
ஆன்லைன் மெடிடேஷன் அண்ட் ப்ரெத் வோர்க்ஷாப்
வாருங்கள்! உலகின் அதிக சக்தி வாய்ந்த மூச்சுப்பயிற்சி முறையை கற்றுக்கொள்ளலாம்—உலகெங்கிலும் 45 மில்லியன் மக்கள் சுதர்சன கிரியாTM விரும்பிப்பயில்கிறார்கள்.
நோய் தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் • மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் • உறவுகளை மேம்படுத்துங்கள் • வாழ்க்கையை சந்தோஷமாகவும், அர்த்தமுடனும் வாழுங்கள்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யநன்மைகள்
சுவாசத்தின் ரகசியங்களை கண்டறியலாம்! ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறலாம்!

விரைவாகவும், திறம்படவும் மன அழுத்தத்தை
குறைக்கலாம் உங்கள் சுவாசத்தின் சக்தியால்!
தியான மற்றும் மூச்சு பயிற்சி முகாமில், யோகம் சார்ந்த தேர்ந்த மூச்சுப் பயிற்சிகள் உங்களுக்கு அளிக்கப்படும். மன அழுத்தத்தை குறைத்து, பதட்டம் மற்றும் மனச்சோர்வை நீக்க இது உதவும். தெளிவான, நேர்மறையான மனநிலையை மீட்டளிக்கும்.

மனத்தை வெற்றி கொண்டு
மீண்டுவரும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம்!
மனத்தின் தன்மையை புரிந்துகொள்வது வாழ்க்கையைப் பற்றிய பரந்த பார்வயை அளிக்கும். விரக்தி, பொறுமையின்மை மற்றும் கவலையை உருவாக்கும் பிரச்சினைகளினால் நிலைகுலையாமல் இருக்க உதவும்.

தியானத்தை எளிதாக்கலாம்
சுதர்சன கிரியாவினால்TM
தியானம் செய்ய முயன்றும், அலைபாயும் மனத்தினால் விரக்தியடைகிறீர்களா? தியான மற்றும் மூச்சுப் பயிற்சி முகாமின் எளிய ஆனால் சக்தி வாய்ந்த நுட்பமான சுதர்சன கிரியாTM ஆழ்தியானத்தில் உங்களை சுலபமாக கொண்டு செல்லும்.

ஆழ்ந்த ஓய்வெடுக்கலாம்!
வழிகாட்டலோடு கூடிய யோகா மற்றும் தியானத்தினால்
எங்கள் சுலபமான முறையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம். தினசரி செய்யக்கூடிய எளிய யோகாசனங்களை கற்று, ஆரோக்கியம், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம், மற்றும் ஓய்வை பெறுங்கள். உங்கள் அக அழகை வெளிப்படுத்தும் வழிகாட்டப்பட்ட தனித்தன்மை வாய்ந்த தியானங்கள்!
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
சுதர்சன கிரியா பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?
உலகெங்கும் சுதர்சன கிரியா குறித்து தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீடுகள் கீழ்கண்ட பலன்களைத் தொகுத்தளிக்கின்றன:
▴ 33%
6 வாரங்களில் அதிகரித்தல்
நோய் எதிர்ப்பு ஆற்றல்
▴ 57%
6 வாரங்களில் குறைதல்
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள்
▴ 21%
1 வாரத்தில் அதிகரித்தல்
மன நிறைவு
சுதர்சன கிரியா உடலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது

வாழும் கலை உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆன்மீகப் பயிற்சியாக திகழ்கிறது

