தியானத்தின் ஆற்றுப்படுத்தும் ஆற்றல் (Power Of Meditation in tamil)

Benefits of meditation

தியானத்தின் போது, ஆற்றுப் படுத்துதல் நிகழ்கின்றது. மனம் சாந்தமாகவும் முழுமையான திருப்தியுடனும் இருக்கும் போது அது ஒரு ஒளிக்கீற்றைப் போன்று இருக்கும். மிக அழகானது, ஆற்றுப் படுத்துதல் நிகழும்.- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

நலமான மொட்டே மலர முடியும். அது போன்றே நலமான இருப்பே வெற்றியினை அடைய முடியும்.

ஆகவே நலமாக இருப்பது என்பது என்ன?

முற்றிலும் சரியான உடல் நிலை, மனதில் அமைதி,நிதானம், உணர்ச்சிகளில் அசையாமை ஆகியவற்றுடன் இருத்தல் ஆகும்.ஸ்வஸ்த்ய என்றால் உடல் நலன். இது ஒருவருடைய ஆத்மாவையும் குறிக்கிறது. ஸ்வஸ்த்ய உடலையும் மனதையும் மட்டும் குறிப்பிடுவது அல்ல, மேய்யுனர்வுடனும் அது தொடர்புள்ளது. மெய்யுணர்வு தெளிவாக இருக்கும்போது நலன் அதிகரிக்கும்.

தியானம் ப்ராணா வை(உயிர் சக்தி) அதிகரிக்கும்

ப்ராணா என்னும் உயிர் சக்தி, உடல்,மன நலனுக்கும் நல்ல வாழ்விற்கும் அடித்தளம்.தியானத்தின் மூலம் ப்ராணா வினை அதிகமாக அடையலாம். உடலில் அதிகப் ப்ராணா இருக்கும் போது நீங்கள் எச்சரிக்கையுடன், ஆற்றலுடன், சந்தோஷமாக இருக்கிறீர்கள். ப்ராணா வின் குறைவு சோம்பல் மந்தம் உற்சாகமின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.

தியானத்தின் மூலம் நோய்களை கையாளுதல்

நோய்களுக்கு மூல காரணம் மனம் மற்றும் மெய்யுணர்வு என்று கூறப் படுகிறது. மனதை கவனித்து, தொல்லைகளிலிருந்து விடுவித்து, விட்டால் நோயிலிருந்து மீட்பு விரைவாகும்.நோய்கள்:

  • இயற்கையினை மீறுதல்- உதாரணமாக அதிக உணவு ஏற்றல்
  • இயற்கையால தரப்படுவது- தொற்றும் ஜலதோஷம்
  • கர்மாவின் கடந்த கால எண்ணப் பதிவுகள் வெளியேறல்

இவற்றால் ஏற்படக் கூடும்.

இயற்கையே இவற்றுக்கு சிகிச்சையையும் அளிக்கின்றது. உடல் நலனும் பிணிகளும் உடல் இயல்புகளே ஆகும்.தியானம் பயிற்சி செய்வதன் மூலம் அழுத்தங்கள், கவலைகள், பட்டங்கள் அனைத்தும் வீழ்ந்து, நேர்மறையான மனநிலை ஏற்படுகின்றது.அது உடலில் மூளையில்,மற்றும் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தி, நோய்கள் மறைகின்றன.

இவை உடல் இயல்புகள்.நீங்கள் அவற்றைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாம். உடல் நலக் குறைவினைப் பற்றி அதிகக் கவலைப் பட்டால் உங்கள் ஆற்றலை அதற்கே அளித்து, நோய்க்கு சக்தியை அதிகரிக்கின்றீர்கள். அதை மனதில் கொண்டு, நேர்மறையான மன நிலையினை ஏற்றுக் கொண்டால் நோய்கள் மறைந்து விடும்.

  • தியானத்தின் மூலம் மனதை ஆற்றுப் படுத்துங்கள்.
  • தியானம் உடலில் சேர்ந்துள்ள அழுத்தத்தினைக் குறைத்து, மேலும் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கின்றது.உடல் நலன், மகிழ்ச்சி, நேர்மறை மன நிலை ஆகியவை சேர்கின்றன.
  • தியானப் பயிற்சி,மனதிற்கு குளிர்ச்சியினை ஏற்படுத்துகிறது. முழுமையான உடல் மன அமைப்பினைப் பழுது பார்த்தல் போன்றதாகும் இது.

தியானத்தின் மூல உணர்ச்சி தூய்மைக் கேட்டினை விலக்குங்கள்

சோர்வாக இருக்கும் மக்கள் அபராதம் கட்ட வேண்டிய நிலை வருங்காலத்தில் வரலாம், ஏனெனில், அவர்கள் உணர்ச்சித் தூய்மைக் குறைவினை ஏற்படுத்துகின்றனர்.! உங்கள்சி சுற்றி இறக்கும் மக்களிடமிருந்து நீங்கள் கேட்கும் சொற்கள் உங்களுடைய மன நிலையைப் பாதிக்கிறது. அமைதியையும் மகிழ்ச்சியையும் அவை தரலாம், அல்லது தொல்லைகளையும்( பொறாமை, கோபம், வெறுப்பு, வேதனை) தரலாம். மனம் மெய்யுணர்வில் ஆழ்ந்திராததால், மைய நிலையில் இல்லாததால், நீங்கள் பாதிக்கப் படலாம். தியானம் இத்தகைய உணர்ச்சி மாசுக்களைக் கட்டுப் படுத்தும் திறவு கோலாக அமைகின்றது.

