இதற்கு   உதவும். பித்த வகைத்  தோல் வகைக்கு , நல்ல சன்ஸ்கிரீன் கிரீம்  மற்றும் நல்ல முக தோல் எண்ணெய்கள் ஆகியவற்றைப்   பயன்படுத்த வேண்டும். கப வகைத்  தோல் பராமரிப்புக்கு ,  தினசரி சூடான எண்ணெய் மசாஜ் மற்றும் மென்மையான தோல் தூய்மைப்படுத்துதல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு,  91 80 32721298, 91 9620211000 ஆகிய எண்களுக்கு தயவு செய்து அழைக்கவும்: அல்லது  onguestrelations@ssapd.org. என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.