வாழ்க்கையை மாற்றும்

நிறுவனர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
நான் பயிற்சியில் சேர விரும்புகிறேன், ஆனால்…
இப்பயிற்சி என் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?
உறுதியாக! சுதர்சன கிரியாவின்TM தொடர் பயிற்சி தூக்கத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும். இம்முகாமினால் பயன்பெற்றவர்களின் அனுபவங்களை படித்தாலே இது உங்களுக்கு தெரியும். ஆசிரியரிடம் உங்கள் உடல்நிலை குறித்து முதலிலேயே தெரியப்படுத்தவும். உங்களுக்கு ஏற்றார்போல் சிறந்த முறையில் அவர்கள் பயிற்சியை வடிவமைத்து கொடுப்பார்கள்.
நான்கு நாள் இணையவழி பயிற்சி என் வாழ்வை மாற்றி விடுமா?
வாழ்க்கை ஒரு நொடியிலும் மாறக்கூடும். அன்புக்குரியவருடன் ஒரு நொடியோ, கார் ஓட்டும்பொழுது கவனம் சிதறும் ஒரு நொடியோ வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும் அல்லவா? ஒரு “யுரேகா” நொடி உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகையே மாற்றிவிடக்கூடும். எனினும், இம்முகாம் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு பதிலாக, நீங்களே அதை மாற்றிக்கொள்வதற்கான கருவிகளை உங்களுக்கு அளிக்கிறது. உலகெங்கிலும் பலகோடி மக்கள் ஏற்றுக்கொண்ட, பரவலாக ஆய்வு செய்ய்பட்ட, சுதர்சன கிரியாவைTM நீங்கள் இந்நான்கு நாட்களில் கற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சியை செய்தவர்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்த அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
வாழ்நாள் முழுதும் வாராந்தர இலவச தொடர் பயிற்சி வகுப்புகளில் (ஃபாலோ அப் வகுப்புகள்) நீங்கள் கற்றதை பயிலலாம். மேலும், உலகின் எந்த மூலையிலும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ளலாம். வாழும் கலையின் உயர்நிலை பயிற்சிகளிலும் நீங்கள் மேற்கொண்டு சேரலாம். இந்நான்கு நாட்கள் உங்கள் பயணத்தின் தொடக்கம் மட்டுமே!
இப்பயிற்சியினால் பக்கவிளைவுகள் எதுவும் உண்டாகுமா?
ஒரே பக்கவிளைவு அழியாத புன்னகை மட்டுமே! 🙂உலகெங்கிலும் லட்சக்கணக்கானவர்கள் சுதர்சன கிரியாவைTM தினமும் பயின்று, ஆரோக்கியம் சார்ந்த பல நன்மைகளை அடைகிறார்கள். இது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
எங்கள் பயிற்சிகள் முற்றிலும் பாதுகாப்பானவை. ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், முதுகு வலி போன்றவை இருந்தால், பயிற்சியின் போது உரிய முறையில் உங்களுக்கு வழிகாட்டப்படும்.
எனக்கு மனஅழுத்தம் இல்லை. நான் ஏன் இப்பயிற்சியை எடுக்க வேண்டும்?
மன அழுத்தம் இல்லையா! மிக்க மகிழ்ச்சி! நீங்கள் சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் சற்று சிந்தியுங்கள்: நம்மிடம் பணம் தீர்ந்த பின்னரா நாம் சேமிக்கத் தொடங்குகிறோம்? உடல்நலம் கெட்ட பின்னரா நாம் உடற்பயிற்சி செய்கிறோம்? இல்லை அல்லவா? அப்படியானால், எந்த ஒரு பின்னடைவிலிருந்தும் மீளும் தன்மையையும், வலிமையையும் தேவை ஏற்படும்போது பயன்படுத்துவதற்காக இப்பொழுதே நம்முள் இருப்பு வைத்துகொள்ளலாம் அல்லவா? நீங்கள்தான் இதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும். மன அழுத்தம் வரும்வரை காத்திருந்தும் நீங்கள் இப்பயிற்சியை எடுக்கலாம். உங்கள் உதவிக்கு அப்பொழுதும் இப்பயிற்சி முகாம்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்!
நீங்கள் Rs 3000/- வசூலிப்பது ஏன்?
இவ்வகுப்புகளில் பங்கேற்றவர்கள் மேலும் அதிக தொகையை வசூலிக்க பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால், நீங்கள் அளிக்கும் நன்கொடை இன்றியமையாத வாழ்க்கை திறன்களை உங்களுக்கு கற்றுதருவதோடு, பல சேவை திட்டங்களுக்கும் பயன்படுகிறது. உதாரணமாக, 70,000 பழங்குடியின சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புதல், 43 நதிகளை மீண்டும் உயிர்ப்பித்தல், 2,04,802 கிராமபுற இளைஞர்களின் வாழ்வாதார திறனை மேம்படுத்துதல், 720 கிராமங்களில் சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளால் ஒளியேற்றுதல் போன்றவை. இது போதாது என்று நினைத்தால், மேலும் அதிக நன்கொடையை நீங்கள் அளிக்கலாம்! எங்களுக்கு ஒரு மறுப்புமில்லை!😉