மன அழுத்தம்

அழுத்தமில்லா மனம் என்பது அனைவரின் பிறப்புரிமையாகும்

மனஅழுத்தம் நமது சிந்தனை, உணர்வு, மற்றும் நடத்தையை பாதிப்பதால், அதன் தாக்கம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களின் மீதும் இருக்கிறது. மன அழுத்தத்தை நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் அதன் விளைவுகள், பேரழிவையும் துயரத்தையும் தருபவையாகவே இருக்கும். இருப்பினும், அதிலிருந்து விடுபடுவது மக்களுக்கு கடினமாகவே இருக்கிறது. “ஓ நான் வருத்தப்படவோ, எரிச்சலடையவோ, கோபப்படவோ கூடாது", என்பது நமக்கு அறிவுப்பூர்வமாக தெரியும். ஆனாலும், நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியப்படுவதில்லை. அந்த ஒரு தருணம் வருகையில் எதிர்மறைத் தன்மை ஒரு வெள்ளம் போல் வந்து, நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

நம் வீட்டிலோ, பள்ளியிலோ யாருமே நமக்கு மன அழுத்தத்தை கையாள கற்றுத் தருவதில்லை. இங்குதான் சுதர்சன கிரியா நமக்கு பெரிதும் உதவுகிறது. அது நம்மை அடித்துச் செல்லும் உணர்வுகளை கடந்து செல்ல உதவுகிறது. நம்முள் உறையும் ஒரு நுட்பமாக இருந்து - ஒரு தானியங்கி சுவர் போல் நம்முள் செயல்பட்டு, எதிர்மறை உணர்வுகளை எளிதாக வெல்ல சுதர்சன கிரியா உதவி புரிகிறது..

மன அழுத்தம் பற்றிய சில மறைந்திருக்கும் உண்மைகள்

சைக்கிள் ஓட்டுவதன் பின்னிருக்கும் ரகசியம் என்ன? சமநிலை! மையத்தில் இருத்தல் பற்றியது: வலதுபுறமோ இடதுபுறமோ சாய்ந்து விழாது இருத்தல். சைக்கிள் ஒருபக்கமாக சாயும்போது, அதை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவீர்கள். சமநிலை பிறழும்போது அதன் கஷ்டத்தை உணர்வீர்கள். அதை கவனியுங்கள், அலட்சியம் செய்யாது அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் சமநிலைக்கு வாருங்கள்.

icon

எதிர்மறைத்தன்மையின் மூலம்

எதிர்மறை எண்ணம் எங்கிருந்து உதயமாகிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? எதிர்மறை எண்ணங்களின் மூலத்தை கூர்ந்து கவனித்தால், அவை பதற்றத்திலிருந்தும், மனஅழுத்தத்திலிருந்துமே வருகின்றன என்பதை புரிந்து கொள்வீர்கள். அழுத்தம் இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பவருக்கு எதிர்மறை எண்ணங்கள் எழுவதில்லை. துயரத்தில் மேலும் மேலும் ஆழ்ந்து போகும்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் மேலும் மேலும் எழுகின்றன.

icon

உந்துதல் அல்ல

பதற்றமும், மன அழுத்தமும் தீவிரமாக செயல் புரிவதற்கும், ஆக்கபூர்வ மனநிலைக்கும் ஒருபோதும் உந்துதலாக முடியாது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில், தீவிரமான பதற்றமும், மனஅழுத்தமும் நிறைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், லெபனான், மற்றும் பெய்ரூத் போன்ற இடங்களிலிருந்து முக்கியமான கண்டுபிடிப்புகள் எதுவும் வெளிவரவேயில்லை.

icon

சிறியவற்றிலேயே தேங்கியிருத்தல்

உங்கள் மனம் எல்லையற்ற தன்மையில் பறந்து விரியாமல், சிறிய, முக்கியமற்ற விஷயங்களிலேயே முடங்கியிருப்பது தான் மனஅழுத்தம் என்பதாகும். இவை அனைத்தும் மாற்றத்துக்கு உட்பட்டவை. ஆனால் நீங்கள் இப்படி மாறிக் கொண்டே இருப்பவற்றை பிடித்துக் கொண்டு, பின்னர் செயல்பட தொடங்குகிறீர்கள்.

