ஹேப்பினஸ் புரொகிராம் ஃபார் யூத்
உங்கள் ஆனந்தத்தின் இரகசியம் உங்கள் மூச்சில் இருக்கிறது!
இப்பயிற்சி 22 – 35 வயதினருக்கானது
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யஇந்தப் பயிற்சியால் எனக்குக் கிடைக்கும் பயன் என்ன?
மனஅமைதி மேம்படுதல்
மனதை அமைதிப்படுத்த உதவும் சிறந்த நுட்பங்களைக் கண்டறிந்து உங்கள் அன்றாட வாழ்வில் மேன்மேலும் அமைதியையும், ஆனந்தத்தையும் அனுபவிக்க உதவுகிறது!
ஆற்றல் அதிகரிப்பு
களைப்பிலிருந்து விடுபட்டு மேம்பட்ட ஆற்றல் நிலைகளை அனுபவித்தல். நாள்தோறும் நிர்ணயித்த இலக்குகளை செவ்வனே செய்துமுடித்தல்.
மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் அகற்றுதல்
ஆய்வின் அடிப்படையிலான நுட்பங்களைக் கற்றுக்கொண்டு மன அழுத்தத்தைக் குறைத்து, பதட்டத்தில் இருந்து விடுபட்டு, சவால்களுக்கு இடையிலும் ஓய்வை உணரமுடிதல்.
உங்கள் மனதின் மீதான ஆதிக்கம்
இந்தப் பயிற்சி, இன்றைய வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ளும் தொன்மையான ரகசியங்களை நமக்கு பகிர்ந்தளிக்கிறது. நாம் வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வோடும், ஞானத்துடனும் வாழ உதவுகிறது.
எவ்வாறு இவையெல்லாம் கிடைக்கின்றன?
ஆனந்த அனுபவப்பயிற்சியின் பிரதான அடிப்படை ‘சுதர்சன கிரியா’ எனும் ஆழ்நிலை தியானநுட்பம் ஆகும். இந்த நுட்பமான மூச்சின் இயல்பான லயத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் அமைத்து, அதன் மூலமாக நமது உடல், மனம், உணர்ச்சிகள் இவற்றில் ஓர் இசைவை ஏற்படுத்துகிறது. இந்தத் தனித்துவமான சுவாசநுட்பம் மனஅழுத்தம், களைப்பு, கோபம், விரக்தி, மனச்சோர்வு போன்ற எதிர்மறை உணர்வுகளை அறவே அகற்றுகிறது. லும் உங்களை அமைதியாகவும் அதேநேரம் ஆற்றலுடனும், மிகுந்த கவனமுடையவராகவும் அதே நேரம் ஓய்வான நிலையிலும் வைக்கிறது.
இந்தப் பயிற்சியில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன?
- சுதர்சன கிரியாTM
- இன்றைய வாழ்வின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ளத் துணைபுரியும் நமது தொன்மையான ஞானம்
- ஆற்றலின் இரகசியம்
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
நிறுவனர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
நான் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புகிறேன், ஆனால்...
இந்த யுக்தியில் ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா?
ஒருபோதும் மறையாத புன்னகையே இதன் ஒரே பக்கவிளைவாகும். உலகெங்கும் லட்சோப லட்சம் மக்கள் சுதர்ஷனக் கிரியாவை அன்றாடம் பயிற்சி செய்கின்றனர். அவர்கள் அடைந்த பயன்கள் யாவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நமது நுட்பங்களைப் பயிற்சி செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. உங்களுக்கு ஆஸ்துமா, உயர் இரத்தஅழுத்தம், இதய நோய், முதுகு வலி போன்ற பாதிப்புகள் இருக்குமெனில் அதற்கேற்ற மாற்றங்களோடு இப்பயிற்சி வழங்கப்படும்.
இப்பயிற்சியால் எனது உடல் நலம் மேம்படுமா?
ஆம், நிச்சயமாக மேம்படும்! சுதர்ஷனக் கிரியாவை அன்றாடம் பயிற்சி செய்வதால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்க ஏதுவாகிறது; நோயெதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது; அத்துடன் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை மட்டுப்படுகின்றன. இப்பயிற்சியை செய்பவர்கள் தாம் அடைந்துள்ள பயன்களைப் பகிர்ந்துள்ள அனுபவச் சான்றுகளை நீங்கள் படித்துப்பாருங்கள். உங்களது நோய்கள் குறித்த விவரங்களை நீங்கள் முன்கூட்டியே உங்கள் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவது மிகவும் அவசியமாகும். அதனால் அவரால் உங்களுக்கு மிகவும் சிறப்பான, பொருத்தமான அனுபவங்களை வழங்க இயலும்.
நீங்கள் எதற்காக பயிற்சி அளிக்க கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
இப்பயிற்சிக்கான உரிய நேரத்தை நீங்கள் அர்ப்பணிப்பதை உறுதிப்படுத்துவது முதன்மையான காரணமாகும். உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத அரிய திறன்கள் இப்பயிற்சியின் வாயிலாக உங்களுக்குக் கிடைப்பதோடு நீங்கள் அளிக்கும் நன்கொடை நிதி இந்தியாவில் நடைபெறும் பல சேவைப்பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது மற்றொரு காரணமாகும். பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த 70000 குழந்தைகள் பள்ளி சென்று கல்வி பயில உதவுவது, 43 நதிகளின் புனரமைப்பு மற்றும் 2,04,802 கிராமப்புற இளைஞர்கள் தம் வாழ்வாதாரத்தைப் பெறத் தேவையான திறனளிக்கும் பயிற்சி, சூரியசக்திகொண்டு 720 கிராமங்களை ஒளிரச்செய்யும் திட்டம் போன்ற சேவைத் திட்டங்கள் அவற்றில் சிலவாகும்.
எனக்கு மனஅழுத்தம் போன்ற எதுவும் இல்லை. நான் எதற்காக இப்பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்?
உங்களுக்கு மனஅழுத்தம் இல்லையென்பது, மிகவும் மகிழ்ச்சிக்குரியது! நீங்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறீர்கள்! இப்போது பின்வரும் சூழ்நிலைகளை சற்று நினைத்துப்பருங்கள்: உங்களிடம் உள்ள பணம் அனைத்தும் செலவான பின்புதான் நீங்கள் பணத்தை சேமிக்கத் துவங்குவீர்களா? அதுபோலவே, உங்கள் ஆரோக்கியம் முற்றிலும் சீர்குலைந்த பின்புதான் உடற்பயிற்சி செய்யத் துவங்குவீர்களா? இல்லைதானே? உங்கள் உள்ளார்ந்த சேமிப்புகளான அதிர்ச்சிகளிலிருந்து மீளும்தன்மையையும், உங்களது ஆற்றலையும் வளப்படுத்தி வைத்துக்கொண்டால் உங்களுக்குத் தேவை எழும்போது அவற்றை உபயோகித்துக்கொள்ள இயலும், அல்லவா? பாருங்கள், இதற்கான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். ஒருவேளை மனஅழுத்தம் வரும்வரை நீங்கள் காத்திருக்கலாம். அப்போதும் உங்களுக்கு உதவ இப்பயிற்சி, உங்களது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும்.