Cute little boy in a white shirt and dark blue jeans is thinking holding his finger near his cheek. Decision making concept. A concrete wall background with a cog brain sketch on it.

இண்ட்யூஷன் ப்ராஸெஸ்

சரியான நேரத்தில் சரியான சிந்தனையைப் பெறுவது

மேம்பட்ட கற்றல் • சிறப்பான கண்ணோட்டம் • உயரிய முடிவெடுத்தல்

10 பத்துநாட்கள் (5 - 8 வயதினருக்கு), 17 நாட்கள் (8 - 18 வயதினருக்கு)

உங்கள் குழந்தைகள் கற்பவை

icon

உள்ளுணர்வு

இது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்களுக்கு வழி காட்டுகிறது.

icon

செயலூக்கம்

மிகுந்த நிதானமும், இயங்காற்றலும் ஒருங்கே இணைந்த மன நிலையில் இருத்தல்.

icon

புதுமையான கண்டுபிடிப்பு

நூதனமான மற்றும் படைப்பாற்றல் மிக்க சிந்தனை.

icon

முடிவெடுத்தல்

உள்ளுணர்வினால் சிறந்த முடிவுகளை எடுத்தல்.

வாழும் கலையின் உள்ளுணர்வு செயலாக்கப் பயிற்சி என்பது யாது?


உள்ளுணர்வு செயலாக்க வகுப்புகள் ஒரு புரட்சிகரமான பயிற்சி திட்டம் ஆகும். அது குழந்தைகள் மற்றும் பதின் வயதினர் தமது உள்ளுணர்வினுள் மெல்ல நுழைந்து, அதன் உதவியால் தம் உள்ளுணர்வின் பன்முகப் பரிமாணங்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. இப்பயிற்சியில் அவர்கள் கற்றுக் கொண்டவற்றை தம் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும்போது அது பெரும் மாற்றத்தை விளைவிக்கிறது. இங்கு கற்பிக்கப்பட்டவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்து வருவதால் அவர்களது வாழ்க்கையின் அனைத்து சூழலிலும் முன்னறியும் திறன், புதுமையான சிந்தனை, சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் திறன் ஆகியவை மேம்படுகின்றன.

நமது உணர்வுநிலை அபரிமிதமான மற்றும் நாம் கண்டறியாத ஆற்றலின் உறைவிடமாக இருக்கிறது. உள்ளுணர்வு செயலாக்கப் பயிற்சி, குழந்தைகள் தமது மனத்தின் சாத்தியங்களை இயல்பாகவும், பாதுகாப்பாகவும் வெளிக்கொணர உதவுகிறது. மனதானது ஐம்புலன்களைக் கடந்து உள்ளுணர்வினை அதாவது ஆறாவது அறிவினை அணுக அது உதவுகிறது.

அதன் வெளிப்பாடாக அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் படிப்பது, வண்ணம் தீட்டுவது, நடப்பது, விளையாடுவது போன்ற பல செயல்களையும் செய்து காட்டுகின்றனர். அது மட்டுமன்றி மிகவும் ஆற்றல்மிக்க திறன்கள் பலவற்றையும் அவர்கள் பெறுகிறார்கள். நாம் அதன் பலனை அவர்களது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் காணலாம்.

முழுமையாக வளர்ச்சியடைந்த மற்றும் ஆற்றல்மிக்க உள்ளுணர்வு கல்வி, விளையாட்டு, தனித்திறமைகள், கருத்துப் பரிமாற்றம், பிறரோடு உறவாடும் திறன் ஆகிய அனைத்தையும் மேம்படுத்துகிறது. புதுமைகளைப் படைத்தல், கண்டுபிடிக்கும் திறன் ஆகியவற்றுக்கும் உதவுகிறது.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

உள்ளுணர்வு செயலாக்கப் பயிற்சி - இளம் பருவத்தினருக்கானது(5+ to 8 years)