தொடர்புடைய பயிற்சிகள்

தியானம் உங்களை திறன்மிக்கவராகவும், ஆற்றல்மிக்கவராகவும், அழுத்தமில்லாதவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஆக்குகிறது.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

வேலை அதிகமாகவும், நேரமும் சக்தியும் குறைவாகவும் இருக்கும்போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒன்று நீங்கள் வேலைபளுவை குறைத்துக்கொள்ளவேண்டும், அது இன்றைய சூழ்நிலையில் முடியாத காரியம் அல்லது நேரத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும். அதுவும் நடக்க கூடியதல்ல. நாம் சோர்வாக இருக்கும்போது, அதிலிருந்து மீண்டுவர நமக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. ஆகவே நம் சக்தியின் அளவை அதிகரித்துக் கொள்வதுதான் நம்மிடமுள்ள ஒரே வழி.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

உங்கள் சக்தியை அதிகரித்துக்கொண்டால், மனஅழுத்தம் தானாகவே குறைந்து விடும்.

Gurudev Sri Sri Ravi Shankar

சரியான அளவு உணவு

அதிகமும், குறைவுமற்ற மாவுச் சத்தும், புரதங்களும் போதுமான அளவில் இருக்கும் சமச்சீரான உணவு முறை.

youth programs

சரியான அளவு தூக்கம்

அதிகமும் குறைவுமில்லா 6 முதல் 8 மணி நேரத் தூக்கம்.

meditation during happiness program

சுவாசத்தில் கவனம்

சக்தியை அதிகரித்துக்கொள்ள சில ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள்.

meditation during happiness program

தியானம்

ஒரு சில நிமிட நேர தியானம் அனைத்து விதமான மன அழுத்தத்திலிருந்தும் விடுதலை அளிக்கும். அது உங்களை திறன்மிக்கவராகவும், ஆற்றல்மிக்கவராகவும், அழுத்தமில்லாதவராகவும், மகிழ்ச்சியானவராகவும் ஆக்குகிறது..

மன அழுத்தமில்லா வெற்றி

சைக்கிள் ஓட்டுவதன் பின்னிருக்கும் இரகசியம் என்ன? சமநிலை! மையத்தில் இருத்தல் பற்றியது: வலதுபுறமோ இடதுபுறமோ சாய்ந்து விழாது இருத்தல். சைக்கிள் ஒருபக்கமாக சாயும்போது, அதை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவீர்கள். சமநிலை பிறழும்போது அதன் கஷ்டத்தை உணர்வீர்கள். அதை உற்று நோக்குங்கள். அலட்சியம் செய்யாது அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் சமநிலைக்கு வாருங்கள்.

icon

சமநிலையை அடையுங்கள்

வேலைக்கும் புத்துணர்சிக்கும் செலவிடும் நேரத்தை சமநிலைப்படுத்துங்கள். உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் இருக்கட்டும், மேலும் தியானத்திற்கும், ஓய்விற்கும் சிலமணி நேரம் ஒதுக்குங்கள்.

icon

கலைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்

இடது மூளையின் செயல்பாட்டை சமன்படுத்த வலது மூளை செயல்பாடுகளான ஓவியம், இசை, கவிதை போன்ற படைப்பூக்கம் நிறைந்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்.

icon

சேவை செய்யுங்கள்

உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு உபயோகமாக இருங்கள். சேவை செய்யும்போதும், கருணை நிறைந்த செயல்களைச் செய்யும்போதும் உடனடியாக உங்களின் உள்ளே ஒரு புத்துணர்வை அவை கொண்டுவருகின்றன.

எதிலுமே பற்றுதலோ வெறுப்போ இல்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சமநிலை பேணுதலே உண்மையான வெற்றியின் ரகசியம்.