Kyc kyt children teens

நோ யுவர் சைல்ட் (KYC)

உங்கள் குழந்தையின் நடத்தையை புரிந்துகொள்ளுங்கள்

மன நலம் மற்றும் நல்ல பெற்றோராக இருப்பதை பற்றி ஆய்வுகள் என்ன சொல்கின்றன? சிறந்த பெற்றோர் ஆவது எப்படி? உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் பெறுங்கள்…

*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது

பதிவு செய்ய

நான் என்ன கற்றுக்கொள்வேன்?

icon

குழந்தைகள் நடந்து கொள்ளும் விதம்

உங்கள் குழந்தைகள் வெவ்வேறு சூழல்களில் என்ன நினைக்கிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள்.

icon

சிறந்த தகவல் பரிமாற்றம்

அவர்களிடமிருந்து எதிர்மறையான எதிர்வினைகளுக்கு மாறாக, நேற்மறையான மறுமொழிகளை பெறுங்கள்!

icon

ஆளுமை மேம்பாடு

புத்திகூர்மையுள்ள, சமூக பொறுப்புள்ள, நுண்ணுணர்வுள்ள குழந்தைகளாக எப்படி வளர்ப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

icon

விழுமியங்களை அடிப்படையாக கொண்ட குழந்தை வளர்ப்பு

காலத்தால் அழியாத மனித விழுமியங்களை உங்கள் குழந்தைகளுக்கு அளியுங்கள்.

பெற்றோருக்கான கல்வி ஏன் அவசியமாகிறது?

பெற்றோராக இருப்பது வாழ்வின் மிகப் பெரிய இன்பங்களில் ஒன்று. அதுவே உங்கள் வாழ்வின் மிகப் பெரிய பொறுப்பும் கூட. இன்றைய உலகில், பெற்றோராக இருப்பது என்பது உண்ண உணவு, உடுக்க உடை, தங்க ஒரு கூரை நிழல், மற்றும் கல்வியை மட்டும் தருவது அல்ல.

நீங்கள் விதிக்கும் நிபந்தனைகளின் படியெல்லாம் நடந்துகொள்ள குழந்தைகள் பொம்மைகள் இல்லை. இந்த உறவு இயங்கும் விதம் அவ்வளவு சுலபமானதல்ல. கூட்டு குடும்பங்கள் இல்லாத, வேகமான, தொழில்நுட்பம் சார்ந்த, தற்சார்பு நிறைந்த இன்றைய உலகத்தில், பெற்றோர்களுக்கு அறிவும், அனுபவமும் வாய்ந்த பெரியோர்களின் அறிவுரைகள் கிடைப்பதில்லை. எவராவது கைப்பிடித்து அழைத்து செல்வது உண்மையில், வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, இன்றியமையாததும்கூட. இதை மனதில் கொண்டு, நாங்கள் ‘உங்கள் குழந்தைகளை அறிந்து கொள்ளுங்கள்’ மற்றும் ‘உங்கள் பதின் வயதினரை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்புகளில் பயிற்சிப் பட்டறைகளை வடிவமைத்துள்ளோம்.

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் அறிக

நான் பயிற்சியில் சேர விரும்புகிறேன், ஆனால்…

என் குழந்தையை வளர்க்க ஒரு பயிற்சி பட்டறை தேவையா? பல தலைமுறைகளாக பெற்றோர் தாமாகவே செய்து கொண்டிருப்பது தானே இது?

மாறாக, தனி குடித்தனம் ஒரு நவீன கருத்து. முந்தைய தலைமுறைகளுக்கு, வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். மேலும் குடும்பத்தில் அனைவரும் கட்டுப்படும் சில விதிமுறைகளும் இருந்தன. இன்றைய உலகமயமான, மற்றும் தாராளமயமான உலகத்தில், வரம்புகள் அவ்வளவு தெளிவாக இல்லை. அவரவருக்கு அவரவர் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சவால்களும் பிரத்தியேகமானவை. இச்சூழலில், இப்பட்டறை உங்களுக்கு சரியான வழியை காட்டும் ஒரு விடிவிளக்காக இருக்கும்.

இரண்டு மணி நேர பட்டறை ஒன்று, குழந்தை வளர்ப்பின் பிரச்சினைகளை சமாளிக்க உண்மையிலேயே உதவ முடியுமா?

குழந்தை வளர்ப்பு என்பது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடிய ஒன்று. எனினும், இந்த இரண்டு மணி நேரத்தில், குழந்தைகளின் நடத்தை சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படை காரணத்தை நாம் ஆராய்வோம். மேலும், அவர்கள் தன் முழு திறனை எட்டுவதற்கு உதவ தேவையான புரிதலை நீங்கள் பெற உதவுவோம். உங்கள் குழந்தைகள் பெரியவர்களாக வளர, வளர, உங்களிடையே நிலவும் அழகான உறவைத் தக்க வைத்துக் கொள்ள, இந்த உள்ளீடுகள் இன்றியமையாதவை.

எந்த மாதிரி பிரச்சினைகளை கையாள எனக்கு இப்பட்டறை உதவும்?

