யோகா, தியானம், சுவாச நுட்பங்கள், அன்றாட வாழ்கைக்கான நடைமுறை ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறையின் மூலம் வாழும் கலையின் பயிற்சித் திட்டங்கள் உலகமுழுதும் பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கல்வி மற்றும் சுய மேம்பாட்டுக்கான மிகவும் பயனுள்ள இப்பயிற்சித் திட்டங்கள், மன அழுத்தத்தை நீக்கவும், உள்ளார்ந்த அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பேணவும் சக்திவாய்ந்த கருவிகளையும், நுட்பங்களையும் மக்களுக்கு வழங்குகின்றன.
