எடையை குறைக்கும் ஆனால் வளர்ச்சியை ஊக்குவிக்கும் யோகாசனப் பயிற்சிகள்

எடையை குறைக்கும் ஆனால் வளர்ச்சியை ஊக்குவிக்கும் யோகாசனப்   பயிற்சிகள்

எடையை குறைப்பது என்பது ஒரு சிலருக்கு பொழுது போக்காகவும், மற்றும் சிலருக்கு மிக கடினமானதாகவும்  இருக்கும். சிலர் உடல்  பயிற்சி கூடத்திற்கு செல்வர்; வேறு சிலரோ உணவைக்  குறைத்து கொள்வர்; சிலர் மாத்திரைகளை உட்கொள்வர். சில சமயங்களில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணமே கெடுதலாக அமையும்.

உடல் எடையை குறைப்பது முக்கியம் என்றாலும் அதை விட முக்கியம் அதை சரியான வழியில் குறைப்பது.

உயிர் சக்தி ஓட்டத்தை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் எடையை குறைப்பதே பாதுகாப்பான வழி. உணவு உட்கொள்வதைக் குறைப்பதைவிட உயிர் சக்தியை அதிகரிப்பதே சிறந்தது. இங்கே சில உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. அவை உங்களுடைய எடையை குறைக்க உதவும்.

யோகாசனமும் பிராணாயாமமும்

யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. யோகா என்றால் உடல், மூச்சு, மனம் இவற்றை ஒருங்கிணைப்பது என்று பொருள். நாம் உட்கொள்ளும் உணவு, நம் மன நிலை, நமது சுவாசம் இவற்றில் ஒரு விழிப்புணர்வை கொடுக்கிறது. நம் உடலில் சுரக்கும் சுரப்பிகள் சரியாக வேலை செய்கிறது. யோகா நம்முடைய சதையை வலுவாகவும் பொலிவாகவும் செய்கிறது.

கீழே சில யோகாசன பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கபாலபாதி பிராணாயாமம்

*  உயிர் ஊட்ட ச் சக்தியை அதிகரிக்கிறது 

* வயிற்றின் உட்பகுதிகளை வலுவடையச்   செய்கிறது

* ஜீரண சக்தியை அதிகரிக்கிறது

* நல்ல வலுவான அதே சமயம் மெலிதான வயிற்று பகுதியை உண்டாக்கும்

 

 

 

 

ஏக பாத ராஜா கபோதாசன

* வயிற்று பகுதியை வலுவடைய செய்யும்

* ஜீரண சக்தியை அதிகரிக்கிறது

* ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

உட்கடாசனம்

 

* தொடை, முழங்கால், மற்றும் கால்களை வலுவடைய செய்கிறது

* அதிகமான கொழுப்பு சத்தைக்  குறைக்கிறது

* உடலின் தோற்ற நிலையை சரி செய்கிறது

 

உஸ்த்ராசனம்

 

* ஜீரண சக்தியை அதிகரிக்கிறது

* வயிற்றின் உட்புற பகுதிகளை வலுவடைய செய்கிறது

* இடுப்பு பகுதியை வலுவடைய செய்கிறது

உயிர் சக்தியை அதிகரிக்க சில உணவு வகை உபாயங்கள்

* ஒமேகா 3  அதிகமாக உள்ள உணவை உட்கொள்ளலாம்

* இயற்கையான டீயை அருந்தவும்

* காலை உணவு மிக சிறந்த ஊட்ட சத்துடன் இருக்க வேண்டும்

* சிறு சிறு அளவில் பல முறைகள் சாப்பிடுவது நல்லது

* கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்கவும்

* நிறைய தண்ணீர் குடிக்கவும்

* முழு தானியங்களும், கீரைகளும், கொழுப்பு சத்து குறைந்த உணவையும் உட்கொள்ள வேண்டும்

 

உடற் பயிற்சி

காலையில் எழுந்து ஓட வேண்டும். எடையை குறைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம்  20 நிமிடங்களாவது ஓட்டப்  பயிற்சி செய்ய வேண்டும். பிறகு மெதுவாக அதிக நேரம் ஓடலாம்.  இது  நல்ல வலுவான உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்

எடை தூக்கும் பயிற்சி

உடல் எடையை குறைக்க இந்த பயிற்சி உதவும். இதை தினமும் 30 - 40 நிமிடங்கள் செய்யலாம் . உடல் வலிவடைவதுடன் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்ளவும் தோன்றும்

தியானம்

உடலை விட மனம்  வலிமை ஆனது என்பதற்கு எடுத்துக்காட்டாக மாற்றுத்  திறனாளி களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் . உடல் எடையை குறைக்க மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது முக்கியம். யோகாசனத்திற்கு பின் 20 நிமிடங்கள் தியானம்  செய்வது நல்லது. இதனால் புத்தி கூர்மையாக இருக்கிறது. உங்களை மெலிந்த உருவமாக மனத்திரையில் பார்த்து கொள்ளலாம்.

தியானம் செய்வதால் தமஸ் ரஜஸ் குணத்திலிருந்து சத்வ  குணத்திற்கு மனம்  செல்வதால் சரியான உணவையே உட்கொள்ள தோன்றும்.

உணவுண்ணுதல்   -    குறைத்து சாப்பிடவும்;  எளிமையாக சாப்பிடவும் ; அடிக்கடி சாப்பிடவும்.

எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பதில் பல் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் எல்லா உணவை விட  சைவ உணவே சிறந்தது ஆகும்.  சைவ உணவினால் அனாவசிய கொழுப்பு சத்து குறைகிறது; ஜீரண சக்தி அதிகரிக்கிறது. மேலும் உயிர் ஊட்ட சக்தி அதிகரிக்கிறது . உணவை சிறு சிறு பகுதிகளாக அடிக்கடி எடுத்துக் கொள்வதால் நாம் பட்டினி இருக்கிறோம் என்ற எண்ணம் குறைகிறது.

உங்கள் உடல் உங்களுடைய மனதை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. புத்தி கூர்மையாக இருந்தால் உடலும் வலுவாக இருக்கும்.

இன்னும் எடை குறைப்பதற்கு ஏதாவது மாயா ஜால வித்தைகள் வேண்டும் என்றால் அவை அனைத்தும் இங்கே மேலே கூறப்பட்டுள்ளன !