Service - VBI Volunteers

கர்ம யோகா

இளைஞர் தலைமைத்துவ பயிற்சி பட்டறை (YLTP)

சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர, நம்பிக்கையோடும், உள்ளார்ந்த வலிமையோடும் வாழுங்கள்

7 நாட்கள் பயிற்சிப் பட்டறை

*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது

பதிவு செய்ய

இப்பட்டறையின் பயன்கள்

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டுவர உதவிய தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை.

icon

தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளலாம்

உங்களுடைய உண்மையான திறனையும், சவால்களை வென்று இலக்கை அடைவதற்கான தன்னம்பிக்கையையும் இனங்காணுங்கள்.

icon

மனவலிமையை அடையலாம்

மனத்தெளிவு, கவனக் குவிப்பு மற்றும் மன உறுதியை மேம்படுத்தி, மனச்சோர்வை வெல்லும் வழிகளையும், கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளையும் கற்றுக்கொள்ளலாம்.

icon

தலைவராக ஆகலாம்

நதிகள் புத்துயிர்ப்பு, கழிவறைகள் மற்றும் பள்ளிகளை கட்டுதல் போன்ற அடிமட்ட பணிகளில் வாழும் கலையுடன் இணைந்து செயல் புரியங்கள்.

icon

சிறுதொழில் முனைவோராக ஆகலாம்

இப்பயிற்சியை முடித்தவுடன், நீங்கள் விரும்பினால் எங்களுடன் சேர்ந்து சிறுதொழில் முனைவராக ஆகும் வாய்ப்பை தேர்ந்தெடுக்கலாம். அதற்கான பயிற்சி, பொருட்கள், சேவைகள் மற்றும் தளங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.

icon

மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கலாம்

மகிழ்ச்சியான, வளமான கிராமத்தை உருவாக்க என்னவெல்லாம் தேவை என்று தெரிந்துகொள்ளுங்கள். மாற்றத்தை கொண்டுவருபவராக இருப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற இளைஞர் வலுவூட்டும் பயிற்சி

மன அழுத்தத்தை கையாளுதல், மேம்பட்ட தகவல் தொடர்பு, மற்றும் தன்னம்பிக்கையை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளின் மூலம், கிராமப்புற இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பொறுப்பு எடுத்து கொள்ள உதவுகிறது.

மேலும் அறிய

பெண்களுக்கான தனித்துவமானபயிற்சி: பெண்களுக்கான கர்ம யோகா - கிராமப்புற இளம்பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை (WLTP), இவ்வற்றை இலக்காக கொண்டது

தற்காப்பு பயிற்சி

மாதவிடாய் சுகாதாரம்

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள்

உள்ளாட்சியில் (கிராம சபாவில்) பெண்களின் பங்கு

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் அறிக

நான் சேர விரும்புகிறேன் ஆனால்…

இந்த பயிற்சி முழுமையாக 7 நாட்கள் நடக்குமா?

ஆம், பயிற்சிக்கு முழு நாளுமே உங்களுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும். இடைவேளைகளும், ஓய்வு வேளைகளும் உண்டு.

இந்த ஏழு நாட்களில் என்ன கற்றுத் தரப்படும்?

யோகா, தியானம், பிராணாயாமம், சுதர்சன க்ரியா, நடைமுறை ஞானம், தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவத் திறன்கள், மென் திறன்கள், வேலைவாய்ப்புத் திறன்கள், மற்றும் ஒரு சமுதாயத்தை நிர்வகிக்கத் தேவையான திறன்கள் ஆகியவை கற்றுத்தரப்படும்.

சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை? எனக்கு இந்தப் பயிற்சி எப்படி பயன்படும்?

மனத்தளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க இப்பயிற்சி உங்களுக்கு உதவும்.

இந்தப் பயிற்சி கிராமப்புற இளைஞர்களுக்கு மட்டுமானதா?

இது குறிப்பாக 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கானது.

நான் கிராமங்களில் பணி செய்ய விரும்பும் ஒரு நகர்புற இளைஞர். இப்பயிற்சி எனக்கு உதவுமா?

நிச்சயமாக. கிராமப்புற சமூகங்களில் பணிபுரிவதற்கான அனுபவ ஞானத்தையும், அதனுடன் தொடர்புள்ள பிற திறன்களையும் வளர்த்துக்கொள்ள இப்பயிற்சி உங்களுக்கு உதவும்.