உணவு பழக்கம், நடத்தை சார்ந்த பிரச்சினைகள், தொழில் தேர்வு (கரியர் சாய்ஸ்), சகாக்களின் அழுத்தம், தகவல்தொடர்பு மற்றும் புரிதல் இடைவெளிகள் (கம்யூனிகேஷன் கேப்), அத்தீமாக திரையை பார்த்தல் (ஸ்க்ரீன் டைம்) போன்ற பொதுவான எந்த பிரச்சினைக்கும் உதவும். இந்த பட்டறை கலந்துரையாடல் வடிவில் (இண்டெராக்டிவ்) இருப்பதால், குழந்தைகள்/பதின் வயதினரின் பொதுவான பிரச்சினைகளுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.

என் குழந்தையை நான் இப்பட்டறைக்கு அழைத்து வரலாமா?

இது பெற்றோருக்கு மட்டுமே ஆனது.

நான் வேலைக்கு போகும் பெற்றோர். பல பணிகளை சமாளித்துக் கொண்டிருக்கிறேன். இப்பட்டறையில் பகிரப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எனக்கு வேறொருவரின் உதவி தேவைப்படுமா?

இந்த பட்டறையிலிருந்து நீங்கள் பெறும் தெளிவு உங்கள் வேலை பளுவை கையாளவும், மேலும் நல்ல முறையில் உங்கள் குழந்தைகளை வளர்க்க உங்களுக்கு உதவும். உங்கள் குழந்தையின்/பதின் வயதினரின் பிரச்சினைகளை பரிவோடும் புரிதலோடும் கையாள முடிவதை உணர்வீர்கள்.

என் குழந்தைக்கு தீவரமான கவனச் சிதறல் கோளாறு இருந்தால் என்ன செய்வது? அதற்கும் இப்பட்டறை உதவுமா?

இந்நிலைக்கு, ஆலோசகரை (கவுன்சிலர்) நாட நாங்கள் பரிந்துரைக்கிறோம். எனினும், குழந்தைகளின் நடத்தை சார்ந்த பொதுவான பிரச்சினைகளின் மூல காரணத்தை குறித்த ஆய்வு, உங்கள் குழந்தையை/பதின்வயதினரை மேலும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். இது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள பந்தத்தை வலுவாக்க வழி வகுக்கும்.

என் குழந்தைக்கு ஆலோசனை (கவுன்சிலிங்) தேவையா என்பது பற்றி எனக்கு குழப்பம் உள்ளது.

’உங்கள் குழந்தையை/பதின் வயதினரை அறியுங்கள் (KYC/KYT)’ பட்டறைகள் உங்கள் குழந்தை/பதின்வயதினரின் சவாலான நடத்தைக்கு பின் உள்ள காரணங்களை கண்டுபிடிக்க உதவும். அதிலிருந்து உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.

இணைய வழி கல்வி என் குழந்தையை நிலைகுலைய செய்துவிட்டது. இப்பொழுது என் குழந்தை இணையத்துக்கும், இணைய விளையாட்டுகளுக்கும் அடிமையாகி விட்டார். இந்த பட்டறை எனக்கு வழிகாட்டுமா?

குழந்தைகள்/பதின்வயதினர் இடையே ஏதாவதொரு பழக்கத்திற்கு அடிமையாவது (அடிக்‌ஷன்) என்பது உணர்ச்சி நிலையில் ஒரு ஆழமான பிரச்சினையின் வெளிப்பாடு. இதற்கான பொதுவான காரணங்களை புரிந்துகொள்ள இப்பட்டறை உங்களுக்கு உதவும். இதற்கு நிரந்தர தீர்வாக, எங்களுடைய குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான பயிற்சிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

என்னுடைய குழந்தை ஒரு சிறப்புக் குழந்தை. எனக்கு இந்த பட்டறை உதவுமா?

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு மிகுந்த பொறுமையும், பரிவும், நேர்மறை எண்ணங்களும், ஊக்கமும் தேவை. உங்கள் குழந்தையின் அன்றாட நடைமுறைக்கான நல்ல பழக்கங்களை தெரிந்து கொள்ள இப்பட்டறை நிச்சயமாக உதவும். மேலும், பெற்றோர்களும், தங்கள் நாட்களை நல்ல முறையில் கையாளவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான சில நுட்பங்களை கற்கவும், பயிற்சி செய்யவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

கோவிட் பெருந்தொற்று என் குழந்தை/பதின் வயதினரின் அன்றாட நடைமுறைகளிலும், நடத்தையிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது. இந்த முற்றும் புதிய சூழலில், சில எதிர்மறையான மாற்றங்களை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது. இந்த பட்டறை எனக்கு உதவுமா?

நிச்சயமாக! உங்கள் குழந்தை/பதின் வயதினரின் நடத்தைக்கான மூல காரணத்தை புரிந்துகொள்ள இந்தப் பட்டறை உதவும். மேலும், தங்கள் அன்றாட நடைமுறையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவ முடியும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். பெருந்தொற்றின் சுழலில், உங்கள் குழந்தை/பதின் வயதினரின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், அவர்களின் வயதுக்கே உரிய பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள இப்பட்டறை உதவும்.