தியானத்தில் மலர்ந்தெழுங்கள்

தியானம் ஆன்மீக மாற்றத்தை எடுத்து காரும். வாழ்க்கையினைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும்போது,இந்தப் படைப்பின் மர்மங்கள் அவிழ்கின்றன.மனதில் பல கேள்விகள் எழுகின்றன.வாழ்க்கையின் பொருள் என்ன? அதன் நோக்கம் என்ன? இந்த உலகம் என்ன? அன்பு என்ன? ஞானம் என்பது என்ன ?.....

இந்தக் கேள்விகள் எழும்போது, நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று தெரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கேள்விகள் புரிந்து கொள்ளப் பட வேண்டும்.இதற்கான விடைகள் புத்தகங்களில் கிடையாது.நீங்கள் வாழ்ந்து மாற்றத்தினை காண வேண்டும்.அதுவே சரியான நலன், உங்களுக்குள்ளேயே மாற்றத்தினை அடைகின்றீர்கள்.மொட்டு முற்றிலும் மலர்ந்த மலராகின்றது.

தியானத்தின் மூலம் உலகையே ஆற்றுப் படுத்துங்கள்

தியானம் சூழலை தூய்மைப் படுத்துகின்றது. தியானமும் சுதர்சனக் க்ரியாவும் மக்களிடமுள்ள ஆக்கிரமிப்பு வன்முறை ஆஞவற்றை அன்பு அக்கறை என்று மாற்றுகின்றது.உதாரணமாக, கோபமாக ஒருவர் இறக்கும் அறைக்குள் நுழைந்தால் எவ்வாறு உணருகிறீர்கள்? அதே கோப உணர்வல்லவா?

அதே போன்று நிள்ளனக்காமான மகிழ்வான செயல்பாடுள்ள இடத்தில் நீங்களும் மகிழ்ச்சியாக உணருகின்றீர்கள். இது ஏன் என்று நீங்கள் அதிசயிக்கலாம். அது முற்றிலும் சூழலிலேயே அடங்கியிருக்கின்றது. ஏனெனில் மனம் ஐந்து மூலக்கூறுகளைக் காட்டிலும் நுண்ணியது. ( நிலம், நீர், நெருப்பு காற்று மற்றும் ஆகாயம்) ஓரிடத்தில் நெருப்பு ஏற்பட்டால் அங்கு மட்டும் சூடு அல்ல, அந்த இடமெங்கும் அனல் பறக்கின்றது.

குறிப்பு:நீங்கள் மகிழ்வற்று சோர்வாக இருந்தால் நீங்கள் மட்டும் அவ்வாறு உணர்வதில்லை,அதை சூழல் முழுமைக்கும் பரப்புகின்றீர்கள்.

இப்போதைய சண்டைகள் மற்றும் நோய்கள் நிறைந்த உலக நிலையில், ஒவ்வொரு நாளும் தியானம் செய்ய வேண்டியது முக்கியமாதாகும். தியானத்தின் மூலம் எதிர்மறை அதிர்வலைகளை ரத்து செய்து ஓர் ஒத்திசைவான சூழலை உருவாக்க முடியும்.

ஆற்றுப்படுத்தும் மூச்சும் தியானமும்

வாழும் கலையின் சிறந்த ஆபரணம் சுதர்சனக் க்ரியா. என்னும் ஆற்றுபடுத்தும் மூச்சுப் பயிற்சியாகும்.

  • தனித்துவம் வாய்ந்த இந்தப் பயிற்சி ஆற்றல் தரும் சக்தியாகும்.
  • ஒவ்வொரு செல்லும் முழுமையான ஆக்சிஜனைப் பெறுகிறது.
  • உடலிலிருந்து எதிர்மறை உணர்ச்சிகளை வெளியேற்றுகிறது
  • இறுக்கம் , விரக்தி மற்றும் கோபத்தினை அகற்றுகிறது
  • பதட்டம் சோர்வு மற்றும் சோம்பலை விரட்டுகிறது
  • மனம் உடல் இரண்டிற்கும் ஓய்வினைத் தருகிறது

பயிற்சிக்குப் பின்னர் ஒருவர் சாந்தமான மையமான தெளிவான மனம் பெறுகிறார். மகிழ்வுணர்வு மேலோங்கி, உள்ளத்திலிருந்து சிரிக்க முடிகிறது.

ஆற்றுப் படுத்தும் மூச்சுப் பயிற்சியையும் தியானத்தையும் செய்யுங்கள். இவை உங்களை முற்றிலும் மாற்றும் உங்களுள் ஆழத்திலுள்ள அன்பினை தூண்டும்.