follow-up session at Zeux

சுதர்சன கிரியா தொடர் வகுப்புகள்

உங்கள் பயிற்சியை ஆழப்படுத்தலாம்

நேர்மறை மனநிலையும் ஆன்மீக நாட்டமும் கொண்டவர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ளலாம். பண்டைய ஞானத்தை பற்றி கலந்துரையாடலாம். பயிற்சியை தினமும் தொய்வில்லாமல் மேற்கொள்ள ஊக்கம் கொள்ளலாம்.

* கவனம்: சான்றளிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரால் நடத்தப்பட்ட வாழும் கலை பயிற்சியில் சுதர்சன கிரியாவை கற்றவர்கள் மட்டுமே தொடர் வகுப்புகளில் (ஃபாலோ அப்) பங்கு பெற முடியும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு நகரத்திலும் இலவச தொடர் வகுப்புகள் நடைபெறுகின்றன

தொடர் வகுப்பைக் காண

தொடர் வகுப்புகளில் கலந்து கொள்வதால் எனக்கு என்ன கிடைக்கும்?

icon

உங்கள் பயிற்சியை புதுபித்துக் கொள்ளலாம்

ஆனந்த அனுபவ பயிற்சியில் கற்றுகொண்ட நுட்பங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். தினசரி பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள உந்துதல் அளிக்கவும், பெறவும் தொடர் வகுப்புகள் ஒரு சிறந்த வழி.

icon

நடைமுறை ஞானம்

பண்டைய ஞானம் குறித்து கலந்துரையாடலாம். மேலும் அதை நவீன வாழ்வின் கடுமையான சந்தர்ப்பங்களில் எப்படி பயன்படுத்துவது என்றும் கற்றுகொள்ளலாம்.

icon

குழுவில் இணைதல்

இந்தியாவிலும், உலகத்தின் 180 நாடுகளில் எந்தவொரு நகரத்திலும், நேர்மறை மனநிலையும், ஆன்மீக நாட்டமும் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கலாம்.

வாழும் கலையின் தொடர் வகுப்புகள் என்பவை என்ன?

உலகம் முழுதும் உள்ள வாழும் கலை மையங்கள் வாரம் தோரும் குழு தொடர் வகுப்புகளை நடத்துகின்றன. வாழும் கலையின் ஆனந்த அனுபவம் அல்லது யெஸ் ப்ளஸ் பயிற்சியை முடித்த அனைவரும் இவ்வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்.

இந்த இலவச தொடர் வகுப்புகள் வாழும் கலை ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் நடைபெறுகின்றன.

இந்த கூட்டுத் தொடர் வகுப்புகள் ஸத்சங்கம் என்றும் அறியப்படுகின்றன. ஸத்சங்கம் என்னும் ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு சத்தியத்திலும் கொண்டாட்டத்திலும் ஒன்றாக பங்குகொள்ளுதல் என்று பொருள். இந்த தொடர் வகுப்புகளில் மூச்சுப் பயிற்சி நுட்பங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். வீட்டில் பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கு உந்துதல் பெறலாம். சக பயிற்சியாளர்களுடன் ஒரு குழுவாகத் தொடர்பில் இருக்கலாம்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

நிறுவனர், வாழும் கலை

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

“மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த ஆற்றல் கொண்டு நிறைய செயல்புரிய வேண்டியிருப்பதன் விளைவே மன அழுத்தம் ஆகும். இதிலிருந்து மீள, ‘சாதனா’ (ஆன்மீகப் பயிற்சிகள்)செய்ய வேண்டியது அவசியம்.”

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மனநலம் மற்றும் நல்வாழ்வின் மூலம், தனிநபர் மற்றும் சமூக மாற்றத்திற்கான குருதேவரின் தொலைநோக்குப் பார்வை, 180 நாடுகளில் உலகளாவிய இயக்கத்தைத் தூண்டி, 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளது.