
டைனமிசம் ஃபார் செல்ஃப் அண்ட் நேஷன் (DSN)
உங்கள் தனிப்பட்ட தடைகளிலிருந்து விடுதலை அடையலாம், உள்ளார்ந்த வலிமை மற்றும் நிலைத்தன்மையை அடையலாம்
உங்கள் தடைகளைத் தகர்த்து • அச்சங்களை வெற்றிக்கொண் • டு உங்களுக்குள் உறைந்திருக்கும் ஆற்றலை அணுகிவிடுங்கள்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யஉங்கள் மனதின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை அனுபவித்து உணருங்கள்
நீங்கள் நிர்ணயித்ததைவிட பன்மடங்காக உங்களது வல்லமையை விரிவாக்குங்கள்

அச்சத்தை வெல்லலாம்
உங்களது அச்சங்களை வெற்றிக்கொள்ளும் விடுதலை மார்க்கத்தை நீங்கள் கண்டறிவீர்கள்.

மாற்றத்தை உருவாக்கலாம்
இந்த சமுதாயத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஓர் கருவியாக நீங்கள் எவ்வாறு செயலாற்ற இயலும் என்று ஆராய்ந்து அறியுங்கள்.

உங்கள் திறனை அறியலாம்
உங்களைப் பற்றியும், உங்களது செயல் வல்லமை குறித்தும், நீங்கள் கணித்து வைத்துள்ள கருத்துக்கள் அனைத்தையும் தகர்த்துத் தூளாக்குங்கள்.
எதற்காக DSN பயிற்சியில் பங்குபெற வேண்டும்?
நம் ஒவ்வொருவருக்குள்ளும் சில மனத்தடைகள் இருக்கின்றன. நீண்டநாள் பழக்கவழக்கங்கள் மற்றும் மனத்தயக்கங்கள் போன்ற தடைகள் நம்மை வாழ்வில் நமது முழுமையான பங்களிப்பை வழங்கவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன. ஆயினும் நமக்காகவும், நமது குடும்பத்தினர், நமது சமூகம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகம் இவ்வனைத்திற்காகவும் நாம் உன்னதமானவற்றை வழங்க வேண்டும் எனும் ஓர் ஆழமான ஆசையும் நம்மனதில் இருக்கிறது.
DSN பயிற்சி ஒரு கடினமான ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பயிற்சியாகும்; அது பயிற்சியில் பங்கேற்பவரிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இருப்பினும் அது ஒரு கடினமான பயிற்சியாகும்; அது ஒருவருக்கு தனது மனதயக்கங்களையும், தடைகளையும் தகர்த்துத் தூளாக்கும் சக்தியைக் கொடுப்பதோடு அவரது உள்ளார்ந்த உறுதி மற்றும் ஆற்றலுக்குள் நுழையும் வல்லமையையும் அளிக்கிறது. உங்கள் மனது வகுத்து வைத்துள்ள எல்லைகளைத் தகர்த்தால்தான் உங்களது உள்ளார்ந்த முழு ஆற்றலையும் கண்டறிய இயலும்.
இந்தப் பயிற்சி சமூகத்தில் தொடர்பு கொள்ளும்போது எனது மனத் தடைகளை உணர்ந்து கடக்க உதவியது. அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், ஒரே ஒரு நபரால் கூட இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது எனக்குப் புரிய வைத்தது.
சாலிவதி
திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டதாரி, துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நான் சமீபத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியை (DSN) முடித்தேன். இது மிகவும் செழுமையான, அழகிய அனுபவங்கள் நிறைந்ததாக இருந்தது. செயல்படவும், உலகில் எனது பங்களிப்பைச் செய்யவும் இது ஊக்கமளித்துள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இது மிக ஆழமான திட்டங்களில்…
சாட்சி பாலி
திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டம் பெற்றவர், சிட்னி, ஆஸ்திரேலியா
நான் ஒரு புதிய மனிதனாக உருவாக இது உதவியது ! எல்லாத் தடைகளையும் நீக்கி, ஒரு புதிய தொடக்கத்தை அளித்தது.
ஹிமான்ஷு கதி
திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டதாரி, இந்தியா
இந்தப் பயிற்சி, என்னுடைய வேலைகளை செய்து முடிப்பதற்கு தடையாக இருக்கும் என் தன்மைகளை பற்றி தெரிந்துகொள்ள உதவியது. இந்தப் பயிற்சியை முடித்த பிறகு, தடைகளிலிருந்து விடுதலை பெறுவதை உணர முடிகிறது. நீங்கள் அடைய விரும்பும் இலக்கிலிருந்து தடுக்கும் அனைத்தையும் அகற்ற உதவும்…
ரவி தேஜா அகோண்டி
iMumzians ( ஐமும்சியன்ஸ்) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO)
திறன் மேம்பாட்டு பயிற்சி (டி.எஸ்.என்) -க்கு முன்பு, நான் ஒரு கூச்ச சுபாவமுள்ள, எல்லாவற்றையும் பற்றி நிறைந்த கருத்துக்கள் கொண்டவராக இருந்தேன். இந்தப் பயிற்சி எனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை மேம்படுத்தியது. மனித உறவுத் திறன்களை மேம்படுத்தி, என் அச்சங்களை களைந்து,…
ஷரத் சந்திரா
பி.டெக், திறன் மேம்பாட்டு பயிற்சி (DSN) பட்டம் பெற்றவர்
DSN பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்
DSN பயிற்சி ஓர் கடுமையான பயற்சி; மாற்றத்தை உருவாக்கவல்லது. அதில் பங்கேற்போருக்கு, தமது மனத்தயக்கங்களையும், மனத்தடைகளையும் தகர்த்து அகற்றும் ஆற்றலை அளிக்க வல்லது. அத்துடன் அவர்கள் தம் உள்ளார்ந்த ஆற்றலை அணுகும் வல்லமையையும் வழங்குகிறது.

