உள் அமைதியுடன் உலக அமைதியும் வருகிறது

பேச்சுவார்த்தை மூலம் முரண்பாடுகளைத் தீர்த்து, தனிநபர் மட்டத்தில் அமைதியை வளர்த்தல்

icon

சவால்கள்

  • போராளிகள், அரசாங்கம் மற்றும் உள்ளுர் சமூகத்திடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாமை.
  • தனி மனிதருள் ஆழமாக வேரூன்றிய மன அழுத்தம்

icon

உத்தி

உரையாடலும், சிறப்பு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் நிவாரணப் பணிமனைகள்

icon

தாக்கம்

  • 7400+ ஆயுதமேந்திய போராளிகள் சரணடைந்து, சமூக நீரோட்டத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
  • போர்களால் பாதிக்கப்பட்ட 16,000+ குழந்தைகள் மன உளைச்சவிலிருந்து விடுபட பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
  • போர் சூழ்ந்த பகுதிகளில் 20,000+ உயிர் தப்பியவர்கள் மறுவாழ்வுக்கான கருவிகளைப் பெற்றிருக்கிறார்கள்
  • போரிட்டுக்கொண்டிருந்த தரப்புகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.

விரைவுப் பார்வை

உலக அமைதியைக் கொண்டுவருவதென்பது மிகவும் வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட குழுக்களுக்கிடையே முரண்பாடுகளையும் சிக்கலான பணியையும் உள்ளடக்கியது. சொந்த நலன் மேல் கவனம், வன்முறைக்கான நீண்டதொரு வரலாறு, நம்பிக்கையின்மை, போதிய கருத்துப்பரிமாற்றம் இல்லாமை, தீவிர மன அழுத்தம் போன்றவை முரண்பாடுகளை களைவதை மிகவும் கடினமாக்குகின்றன.

பொறுமை, விடாமுயற்சி மற்றும் தனிமனிதரில் அக அமைதியை கொண்டுவருதலின் மூலம் உலக அமைதிக்கெதிரான சிக்கலான சவால்களை முறியடிக்க முடியும் என்று குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நம்புகிறார்.

தனிமனித தளத்தில் அமைதியை பேணுவதன் மூலம் குற்றவாளிகளை திருத்தியமைத்து, பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு ஆறுதலும், குணமும் அளிக்க முடியும். பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்துவதினால் நம்பிக்கை பற்றாக்குறையை தீர்க்க முடியும். இவ்வனைத்து செயல்பாடுகளையும் ஒன்றிணைப்பதன் வாயிலாக, உலக அமைதியை நாம் நனவாக்க முடியும்.

பேச்சுவார்த்தைகள் மூலமும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகள் மற்றும் அரசுத் தரப்பின் பல மட்டங்களின் ஈடுபாட்டோடு வகுக்கப்பட்ட இடையீட்டு உத்திகளின் துணைக் கொண்டும் குருதேவ், தனிப்பட்ட முறையிலும், தன்னார்வல தொண்டர்கள் வழியாகவும், அமைதியை முன்நிறுத்தியிருக்கிறார்.

வாழும் கலை அமைப்பினாலும், மனித விழுமியங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பினாலும் (IAHV) மிகுந்த கவனத்தோடு வடிவமைக்கப்பட்ட மன அழுத்த மற்றும் மன உளைச்சல் நிவாரண பட்டறைகள், போராளிகள், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், போர் வீரர்கள், தப்பி பிழைத்து அகதி முகாம்களில் வாழ்பவர்கள், காடுகளின் தொலைதூர உட்புறங்களிலிருந்து செயல்படும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு மன அமைதியை அடைய உதவியிருக்கின்றன.

எங்கள் இடையீடுகள் நேர்மறையான பயன்களை தந்திருக்கின்றன. நாட்பட்ட முரண்பாடுகளையும், மோதல்களையும் கைவிட்டு போராளிகளும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களும் சரணடைந்திருக்கிறார்கள். போரில் உயிர் தப்பியவர்களுக்கு எங்கள் இடையீடுகள் புது வாழ்க்கையைத் தொடங்க உதவியுள்ளன.

எங்கள் உத்திகளில் சில

நாங்கள் கீழ்கண்ட கூறுகளை இணைத்து பன்முகத்தன்மைக் கொண்ட ஓர் உத்தியை கையாளுகிறோம்:

icon

உள்ளிருந்து அமைதியை வெளிகொணர்தல்

மன அழுத்த மற்றும் மன உளைச்சல் நிவாரண முகாம்களின் மூலம்

icon

பல குழுக்களிடையேயான உறையாடல்

சம்பந்தப்பட்ட பல தரப்புகள் மற்றும் பிரிவுகளுக்கு இடையே

icon

உள்ளூர் சமூகத்தைக் கட்டமைத்தல்

குணப்படுத்தும் செயல்முறையில் ஒருவருக்கொருவர் துணைநிற்றல்.

