தியானத்துடன் உங்கள் காலைப் பொழுதை குதித்தெழுந்து துவக்குங்கள் (Morning yoga meditation routine in tamil)

உடற்பயிற்சி மையத்தில் கடும் பயிற்சி செய்து தசைகள் கட்டியமைத்தல், அல்லது ஓடுபொறியில் ஓடுதல், அல்லது பளு தூக்குதால் இவைதாம் நம்மை மகிழ்ச்சியாக இருக்க வைக்க முடியும் என்றால் எப்படியிருக்கும்? சந்தோஷமாக இருப்பது என்றால் என்ன? நாம் என்ன நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க பயிற்சி செய்ய முடியாதா என்ன? மூடிய கண்களுடன் ஊற்றுக்கண்ணாக சந்தோஷம்அடைய முடியாதா என்ன? தியானம், என்பது ஆழ்ந்து சுயத்தின் உள்ளேயே சென்று ஓர் உற்சாக அனுபவம் மற்றும் மகிழ்ச்சி அடைய ஒரு ஆதாரமாக உள்ளது. காலை நேரத்தில் தியானம் செய்வது ஓர் மகிழ்ச்சி உயர்வினை அளித்து, நாள் முழுவதும் புன்முறுவலுடன் இருக்கச் செய்கின்றது.

ஒரு நாளின் நிகழ்வுகள் அதிகம் என்பதால்,காலை நேரமே தியானம் செய்ய மிக உகந்த நேரம். ஓர் இளம் பெண் தொழிலதிபரான கோமல் கபூர்,பெங்களூருவில் உள்ள Sweet Musings and Little Bites எனும் பேக்கரியின் உரிமையாளர் ஆவார். அவர்," காலையில் நான் தியானம் செய்யும்போது, குறைந்த நேரத்தில் நாள் முழுவதும் அதிகம் சாதிக்கின்றேன்.நாள் முழுவதும் இளைப்பாறியும் சாந்தமாகவும் இருக்கின்றேன்" என்று கூறுகிறார். இதே போன்று பலர் தெளிவான மனம்,உல் அமைதி, மகிழ்வான உணர்வு ஆகிய பலன்களைப்பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

காலை நேரத்தில் தியானம் செய்ய சில குறிப்புகள்:

1. உங்கள் வீட்டில் தியானம் செய்யவென்று ஓர் தனியிடத்தை உருவாக்குங்கள்.

அழகான படங்களை அங்கு மாட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த மலர்களை அல்லது செடிகளை ஓர் மேஜையில் வையுங்கள். இளம் மஞ்சள், இளம் நீளம் அல்லது இளம் பச்சை வண்ணத்தினை தேர்ந்தெடுங்கள்.வசதியான நாற்காலி, அல்லது குஷன்களுடன் கூடிய சோபா, உங்கள் தோள்களின் மீது ஒரு மெல்லிய போர்வை இவையனைத்தும் இருக்கட்டும்.

2. தியானத்திற்குப் பின்னரே காலையுணவு எடுத்துக் கொள்ளுங்கள்

இது முழு வயிற்றுடன் சோர்வடைவதைத் தடுக்கும்.

3. காலை நடைப் பயிற்சியுடன் நாளைத் துவக்குங்கள்

இயற்கையுடன் இணைந்திருப்பது உங்கள் இருப்பின் மூலத்துடன் உங்களை இணைக்கும்.தியானம் செய்வதற்கு முன்னர் காலை நேரத்தில் சற்று நடப்பது புதிய காற்றைச் சுவாசிப்பதற்கும், புல்லின் மேலுள்ள பனித்துளிகளை ரசிப்பதற்கும் உதவுகிறது. காலை நேர மிதி மற்றும் அசைவற்ற நிலையினை அனுபவிக்கவும் உதவுகிறது.

4. தியானத்திற்கு முன்னர் காலை நேர உடல் பயிற்சினைச் செய்யுங்கள்

லேசான குதித்தல், அல்லது சீரான உடற்பயிற்சி, எதுவாயினும் அவற்றை செய்து முடித்துப் பின்னர் தியானத்தில் அமருங்கள். உங்கள் தியானம் குளிர்விக்கும் மற்றும் இளைப்பாற்றும் சக்தியுடன் மனதை ஆற்றவும், செய்யும்.

5. தியானத்திற்கு முன்னர் சில யோகாசனங்களைச் செய்யுங்கள்

காலை நேர நடை, அல்லது உடற்பயிற்சி இவற்றுக்குப் பின், யோகாசனங்கள் செய்வது உங்களை இளைப்பாற்றும்:

சூரிய நமஸ்காரம்

இது ஒரு யோகாசனப் பயிற்சித் தொடர். இத்தொடரில் பல ஆசனங்கள் தொடர்ச்சியாக இப்பூமியில் நம்முயிரைக் காக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக அமைந்துள்ளன. இத்தகைய நன்றியுணர்வுடன் சாந்தமான மனதுடன் நாளைத் துவங்குவது எவ்வளவு நல்லது? காலை நேர யோகப் பயிற்சிக்கு சூரிய நமஸ்காரம் ஓர் நல்ல துவக்கம்.

