சிறுவர்கள் மற்றும் பதின்பருவத்தினருக்கான பயிற்சிகள்
மன அழுத்தத்தை நீக்குங்கள், கவனம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்
வாழும் கலையின் சிறுவர்களுக்கான பயிற்சிகள் மன அமைதி, தெளிவு, கவனக்கூர்மை மற்றும் உணர்வு சமநிலையை பேணி அவர்களை வலுப்படுத்தும் நுட்பங்களை கற்பிப்பதன் மூலம் அவை அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவுகின்றன. பகிர்தல், மற்ற சிறுவர்களுடன் இணக்கமாக விளையாடுதல், மனிதநேயத்தை உணர்தல் போன்ற குணங்களை இப்பயிற்சிகள் வளர்க்கின்றன.
பதின்பருவத்தினருக்கு மன அழுத்தத்தையும், உணர்வுகளையும் கையாள நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய நுட்பங்களையும், ஆய்வுகளினால் உறுதிப்படுத்தப்பட்ட சுதர்சன கிரியா நுட்பத்தையும் மேலும் வாழ்க்கை திறன்களையும் இப்பயிற்சிகள் அளிக்கின்றன. மனஒருநிலை திறனை அதிகரித்து அவர்களை கல்வியில் சிறப்பாக செயல்பட வைக்கின்றன. மேலும் சகமாணவரோடும், பெற்றோரோடும் ஆசிரியர்களோடும் நேர்மறை உறவை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன.
எழுச்சி ஊட்டலாம், வலுப்படுத்தலாம், சாதிக்கலாம்
5 வயதுக்கு மேற்பட்ட, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கபட்ட, உடல், மனம், மற்றும் உணர்வு சார்ந்த நல்வாழ்வை மேம்படுத்தும் பயிற்சிகள்
சுதர்சன கிரியா
ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு மூச்சுப் பயிற்சி.
மன அழுத்தம், கோபம், பதட்டம் போன்றவற்றை கையாள உதவுவதாக மருத்துவ ஆய்வினால் சான்றளிக்கப்பட்டது.
கவனக்குவிப்பு மற்றும் ஒருமுகத்தன்மையை மேம்படுத்துகிறது.
கற்கும் திறனை அதிகரிக்கிறது.
யோக நுட்பங்கள்
அமைதியான மனநிலைக்கு வழிவகுக்கும் ஆசனங்கள் மற்றும் ஓய்வு தரும் பயிற்சிகள். ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிமையான பயிற்சிகள். தன்னம்பிக்கையையும் ஒருமுகத்தன்மையையும் அதிகரிக்கும் சிறப்பு பயிற்சிகள்.
நடைமுறை உத்திகள்
எதிர்மறை உணர்வுகளை கையாளவும், பள்ளியில் வெற்றி பெற ஊக்கம் கொள்ளவும், சகமாணவர்களின் அழுத்தத்தையும் வாழ்வின் சவால்களையும் எதிர்கொண்டு ஆரோக்கியமான முடிவுகளை எடுக்கவும் சுலபமாக நடைமுறைப் படுத்தக்கூடிய வாழ்க்கைத் திறன்கள்.
சேர்ந்து விளையாடும் (இண்டெராக்டிவ்) விளையாட்டுகள்
இலக்குகளை நிர்ணயித்தல், நல்ல முடிவுகளை எடுத்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், முரண்பாடுகளை களைதல், சமூகத்தில் இணக்கமாக நடத்தல் மற்றும் ஒத்துழைப்பை கற்றுக்கொள்ள உதவும் சுவாரஸ்யமான விளையாட்டுகள், தனி நபர் மற்றும் குழு செயற்பாடுகள் மற்றும் சுறுசுறுப்பான விவாதங்கள்.