கால அளவு: 10 நாட்கள்

பயிற்சி திட்டத்தின் அட்டவணை

நாட்கள் வடிவமைப்பு கால அளவு
முதல் வாரம்: வெள்ளி - ஞாயிறு நேரடி வகுப்பு நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம்
முதல் வாரம்: திங்கள்- சனி இணையவழி (zoom) நாள் ஒன்றுக்கு 15 நிமிடங்கள்
இரண்டாம் வாரம்: ஞாயிறு நேரடி வகுப்பு 2 மணி நேரம்

பயிற்சி விவரங்கள்

முதல் வாரம்

  • நேரடி வகுப்புகள் (வெள்ளி - ஞாயிறு):
    • கால அளவு: நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம்
    • முக்கிய கவனம்: உள்ளுணர்வுத் திறன்கள் பற்றிய அறிமுகம்
  • இணையவழி வகுப்புகள் (திங்கள்- சனி)
    • கால அளவு: நாள் ஒன்றுக்கு 15 நிமிடங்கள்
    • தளம்: Zoom / இணையவழி
    • தேர்ந்த பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் அளிக்கப்படுகிறது.
  • கற்றல் நோக்கங்கள்:
    • இயல்பாக அமைந்துள்ள உள்ளுணர்வுத் திறன்களை வளர்ச்சியடையச் செய்வது
    • சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளைச் செய்தல்
    • சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் தனித்துவமான செயல்பாடுகளில் ஈடுபடுதல்
  • பெற்றோரின் பங்கு:
    • முதல் வாரத்தின் கடைசி 2 மணி நேர வகுப்பில் பங்கேற்பது
    • தம் குழந்தைகளின் கற்றல் தொடர்பான ஆழ்ந்த அறிவினைப் பெறுவது
    • அவர்களது உள்ளுணர்வை எவ்வாறு ஆழமாக்குவது என்று அறிந்து கொள்வது

இரண்டாம் வாரம்

  • நேரடி வகுப்பு (ஞாயிறு):
    • கால அளவு: 2 மணி நேரம்
    • முக்கிய கவனம்: கற்ற விஷயங்களை மதிப்பாய்வு செய்வது, மேலும் ஆழ்ந்து கற்பது.
  • பெற்றோரின் பங்கு:
    • கடைசி 1 மணி நேரம் பங்கேற்பது
    • தம் குழந்தையின் உள்ளுணர்வு பயணத்தில் அடுத்த நகர்வுகளை அறிந்துகொள்ளுதல்.

சரியான நேரத்தில் சரியான எண்ணம் தோன்றுவதே உள்ளுணர்வாகும்

– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

உள்ளுணர்வு செயலாக்கப் பயிற்சி - குழந்தைகளுக்கானது (8+ முதல் 13 வயது வரை)

உள்ளுணர்வு செயலாக்கப் பயிற்சி - பதின்ம வயதினருக்கானது (13+ முதல் 18 வயது வரை)

கால அளவு: 17 நாட்கள்

பயிற்சி திட்டத்தின் அட்டவணை

நாட்கள் வடிவமைப்பு கால அளவு
முதல் வாரம்: வெள்ளி – ஞாயிறு நேரடி வகுப்பு நாள் ஒன்றுக்கு 2 மணி நே
முதல் வாரம்: திங்கள்- வியாழன் இணையவழி ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் (குழந்தைகள்), ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் (டீன் ஏஜர்கள்)
இரண்டாம் வாரம்: வெள்ளி – ஞாயிறு நேரடி வகுப்பு நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம்
இரண்டாம் வாரம்: திங்கள்- சனி இணையவழி நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள்
மூன்றாம் வாரம்: ஞாயிறு நேரடி வகுப்பு 2 மணி நேரம்