பயிற்சியில் பங்கேற்கும் குழுவினர் சில தொடர் செயல்பாடுகள் மற்றும் உரையாடல்கள் போன்றவற்றில் பங்கேற்பர். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய மற்றும் புரிதல்மிக்க சூழல் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் பங்கேற்பாளர்கள் நிஜ வாழ்க்கை சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றுவர். அதன் வாயிலாக தமது அச்சங்களையும், மனத்தயக்கங்களையும் வெற்றிகொள்ள அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

‘பத்ம சாதனா’ பயிற்சி உங்கள் உள்ளார்ந்த ஆற்றலை நீங்கள் அணுகிட வழிவகுக்கிறது. தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் செய்யும் வண்ணம் அமைந்த யோகாசனங்களின் உன்னதமான தொகுப்புதான் ‘பத்ம சாதனா’ ஆகும். இந்தப் பயிற்சி சாந்தமான மனம், ஆரோக்கியமான உடல், சமாதானம் ஆகியவற்றை நாம் அடைந்திட உதவுகிறது. நாம் தியானத்தில் ஆழ்ந்த நிலைக்குச் செல்வதற்கு உகந்தவாறு இந்த அழகான யோகாசனங்களின் தொகுப்பு நமது உடலையும், மனதையும் ஆயத்தம் செய்கிறது.

நமது தொன்மையான ஞானத்தை ஆய்ந்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள மேம்பட்ட வாழ்விற்கான இரகசியங்களை உயிர்ப்பிக்கச் செய்திடும் நோக்கத்தில் சிறிய காணொளி காட்சிகள் காட்டப்படும். அதைத் தொடர்ந்து குழு உரையாடல்கள் நிகழும். அவற்றின் விளைவாய் அவர்களது புரிந்துணரும் ஆற்றல் புதுப்புது பரிமாணங்களை அடைவதோடு மேம்பட்ட வாழ்க்கை வாழவும் அவர்களுக்கு வழி காட்டும்.

உங்களது வல்லமைகளை உணர்ந்துகொண்டு, அவற்றை எவ்வாறு இந்த சமுதாயநலனுக்காக சமர்ப்பிப்பது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்தச் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை விளைவிப்பதிலும், அதில் உங்கள் பங்களிப்பின் அவசியத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு இருங்கள்.