ஹா மூச்சு:

தோள்கள் நிலையில் கால்கள் விரிந்திருக்கும்படி நின்று கொள்ளுங்கள்.உங்கள் கைகள் தளர்வாக பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்கட்டும்.நீண்ட ஆழமான மூச்சுடன்,இரு கைகளையும் இடது புறம் சுழற்றி எடுத்து வாருங்கள். மூச்சினை வெளிவிடும்போது, ஹா என்னும் உரத்த சப்தமெழுப்பி,உங்கள் கைகளை வலது புறமாக தளர்வாக எறியுங்கள். இதே போன்று அடுத்த திசையிலும் செய்யுங்கள்.

உயிர் மூச்சு

தோள்கள் நிலையில் கால்கள் விரிந்திருக்கும்படி நின்று கொள்ளுங்கள்.மூச்சு உள்ளிழுக்கும்போது, உங்கள் கைகளை பக்க வாட்டில் நன்றாக விரித்து உள்ளங்கை மேல்புறமாக இருக்கட்டும்.மூச்சு விடுங்கள்.கைகள் பின்புறமாக திரும்பி,,உங்கள் தலை மேல்நோக்கி, கூரையைப் பாருங்கள் ஆழ்ந்த மூச்சினை உள் எடுங்கள்.மூச்சை வெளிவிடும் போது, மார்பு வரையில் தலையைகுனிந்து,உங்கள் இரு கைகளையும் உங்கள் தோள்கள் மீது பரப்பி, உங்களை அணைத்துக் கொள்ளுங்கள்.மீண்டும் மூச்சினை உள்ளிழுத்து, இதே போன்று இரண்டு அல்லது மூன்று முறை செய்யுங்கள்.

இந்த யோகாசனம் உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.உடல் வலுவையும் அதிகரிக்கின்றது. மேலும் மங்களம், தைரியம், அருள் மற்றும் அமைதியினை தருகின்றது.

இந்த யோகப் பயிற்சி, உங்கள் மன மற்றும் உடல் சமநிலையை அதிகரிக்கின்றது.சீரணத்தை மேம்படுத்தி,பதட்டத்தைக் குறைக்கிறது.

இந்த யோகாசனம், முதுகின் அனைத்துத் தசைகளையும் நீட்டுவித்து, நரம்பு மண்டலத்துக்குப் புத்துயிர் ஊட்டுகின்றது.

 

 

இது கீழ் முதுகினையும் , தொடைகளின் தசைகள் இடுப்பு தசைகள் ஆகியவற்றை நீட்டுவிக்கின்றது. தவிர, அடி வயிற்று மற்றும் இடுப்பு உறுப்புக்களை மசாஜ் செய்கின்றது.

இந்த ஆசனம், முதுகினை இளக்கமாக வைக்கின்றது. மேலும் மார்பினைத் திறந்து நுரையீரல்களுக்கு ஆக்சிஜென் கிடைப்பதை அதிகரிக்கின்றது.

 

யோகா நித்ரா

அனைத்து யோகாசனங்களையும் செய்து முடித்த பின்னர் இதைச் செய்யவும்.நிமிர்ந்து படுத்துக் கொள்ளுங்கள். உடல் தளர்வாகவும், கண்கள் மூடியும் இருக்கட்டும்.

 

6. தியானம் செய்வதற்கு முன்னர் ப்ராணா யாமம் செய்யுங்கள்.

சமஸ்க்ருதத்தில் ப்ராணா யாமா என்றால் "உயிர் சக்தியின் விரிவாக்கம்" என்பது பொருளாகும். ஒரு சில ப்ராணா யாமப் பயிற்சிகள் தியானத்திற்கு முன்னர் செய்வது உடல் மனம் இரண்டையும் புத்துணர்வுடன் தியானத்திற்குத் தயார் செய்யும்.

7.நீங்கள் தியானதிற்குத் தயாரானவுடன் உங்கள் தேர்வு செய்யப் பட்ட தியான இடத்திற்குச் சென்று வசதியாக அமருங்கள்.

ஒரு வழிகாட்டுதலுடன் இணைந்த தியான அனுபவம் பெற இங்கு க்ளிக் செய்யுங்கள்.

8. தியானம் செய்த பின்னர், சில நிமிஷ நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். பின்னர் உங்கள் அன்றாட வேலைகளைத் துவக்குங்கள்.

நீங்கள் ஆழ்ந்த உள்ள அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் ஒரு வலுவான வழியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.நாள் முழுவதும் புன்முறுவலுடன் இருங்கள். சீரான தியானம் மனதை சாந்தப் படுத்தும். ஆக்கத் திறனை அதிகரிக்கும். நம்பிக்கையைக் கூட்டும். எனவே தினமும் சற்று நேரம் உங்களுக்கென்றே சில நிமித தியான நேரத்தினை ஒதுக்கி, அன்றைய தினத்தை உற்சாகமாகக் கைப்பற்றுங்கள்.

 

யோகப் பயிற்சி உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகளை அளிக்கின்றது.ஆயினும் இது மருந்துகளுக்கு மாற்று அல்ல. யோகப் பயிற்சியினை ஒரு தேர்ச்சி பெற்ற வல்லுனரின் மேற்பார்வையின் கீழ் செய்வது நல்லது. ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், மருத்துவரிடமும் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரிடமும் கலந்தாலோசித்துக் கொண்ட பின்னர் யோகப் பயிற்சிகளை செய்யுங்கள். அருகிலுள்ள வாழும் கலை மையத்தில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி பற்றி விசாரியுங்கள் அல்லது info@srisriyoga.in என்னும் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்