பயிற்சி விவரங்கள்

முதல் வாரம்

  • நேரடி வகுப்புகள் (வெள்ளி - ஞாயிறு):
    • கால அளவு: நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம்
    • முக்கிய கவனம்: உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கான உத்திகள்
  • இணையவழி வகுப்புகள் (திங்கள்- வியாழன்):
    • தளம்: Zoom / இணையவழி
    • தேர்ந்த பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் அளிக்கப்படுகிறது.
  • கற்றல் நோக்கங்கள்:
    • அவரவர் வயதுக்கு ஏற்ற உத்திகள் வாயிலாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பெறுவது.
    • யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகளைப் பயில்வது.
    • மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் மற்றும் உணர்ச்சிகளைத் திறம்பட நிர்வகித்தல்.
    • உள்ளுணர்வு வளர்ச்சிக்காக ஆயத்தம் அடைதல்.
  • கற்பிக்கும் முறைகள்Teaching methods:
    • விளையாட்டு
    • குழுவாக கலந்துரையாடுதல்

இரண்டாம் வாரம்

  • நேரடி வகுப்பு (வெள்ளி - ஞாயிறு):
    • கால அளவு: நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம்
    • முக்கிய கவனம்: உள்ளுணர்வுத் திறன்களை வளர்த்தல்
  • இணையவழி வகுப்புகள் (திங்கள்- சனி):
    • கால அளவு: குழந்தைகள் மற்றும் பதின் வயதினர், இரு பிரிவினருக்கும் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள்
    • தளம்: Zoom / இணையவழி
    • தேர்ந்த பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் அளிக்கப்படுகிறது.
  • கற்றல் நோக்கங்கள்:
    • இயல்பாக அமைந்துள்ள உள்ளுணர்வுத் திறன்களை வளர்ச்சியடையச் செய்வது.
    • சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளைச் செய்தல்.
    • சுவாசத்தைக் கையாளுதல், வழிகாட்டுதலோடு தியானம் செய்தல் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளுதல்.
  • கற்பிக்கும் முறைகள்:
    • சுவாரஸ்யமான விளையாட்டுகள்
    • தனித்துவமிக்க செயல்பாடுகள்
  • பெற்றோரின் பங்கு:
    • இரண்டாம் வாரத்தின் கடைசி 2 மணி நேர வகுப்பில் பங்கேற்பது
    • தம் குழந்தைகளின் கற்றல் தொடர்பான ஆழ்ந்த அறிவினைப் பெறுவது
    • அவர்களது உள்ளுணர்வை எவ்வாறு ஆழமாக்குவது என்று அறிந்து கொள்வது

மூன்றாம் வாரம்

  • நேரடி வகுப்பு (ஞாயிறு):
    • கால அளவு: 2 மணி நேரம்
    • முக்கிய கவனம்: மதிப்பாய்வு செய்வது, ஆழ்ந்து செல்வது, வரும் நாட்களுக்கான வழி காட்டுதல்
  • கற்றல் நோக்கங்கள்:
    • கற்ற உத்திகளை மதிப்பாய்வு செய்தல் அவற்றை வலுப்படுத்துதல்
    • மேன்மேலும் முன்னேறும் வழியை அறிந்து கொள்ளல்
  • பெற்றோரின் பங்கு:
    • கடைசி 20 நிமிடங்கள் வகுப்பில் பங்கேற்பது
    • தம் குழந்தையின் உள்ளுணர்வு பயணத்தில் அடுத்த நகர்வுகளை அறிந்துகொள்ளுதல்.

உள்ளுணர்வு செயலாக்கம் தொடர்பான ஆய்வு முடிவுகள்

icon

22%

பதின்ம வயதினரிடம் துல்லியம் (accuracy) உயர்வு

icon

29%

மன ஆரோக்கியம் உயர்வு

icon

69%

உணர்ச்சி சிக்கல்களின் வீழ்ச்சி

icon

67%

மிகையான இயக்கம் (hyperactivity) வீழ்ச்சி

icon

50%

சக வயதினருடான (peer) பிரச்சினைகள் குறைவு

icon

78%

நடத்தை தொடர்பான பிரச்சினைகள் குறைவு

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும் அறிக