
உத்கர்ஷ யோகா
உடல் , உணர்ச்சி மற்றும் சமூகம் சார்ந்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
8 முதல் 13 வயதுடைய குழந்தைகளுக்கான பயிற்சி
முதல் வாரத்திலேயே மாற்றங்களைக் காணலாம்
பதிவு செய்யஇதனால் குழந்தைகள் எவ்வாறு பயன் அடைகிறார்கள்?

அவர்களது நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது; பசி தூண்டப்படுகிறது.
இப்பயிற்சியில் கொடுக்கப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளால் குழந்தைகளின் பசி உணர்வு தூண்டப்படுகிறது; நோயெதிர்ப்பாற்றல் மற்றும் சக்தி அதிகரிக்கிறது. நலவாழ்வு மற்றும் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கும் உணர்வு மேம்படுகிறது.

கோபதாபங்களால் எழும் சிக்கல்களுக்கு தீர்வுகாண உதவுகிறது
குழந்தைகள் கோபம் , வன்தாக்கம், மனச்சோர்வு ஆகியவற்றின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தமது முழு ஆற்றலையும் ஆக்கபூர்வமாக உபயோகிக்க உதவுகிறது.

கவன வீச்சு அதிகரிக்கிறது
ஆய்வின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நமது பயிற்சிகள் குழந்தைகளை மனஅமைதியுடன் இருக்க வைக்கிறது.அத்துடன் அவர்களது கவனக்குவிப்பு ,நினைவாற்றல், ஒருமுகப்பட்ட கவனம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

மன மகிழ்ச்சி அதிகரித்தல்
நமது கேளிக்கையான கலந்துரையாடல்களால் குழந்தைகள் தம் மனத் தயக்கங்களைக் கைவிட்டு ,தமது உண்மையான , இயல்பான , மகிழ்ச்சிகரமான சுபாவத்தை அறிந்து கொள்கிறார்கள்.
உத்கர்ஷ யோகா என்பது என்ன?
குழந்தைகளிடம் இருக்கும் அபரிமிதமான ஆற்றலானது , மனப்பதட்டம் , கோபம், வன்தாக்கம் , மனச்சோர்வு போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.
உத்கர்ஷ யோகா பயிற்சியில், குழந்தைகளுக்கு சில எளிய சுவாச உத்திகள், சில ஞானக்கோட்பாடுகள் மற்றும் ஆற்றல் மிக்க சுதர்ஷனக் கிரியா பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப் படுகின்றன. இந்த உத்திகள் . அவர்கள் தமது ஆற்றலை நேர்மறையான பாதையில் செலுத்திச் செயல்பட உதவுகின்றன. அவர்களது மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதால் கவனக் குவிப்பு மேம்படுகிறது; தெளிவு மற்றும் நினைவாற்றல் திறன் அதிகரிக்கிறது. அத்துடன் குழுவாக இணைந்து செயல்படத் தேவையான ஊக்கமும் , பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
இங்கு அனைவரும் நம்மைச் சார்ந்தவர்கள் எனும் ஒற்றுமை உணர்வோடு ஒரு மகிழ்சிகரமான , ஈடுபாடு மிக்க சூழலில் கற்றலும் ,மற்றவர்களோடு கலந்து உறவாடுதலும் நிகழ்கிறது. ஒரு மிகப்பெரிய புன்னகையையும், ‘ஆம்’ எனும் மனதையும் குழந்தைகள் இங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள்.

சிறந்த செயல்திறன். இசையில் எனது ஆர்வம் அதிகரித்துள்ளது. விளையாட்டு மற்றும் படிப்பில் எனது செயல்திறன் மேம்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது!

அமே, 10
மாணவர்
நம்பிக்கை மேம்பட்டது. நான் என் வகுப்பு தோழர்களிடம் கூட பேசமாட்டேன். இப்போது, கூட்டத்தில் நம்பிக்கையுடன் உரையை வழங்க முடிகிறது.

மீரா, 13
மாணவி
நிறுவனர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
நான் இப்பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறேன் ஆனாலும்....
இப்பயிற்சி குறித்து மேலும் விளக்கங்களை அளிக்க முடியுமா ?
உத்கர்ஷ யோகா பயிற்சி , நமது புராதனமான உத்திகளின் அடிப்படையில் குருதேவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட யோக உத்திகள் மற்றும் பயிற்சி முறைகளையும் உள்ளடக்கியது. இப்பயிற்சியில் குழந்தைகள் தியானம், யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி உத்திகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் தமது அச்சங்கள் , மனப்பதட்டங்கள் போன்றவற்றிலிருந்து விடுபட்டு தமது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் முழுமையாக வாழவும் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் இப்பயிற்சியில் ஆன்மீகம் மற்றும் நமது பாரம்பரியம் ஆகியவற்றிலும் அவர்களுக்கு அறிமுகம் கிடைக்கிறது.