icon

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம்

அவசரகாலத் தேவையைப் பொறுத்து

icon

தளங்களை உருவாக்குதல்

மாநாடுகள், சிந்தனைக் குழாம்கள் மற்றும் வெளியிலிருந்து ஆதரவு

அமைதி என்பது முரண்பாடுகளும் மோதலுமில்லா நிலை மட்டும் அல்ல; அது நம்முள் இருக்கும் ஒரு நேர்மறையான நிலை. நம் மனம் அமைதியாக இருக்கும்பொழுது, நம் அறிவு கூர்மையடையும்; உணர்வுகள் நேர்மறையாகவும், இலகுவாகவும் இருக்கும்; நம் நடத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். அக அமைதியை கண்டடைவதன் பலன்கள் இவை. அக அமைதியே உலக அமைதியின் திறவுகோல்.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

தாக்கம்

சேவைத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

கொலம்பியாவில் 52-வருட மோதலை தீர்ப்பதில் பங்கு வகித்தல், 2016

2015 ஆம் ஆண்டில், கொலம்பியாவின் ஆயுதபோராளிக்குழுவான ஃபார்க் (FARC) எந்த சர்வதேச இடையீட்டையும் ஏற்றுகொள்ளாத ஒரு காலக்கட்டத்தில், ஃபார்க்கின் (FARC) தலைவர்களை கொலம்பிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்க வைப்பதில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முக்கியப் பங்கு வகித்தார். கொலம்பியாவில் வாழும் கலையின் அழுத்தமான இருப்புடன் குருதேவ் அவர்களுக்கு அந்நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ‘ த ஆர்டன் த லா டெமொக்ரஸியா ஸிமொன் பொலிவர்’ (the Orden de la Democracia Simon Bolivar) வழங்கப்பட்டது. மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர், பைகாம்-ஏ-மொஹப்பத், 2017

ஜம்மு காஷ்மீரில் போராளிகளின் மனமாற்றத்திற்கும், அமைதி திரும்புவதற்கும் வாழும் கலை பாடுபட்டு வருகிறது. இதன் பயனாக பல போராளிகள் தம் ஆயுதங்களை ஒப்படைத்திருக்கிறார்கள். போரில் வீரமரணமடைந்த பாதுகாப்பு வீரர்கள், இருபக்க துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள், மற்றும் கொல்லபட்ட போராளிகள் ஆகியோரின் குடும்பத்தினரை ஒருங்கிணைக்கும் சவாலான பணியை பைகாம்-ஏ-மொஹப்பத் (அன்பின் தூது) என்னும் சிறப்பு வாய்ந்த நல்லிணக்க திட்டம் மேற்கொண்டிருக்கிறது. மேலும் படிக்க

போரால் பாதிக்கப்பட்ட 16000+ சிறுவர்களுக்கு உளவடுக்களிலிருந்து நிவாரணமளிக்கும் பட்டறைகள், 2016 - 2019

ஜோர்டனிலும், லெபனனிலும் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் உளாவடுக்களிலிருந்து விடுபட பயிற்சி பெற்று, உணர்வுப்பூர்வமான மீட்புக்கான பாதையில் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். குணப்படுத்துதல், மீளுதல் மற்றும் தீவிரவாதத்திலிருந்து தடுத்தல் திட்டம் (Healing, Resilience, and Preventing Extremism Project) IAHV ஆல் (இந்தியன் அசோசியேஷன் ஆஃப் ஹ்யூமன் வேல்யூஸ்) தொடங்கப்பட்டது. ஜோர்டனிலும், லெபனனிலும் அகதிகள் மற்றும் அடைக்கலம் தரும் சமூகங்களுக்கு காயப்பட்ட உணர்வுகளை ஆற்றவும், அமைதியான, ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டமைக்கவும் இத்திட்டம் உதவுகிறது. மேலும் படிக்க

போராளி இளைஞர்களின் மறுவாழ்வு

இதுவரை, 700 முன்னாள் உல்ஃபா (ULFA) போராளிகளுக்கு மன அழுத்த நிவாரண பயிற்சிகளின் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த போராளிகள் வாழும் கலை பயிற்சிகளை பெற்று ஆயுதங்களை ஒப்படைத்திருக்கிறார்கள். மேலும் படிக்க

ஈராக்கை மறுகட்டமைத்தல், 2003

செப்டெம்பர் 2003 இல் தொடங்கி, வாழும் கலை அமைப்பு 50,000 க்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்துள்ளது. மக்களைக் காக்க பல திட்டங்களையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்ள ஈராக்கின் சமூகத்தலைவர்களுக்கு பயிற்சியையும் உந்துதலையும் நாங்கள் அளித்துள்ளோம். எங்களுடைய மகளிர் அதிகாரமளித்தல் திட்டம் (Women’s Empowerment Program), பெண்களின் உணர்வுபூர்வமான மற்றும் மனோரீதியான தேவைகளை கருத்தில் கொள்கிறது. பொருளாதார நிலைத்தன்மை பெற உதவும் திறன்களையும் அவர்களுக்கு அளிக்கிறது. எங்கள் திட்டங்களில் யாசிதி (Yazidi), ஷியாக்கள் (Shia) மற்றும் கிறிஸ்துவர்களும் பங்கு பெறுகிறார்கள். மேலும் படிக்க

வடகிழக்கின் போராளிக் குழுவான யூபிஎல்ஏ (UPLA) ஒருதரப்புப் போர்நிறுத்தத்தை அறிவித்தல், 2018

மன அழுத்த நிவாரண பட்டறைகளின் மூலமும், அரசாங்கத்துக்கும் யூபிஎல்ஏவுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தியதனாலும், 150 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு 2018ல் ஒருதரப்புப் போர்நிறுத்தத்தை அறிவித்தது. மேலும் படிக்க

ஜோர்டன், லெபனன் மற்றும் சிரியாவில் மனிதநேய முயற்சிகள், 2003

வாழும் கலை அமைப்பு இப்பிராந்தியத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்தே மும்முரமாக பணி புரிந்துவருகிறது. ஈராக், சிரியா மற்றும் லெபனனின் அகதி இளைஞர்களுக்கு பயிற்சித் திட்டங்களை நடத்திவருகிறோம். வழிதவறி போகும் அபாயத்தில் இருக்கும் இவ்விளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த அமைதிக் கட்டமைப்பு பயிற்சிகள் தரப்பட்டு, வருங்காலத்தில் அமைதிப்பணி மற்றும் சமூகப்பணியாற்ற அவர்கள் தயார் படுத்தப்படுகிறார்கள். மேலும் படிக்க

மணிபூரில் போராளிகள் சரணடைதல், 2017

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முரண்பாடுகள், மோதல்கள் மற்றும் ஆயுதக் கிளர்ச்சிக்கான நீண்ட வரலாற்றைக் களைய குருதேவ் தீவிரமாக பணியாற்றி வருகிறார். வாழும் கலையின் தொய்வில்லா முயற்சிகளின் மூலம் 68 போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்திருக்கிறார்கள். முன்னாள் போராளிகள் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் மீண்டும் இணைய உதவும் பொருட்டு வாழும் கலை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

வடகிழக்கு பூர்வீக மக்கள் மாநாடு, 2017

வடகிழக்கு பிராந்தியத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, வாழும் கலை, முன்னாட்களில் ஆயுதமேந்தியவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட குழுக்களின் பங்கேற்போடு ஒரு மாநாட்டை நடத்தியது மேலும் படிக்க

இலங்கையில் இனப்போராட்டத்தின் உளவடுக்களை ஆற்றுதல்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின், ஆற்றுதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆக்கப்பூர்வமான அமைதிக் கட்டமைப்பு முயற்சிகளால் உந்தப்பட்டு, இலங்கையின் வாழும் கலை அமைப்பு நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு வாழ்க்கைக்கு துணை புரியும் பல திட்டங்களை தந்துள்ளது. குருதேவரின் ஆன்மீக ஞானமும், சுதர்சன க்ரியா என்னும் சுவாச நுட்பமும் 1800க்கும் மேற்பட்ட முன்னாள் LTTE போராளிகள் மைய சமூக நீரோட்டத்தில் அர்த்தமுள்ள வகையில் இணைக்க உதவியுள்ளது. மேலும் படிக்க

வீடு திரும்பும் படைகளை வரவேற்றல், அமெரிக்கா, 2006

போர் மூண்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வீடு திரும்பும் படை வீரர்களுக்கு நிவாரணம் அளிக்க 2006ல், வீடு திரும்பும் படைகளை வரவேற்றல் (ப்ராஜெக்ட் வெல்கம் ஹோம் ட்ரூப்ஸ், Project Welcome Home Troops, PWHT) என்னும் திட்டத்தை IAHV தொடங்கியது. PWHT என்பது உடலிலும் மனத்திலும் மீண்டு வரும் ஆற்றலை கட்டமைக்கும் திட்டமாகும். மன அழுத்தத்தைக் குறைக்கவும், பதட்டத்தைத் தணிக்கவும், மற்றும் உறக்கம் தொடர்ப்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அன்றாடம் நடைமுறைப்படுத்தக்கூடிய, சுவாசம் சார்ந்த, நுட்பங்களை இத்திட்டம் வழங்குகிறது. PWHT திட்டத்தினால் போரிலிருந்து வீடு திரும்பிய போர் வீரர்களில், அதிர்ச்சி தரும் சம்பவங்களுக்கு பிந்தைய மன அழுத்தம் ( போஸ்ட் ட்ராமேடிக் ஸ்ட்ரெஸ்) 40 முதல் 50 சதம் வரை குறைகிறது என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட, ஜர்னல் ஆஃப் ட்ராமேடிக் ஸ்ட்ரெஸ்ஸில் (Journal of Traumatic Stress) வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தல்

முரண்பாடும் மோதலும் நிறைந்த பல சூழல்களில் - அசாம் கலவரம் (2012), அமர்நாத் நில உரிமை பிரச்சினை (2008), குஜ்ஜர் போராட்டம் (2008), மற்றும் 2001 ல் நடந்த நக்சல் எழுச்சிகளின் போதும் கூட - குருதேவர் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்துள்ளார்.