நம் காலத்தின் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்த்துப் போராடல்
புத்துயிரூட்டப்பட்ட நீர்நிலைகள், பெரிய அளவில் மரக்கன்றுகளை நடுதல், கழிவு மேலாண்மை இயந்திரங்கள், தூய்மை இயக்கம் மற்றும் இயற்கை வேளாண்மை ஆகியற்றின் மூலம் சுற்றுச்சூழல் நெருக்கடியை மாற்றியமைத்தல்.
உத்தி
- பெரிய அளவில் மரக்கன்று நடுதல் போன்ற சமூகநலத் திட்டங்களைத் துவக்குதல்
- மண் தரத்தைக் காக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றுதல்
தாக்கம்
- 10 கோடி மரங்கள் உலகம் முழுதும் நடப்பட்டன
- 72 நதிகள், துணையாறுகள் புத்துயிரூட்டப்பட்டன[
விழிப்புணர்வு
- 18 கழிவு மேலாண்மை ஆலைகள் நிறுவப்பட்டன
- 30 லட்சம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது
விரைவுப் பார்வை
நம் இயற்கை வளங்கள் கட்டுக்கடங்காமல் மாசடைந்து வருகின்றன. தூய்மையான குடிநீரும், வேதிப்பொருள் கலக்காத உணவும், சுத்தமான காற்றும் கூட நமக்குக் கிடைப்பதில்லை. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு நமக்கு மட்டுமல்ல, நம் பொருளாதாரத்திற்கும் கேடானது. சூழல் சீரழிவால் இந்தியாவிற்கு 80 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு செலவு ஏற்படுகிறது. இது நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% எனக் கணக்கிடப்படுகிறது.
நாங்கள் இந்நிலையை மாற்ற எண்ணுகிறோம். குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, உலகெங்கிலுமுள்ள தன்னார்வத் தொண்டர்கள், தீவரமான சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்த்துப் போராட பல திட்டங்களைத் தொடங்கியுள்ளார்கள். மிஷன் க்ரீன் எர்த் என்னும் திட்டத்தின் கீழ் பெரிய அளவில் மரக்கன்றுகள் நடுதல், வறண்ட நதிகளின் புத்துயிர்ப்பு, மாசடைந்த நதிகளைத் தூய்மைப்படுத்துதல், கோவில்களில் கழிவு மேலாண்மை, மண் வளத்தைக் காக்க இயற்கை வேளாண்மை ஆகியவை இதில் அடங்கும். பெரும்பாலும் எங்கள் திட்டங்கள் இயற்கை வளங்களைக் காப்பதின் மூலம் ஊரக வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டவை.
நம் நாடு எதிர்கொள்ளவிருக்கும் நீர் நெருக்கடியைக் கையாள 72 நதிகளும், அவற்றின் துணையாறுகளும் புத்துயிர் பெற்றுள்ளன.
சுற்றுச்சுழலைக் நாம் காக்க வேண்டும் - உலக குடிமக்களாக இன்று நம் முதல் மற்றும் முக்கியக் கடமை அதுதான். சுற்றுச்சூழலை நாம் பாதுகாத்தால், அது நமக்கு ஆரோக்கியத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் அளித்து நம்மை பேணும்.
- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சுற்றுச்சூழல் திட்டங்கள்
தாக்கம்
10 கோடி மரங்கள்
உலகமுழுதும் நடப்பட்டன
30 லட்சம் விவசாயிகளுக்கு
இயற்கை வேளாண்மைப் பயிற்சி
72 நதிகள்
மற்றும் துணையாறுகளின் புத்துயிர்ப்பு
512 டன் கழிவுகள்
க்ளீன் யமுனா இயக்கத்தின் மூலம் அகற்றம்
1,00,000+ தூய்மை இயக்கங்கள்
வெற்றிகரமாக நடத்தப்பட்டன
18 கழிவு மேலாண்மை ஆலைகள்
முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டன
11,600 கிலோ கழிவு
இவ்வாலைகளில் அன்றாடம் கையாளப்படுகின்றது
உங்கள் ஆதரவுடன் எங்களால் நிறைய சாதிக்க முடியும்
பலதரப்பட்ட சமூக முயற்சிகளின் அணுகுமுறை, பல உயிர்களைக் காப்பாற்றி, பல முகங்களில் புன்னகைகளைக் கொண்டு வந்ததோடு, பல சமூகங்கள் முன்னேற உதவியுள்ளது. மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தும் எங்கள் ஒவ்வொரு சமூகப் பணியும், ஆழ்ந்த பகுப்பாய்வு மற்றும் பரிவுடன்கூடிய யோசனைக்குப் பின் வடிவமைக்கப்படுகிறது.



