சிறைக்கைதிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தல்

உளவடு நிவாரணம் மற்றும் திறன் பயிற்சியின் மூலம் சிறைக்கைதிகளின் மறுவாழ்வு

icon

சவால்

கைதிகள் வன்முறை சூழலில் சிக்கியிருத்தல்

icon

உத்தி

கோபம், மன அழுத்தம் மற்றும் வன்முறையை குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நுட்பங்களின் மூலம் கைதிகளிடம் மாற்றத்தை கொண்டுவருதல்

icon

விழிப்புணர்வு

உலகமுழுதும் 65க்கும் மேற்பட்ட நாடுகளில் 8 லட்சம்+ கைதிகள் மற்றும் சிறை பணியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

விரைவுப்பார்வை

குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே மாறுவதற்கும், பொருள் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சிறைவாசிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் பணிபுரிபவர்கள் என்ற இருசாரார்கும் உதவும் வகையில் வாழும் கலையின் சிறைச்சாலை பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.</p

மன அழுத்தத்தை குறைக்க உதவும் நுட்பங்கள், உளவடுவை ஆற்றி எதிர்மறை உணர்வுகளைக் கையாள உதவும் நடைமுறைகள் ஆகியவற்றை கற்பிப்பதன் மூலம் இப்பயிற்சி பலர் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது.

சிறைக்கைதிகளுக்கும், வன்முறை வரலாறு கொண்டவர்களுக்கும் குற்றத்தின் சுழற்சியிலிருந்து விடுபட இப்பயிற்சி உதவுகின்றது.

சிறையதிகாரிகளுடனும், ஆயுத படையுடனும் இணைந்து பணிபுரிந்து இதுவரை உலகமுழுதும் 8 லட்சத்திற்கும் அதிகமான பயிற்சிகளை நடத்தியுள்ளோம். எங்கள் பயிற்சிகளினால் வாழ்க்கையில் மாற்றம் கண்ட பல கைதிகள் இன்று வாழும் கலை ஆசிரியர்களாக இருக்கிறார்கள். சமூகத்தில் ஒரு நேர்மறை மாற்றத்தை கொண்டுவர எங்களுடன் இணைந்து அவர்கள் பணிபுரிகிறார்கள்.

ஒவ்வொரு குற்றவாளிக்குள்ளும் ஒரு பாதிக்கப்பட்டவரின் உதவிகோறும் குரல் உள்ளது. பாதிக்கபட்டவரின் காயங்களை ஆற்றும்போது, குற்றவாளி மறைந்துவிடுகிறார்.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

சவால்கள்

பல ஆண்டுகளாக சிறையில் அடைந்திருப்பது தன்மதிப்பை இழத்தல், அதிகரிக்கும் கோபம், பதட்டம் மற்றும் விரக்திக்கு வழிவகுக்கிறது. பிற்போக்கான இக்குற்ற சுழற்சியிலிருந்து விடுபடவே முடியாது என்று கைதிகளில் பலர் நம்பத்தொடங்குகிறார்கள்.

சமூகம் அவர்களை ஏற்றுகொள்ளாத காரணத்தினால், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், சமூக நீரோட்டத்தில் இணைவது பல முன்னாள் கைதிகளுக்கு சவாலாக இருக்கிறது. ஆகவே, அவர்களில் பலர் குற்றச்செயல்களுக்கே திரும்புகிறார்கள். இது ஒரு தீமைதரும் சுழற்சியாக ஆகிவிடுகிறது.

கடினமான சூழ்நிலையில் தொடர்ந்து வேலை செய்வதால் பணிச்சுமை மற்றும் அழுத்தத்திற்கு ஆளாகும் சிறைப்பணியாளர்களுக்கு கைதிகளின் மனப்பான்மையை மாற்றுவது கடினமாக உள்ளது.

வன்முறையின் சுழற்சி

உத்தி

எங்கள் சிறைச்சாலை பயிற்சித் திட்டம் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது:

கைதிகளை உணர்ச்சி ரீதியாக குணப்படுத்துதல்:  எங்கள் சிறைச்சாலை பயிற்சித் திட்டங்களில் நாங்கள் சிறப்புவாய்ந்த சுவாச நுட்பங்களை கற்றுத்தருகிறோம். உளவடு, குற்ற உணர்வு, கோபம் போன்ற எதிர்மறை எண்ண சுழற்சிகளிலிருந்து விடுபட இவை கைதிகளுக்கு உதவுகின்றன. இப்பயிற்சித் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துவது, இது போன்ற உணர்சிகளை வெல்ல கைதிகளுக்கு உதவுகின்றது. கோபமும் மன அழுத்தமும் விலகினால், விடுதலைக்கு பிறகு, கைதிகள் வன்முறைக்கு திரும்பாமல் சமூகத்திற்கு பங்களிக்கக் கூடும்

வாழ்வாதாரம் அளித்தல்: கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலம் விடுதலைக்கு பிறகு அவர்கள் கௌரவமான முறையில் வாழ்வதற்கு வழிவகுக்கிறோம்.

சிறை அலுவலர்களுக்கு மன அழுத்த நிவாரணப் பயிற்சி: சிறை மற்றும் சட்ட அமலாக்க துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவரவும், மேலும் திறனுடன் பணி செய்யவும் உதவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை நடத்துகிறோம்.

எங்கள் மூன்று படிநிலை அணுகுமுறை

கைதிகளை உணர்ச்சி ரீதியாக குணப்படுத்துதல்

மூச்சு பயிற்சியின் மூலம்

வாழ்வாதாரமளித்தல்

தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலம்

சிறை அலுவலர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து நிவாரணமளித்தல்

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மூலம்

தாக்கம்

8 லட்சம் +

உணர்ந்திருக்கிறார்கள்

மாற்றத்தை

7,000+

ஆயுதமேந்திய போராளிகள்

திருந்தி வாழ்கிறார்கள்

3.5 லட்சம்

கைதிகளின் சீர்திருத்தம்

இந்தியாவில் 100 சிறைகளில்

17

திறன் மேம்பாட்டு மையங்கள்

இந்தியா முழுவதும் சிறைச்சாலைகளில்

60,000

குற்றவாளிகள்

திஹார் சிறையில் பயனடைந்துள்ளார்கள்

65

நாடுகளில்

உலகமுழுதும் சிறைச்சாலை பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன