குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு மனிதநேயத் தலைவர், ஆன்மீக குரு மற்றும் அமைதித் தூதுவர் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமுதாயம் என்னும் அவரது தொலைநோக்குப் பார்வை, வாழும் கலை அமைப்பின் சேவைத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளின் மூலமாக உலகம் முழுவதும் பலகோடி மக்களை ஒன்றிணைத்துள்ளது.
துவக்கம்
1956 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பிறந்த குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஒரு அபூர்வ குழந்தை. தமது நான்காம் வயதிலேயே மிகவும் பழமையான பகவத்கீதையின் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தன்னியல்பாகப் பாடியவர். மேலும், அந்த இளம் வயதிலேயே அடிக்கடி தியான நிலையில் ஆழ்ந்து விடுவது வழக்கம். குருதேவரின் முதல் ஆசிரியரான சுதாகர் சதுர்வேதி, மகாத்மா காந்தியுடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்தவர். 1973 ல், தனது பதினேழாவது வயதிற்குள், நவீன விஞ்ஞானத்தின் பட்டப்படிப்பில் தேறியதுடன் பாரம்பரிய வேதாகமங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.
World Meditation Day
● Livewith Gurudev Sri Sri Ravi Shankar
● Liveat 8:00 pm IST on 21st December
வாழும் கலை என்பது வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான ஒரு கொள்கையும், தத்துவமும் ஆகும். இது ஒரு நிறுவனம் அல்ல: ஒரு இயக்கம். உள்ளார்ந்த அமைதியை கண்டடைவதும், வெவ்வேறு பண்பாடு, பாரம்பரியம், மதம், நாடு ஆகியவற்றை சார்ந்த சமுதாய மக்களை ஒன்றிணைப்பதுமே இதன் மூல நோக்கம். அனைத்து இடங்களிலும் மனித வாழ்வை மேம்படுத்துவதே நம் இலக்கு என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
வாழும் கலை மற்றும் மனித விழுமியங்களுக்கான சர்வதேச சங்கத்தை (இண்டர்நேஷனல் அஸோசியேஷன் ஆஃப் ஹ்யூமன் வேல்யூஸ் (IAHV) துவக்குதல்
ஒரு உலகளாவிய, இலாப நோக்கமற்ற, கல்வி மற்றும் மனிதநேய நிறுவனமாக வாழும் கலை அமைப்பு குருதேவரால் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பின் கல்வி மற்றும் சுயமுன்னேற்றம் சார்ந்த பயிற்சிகள் மன அழுத்தத்தை நீக்கவும், நல்லுணர்வைப் பேணவும் பல சக்திவாய்ந்த நுட்பங்களை அளிக்கின்றன. இப்பயிற்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுதும், சமுதாயத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கும் பயன் தருகின்றன. தற்சமயம், உலகின் 180 நாடுகளில், வாழும் கலையின் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. வாழும் கலை அமைப்பின் துணை நிறுவனமாக மனித விழுமியங்களுக்கான சர்வதேச சங்கத்தை (இண்டர்நேஷனல் அஸோசியேஷன் ஆஃப் ஹ்யூமன் வேல்யூஸ் (IAHV) குருதேவர் 1997 ஆம் ஆண்டில் நிறுவினார். நிலையாக பேணக்கூடிய வளர்ச்சி சார்ந்த திட்டங்களின் ஒருங்கிணைப்பு, மனித விழுமியங்களை பேணுதல், மற்றும் முரண்பாடுகளை களையும் முயற்சிகளை முன்னெடுத்தல் போன்ற களங்களில் இந்நிறுவனம் பணிபுரிகிறது.
சேவைக்கான உந்துதல் மற்றும் ஞானத்தை உலகமயமாக்குதல்

ஒரு ஆன்மீகத் தலைவராக குருதேவர், யோகா மற்றும் தியான மரபுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்து, அவற்றை 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். பண்டைய ஞானத்துக்கு புத்துயிர் அளித்ததோடு மட்டுமல்லாமல், தனிமனித மற்றும் சமூக மாற்றத்துக்கான புதிய நுட்பங்களையும் குருதேவர் படைத்துள்ளார். சுதர்சன கிரியாவை உள்ளடக்கிய இந்த நுட்பங்கள், கோடிக்கணக்கான மக்களுக்கு மன அழுத்ததிலிருந்து விடுபட்டு, தம்முள் உறையும் சக்தியையும், அன்றாட வாழ்வில் அமைதியையும் கண்டெடுக்க உதவியிருக்கின்றன.
அமைதித் தூதுவர்

உலகெங்கிலும் பல முரண்பாடுகளையும், மோதல்களையும் களைவதில் முக்கியமான பங்காற்றியிருக்கும் அமைதித் தூதுவரான குருதேவர், தன்னுடைய அஹிம்சை கொள்கையை பல பொது மன்றங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பகிர்ந்து வருகிறார். அமைதியை மட்டுமே கருத்தில் கொள்ளும் நடுநிலையாளராக கருதப்படும் குருதேவர், மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். கொலம்பியா, ஈராக், ஐவரி கோஸ்ட், காஷ்மீர் மற்றும் பீகாரில் முரண்பாடுகளால் மோதிக்கொண்ட எதிரெதிர் தரப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவந்த பெருமை குருதேவரையே சேரும். தன்னுடைய பணிகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம், மனித விழுமியங்களின் மகத்துவத்தையும், நாம் எல்லோரும் ஒரே உலகக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியதின் அவசியத்தையும் குருதேவர் இடைவிடாது வலியுறுத்தி வருகிறார். சமய நல்லிணக்கத்தை பேணுதல் மற்றும் அடிப்படைவாதத்திற்கு மருந்தாக கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட கல்வி ஆகியவை, நிலையான அமைதிக்கான குருதேவருடைய முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிப்பவை.
மனித விழுமியங்கள் மற்றும் தொண்டுப் பணிகளில் மறுமலர்ச்சியை கொண்டுவந்ததின் மூலம், உலகம் முழுதும் பலகோடி மக்களின் வாழ்க்கையில் குருதேவர் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார். இனம், தேசியம் மற்றும் மத அடையாளங்களை கடந்து, அழுத்தமற்ற, வன்முறையற்ற ஒருஉலகக் குடும்பம் என்னும் பார்வைக்கு குருதேவர் புத்துயிர் அளித்திருக்கிறார்.


