கோண தோற்ற நிலை (கோணாசனா)(The Angle pose (konasana))

கோண : கோணம்; ஆசனா: தோற்ற நிலை

 

 

எவ்வாறு கோணாசனா செய்வது?

  • இடுப்பளவு கால்களை அகற்றி வைத்துக் கொண்டு நேராக நில்லுங்கள். கைகள் பக்கவாட்டில் உடலையொட்டி இருக்கட்டும்.
  • மூச்சை உள்ளிழுத்து விரல்கள் கூரையை நோக்கியிருக்குமாறு இடது கையை மேலே தூக்குங்கள.
  • மூச்சை வெளியேற்றி, உடலை முதுகுத் தண்டிலிருந்து வளைத்து சிறிது சிறிதாக வலது புறமாக வளையுங்கள்.
    இடது கை மேல்நோக்கியே இருக்கட்டும்.
  • தலையை திருப்பி மேலே உயர்ந்திருக்கும் இடது கையை பாருங்கள். கைமுட்டுக்கள் நேராகவே இருக்கட்டும்.
  • மூச்சை உள்ளிழுத்து உங்கள் முதுகையும் உடலையும் நேராக்குங்கள்.
  • மூச்சை வெளியே விட்டு இடது கையை கீழே எடுத்து வாருங்கள்.
  • இதே போன்று வலது கையை உயர்த்திச் செய்யுங்கள்.

 

கோண ஆசனாவின் பயன்கள்

  • உடலில் பக்கவாட்டுப் பகுதிக்கையும் முதுகெலும்பையும் நீட்டுகிறது.
  • கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியை சீராக்குகிறது.
  • முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது.
  • மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது.
  • ஸியாடிகாவினால் அவதியுறுவோருக்கு உதவுகிறது.

 

குறிப்பிட்ட ஆசன உபயோகத்துக்கு எதிரான அறிகுறி

  • மிக அதிக முதுகு வலி மற்றும் முதுகெலும்பு மூட்டுகளில் அழற்சி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்த்து விடவும்.

 

 

 

நின்று செய்யும் அனைத்து தோற்ற நிலைகளையும் காண்க - 10 Standing yoga asanas that increase strength & balance

<< Sideways Bending Using Both Arms Corpse Pose >>

 

(யோகா ஆசனங்கள்)

யோகப் பயிற்சி உடலையும் மனதையும் ஊக்குவித்து ஏராளமான உடல்நல பயன்களை அளிக்கின்றது. ஆயினும் இது மருந்துகளுக்கு மாற்று அல்ல. தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகா பயிற்சிகளைக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஏதேனும் மருத்துவ நிலை இருந்தால், யோகா தோற்ற நிலைகளை மருத்துவரை மற்றும் யோகப் பயிற்சி ஆசிரியரைக் கலந்தாலோசித்த பின்னர் செய்யவும். உங்களுக்கு அருகாமை யிலுள்ள வாழும் கலை மையத்தில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி பற்றிக் கண்டறியுங்கள்.மேலும் விபரங்கள் அறிய info@artoflivingyoga.orgஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்

Interested in yoga classes?