இலவசப் பள்ளிகள்: இந்தியாவின் தொலைதூர மூலைமுடுக்குகளுக்கும் கல்வியை கொண்டுசேர்த்தல்
தொலைதூர பழங்குடியினப் பகுதிகள், கிராமங்கள், ஊர்கள் மற்றும் நகரங்களில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு முழுமையான, இலவச கல்வியை அளித்தல்
வழிமுறை
- பெற்றோர் மற்றும் பெரியவர்களுக்கான விழிப்புணர்வு அளித்தல்
- ஆசிரியர் பயிற்சி
- முறைசார்ந்த கற்பித்தல் மற்றும் திறன் பயிற்சி
தாக்கம்
இந்தியா முழுவதும் 1,327 இலவசப் பள்ளிகளில் 1,00,000+ குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்
பாலின விகிதம்
எங்கள் பள்ளிகளின் பாலின விகிதம் தேசிய சராசரியை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமானது.
விரைவுப் பார்வை
இந்தியாவின் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அழுத்தமற்ற சூழலில் முழுமையான, விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வியை அளிப்பதே எங்கள் நோக்கம். கடந்த முப்பதாண்டுகளாக வாழும் கலை நிறுவனம் கல்விமுறையில் விழுமியங்களை ஒன்றிணைத்து, குழந்தைகளுக்கு வாழ்வாதார தேர்வுகளையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் அளிக்கும் கல்வித்திட்டங்களை வெற்றிகரமாக நடைப்படுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவின் 22 மாநிலங்களில், 1,00,000+ மாணவர்களுடன், 1,327 இலவசப் பள்ளிகளை வாழும் கலை நடத்தி வருகிறது. எங்களுடைய முயற்சிகள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியவை:
- மின்சார மற்றும் சாலை வசதி இல்லா கிராமப்பகுதிகள், நகர்புர குடிசைப்பகுதிகள், தொலைதூர பழங்குடியினப் பகுதிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் இலவசப் பள்ளிகள்
- அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து, உள்கட்டமைப்புக்கும், மனிதவளத்துக்கும் உதவும் திட்டம்
- போதைக்கும், குற்றத்துக்கும் அடிமையாகக்கூடிய சூழலில் இருக்கும் நகர்புர குடிசைப்பகுதி மாணவர்களுக்கு வழிகாட்டும் திட்டங்கள்
இலவசப் பள்ளிகளை கட்டுவதிலும், நடத்துவதிலும், வாழும் கலை அமைப்பின் குழுக்கள் பல சவால்களை சந்தித்து, அவற்றிற்கு தீர்வும் கண்டிருக்கின்றன. இந்த சுழற்சியில், குழந்தைகளுக்கு கற்பித்தல் என்பதே மிகவும் எளிதான பணி என்பதை உணர்ந்திருக்கிறோம். மாறாக, சுற்றியிருக்கும் சமூகத்தின் மனநிலையை மாற்றி, அவர்களைக் கல்வியின் மகத்துவத்தை உணரவைப்பது சவால் நிறைந்த பணியாகவே உள்ளது. விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறைக்கு இதுவே வாழும் கலையின் தனித்துவமான பங்களிப்பாகும்.
இலவசக் கல்வி
வருங்காலத்தை பரிசளியுங்கள்
பள்ளியின் (பெங்களூரில் உள்ள இலவசப் பள்ளி) ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள். என் கிராம மக்கள் என்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்கள், இப்போது அவர்கள் எனது பேச்சைக் கவனமாகக் கேட்கிறார்கள், மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளனர்.
பிரியங்கா என்
பெங்களூருவின் மெட்ரோலைனின் முதல் ஓட்டுநர், வாழும் கலை இலவசப் பள்ளியின் முன்னாள் மாணவி
நான் மேகாலயாவில் தங்கியிருந்தால் எனக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்திருக்கும். இங்கே எனக்கு கல்வி கிடைத்தது, இப்போது வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க முடியும் என்று உணர்கிறேன்.
ரிடலின் லிங்டோ
பெங்களூரில் உள்ள வாழும் கலை இலவசப் பள்ளியின் முன்னாள் மாணவி
நான் ஒரு கொத்தனார். என் மகளின் பள்ளிக்கான கட்டணத்தை என்னால் செலுத்த முடியாது. ஸ்ரீ ஸ்ரீ ஞான மந்திர் என் குழந்தைக்கு இலவச மற்றும் மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்க உதவியது. மன அழுத்தம் இல்லாத, அன்பான, செயல்பாடு மற்றும் மதிப்பு…
அஜித் ஜாதவ்
பெற்றோர், ஸ்ரீ ஸ்ரீ ஞான மந்திர் ஷிக்னாபூர், தால்- மான், மாவட்டம் - சதாரா
சவால்கள்
இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% நபர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கிய 135 நாடுகளின் வரிசையில் இந்தியா ஏப்ரல் 2010-ல் சேர்ந்தது. கல்வி உரிமையை நடைமுறைப்படுத்துவதும், நாட்டிலுள்ள ஏறக்குறைய 500 மில்லியன் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதும் ஒரு இமாலயப் பணிதான். தகுதியான குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் கல்வியை கொண்டுசேர்க்கும் இச்சவாலை வாழும் கலை, அரசாங்கத்தோடும் பிற நிறுவனங்களோடும் சேர்ந்து, எதிர்கொள்கிறது. நாட்டில் 96% குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் படித்தாலும், 5 ஆம் வகுப்பை 72% மாணவர்களும், 8 ஆம் வகுப்பை 57% மாணவர்களும், 10 ஆம் வகுப்பை 37% மாணவர்களும் மட்டுமே முடிக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது.
நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் சில:
- பல சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளினால் பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில்லை.
- குடும்பச் சூழலின் அழுத்தங்களினால் குழந்தைகள் இடையில் நின்றுவிடுகிறார்கள்.
- தனிப்பட்ட, சமூக, பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக மாணவர்களின் செயல்திறன் குறைந்துவிடுகிறது.
- வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் ஆசிரியர்கள் வேலையை விட்டு விலகிவிடுகிறார்கள்.
இச்சவால்களை எதிர்கொள்ள நாங்கள் புதுவிதமான தீர்வுகளை கண்டடைந்திருக்கிறோம். இச்சவால்களையும் இடர்களையும் எதிர்கொள்ள நாங்கள் வகுத்திருக்கும் வியூகம் பெற்றோர், சமூகம், ஆசிரியர் ஆகிய எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.
≈ 66%
*2016 ல் கல்வி விகிதம்
இந்தியாவில் கல்வியறிவு குறைபாடு
5 ஆண்டுகளுக்கும் குறைவான பள்ளி படிப்பு
≤ 37%
ஆரம்ப பள்ளியில் சேர்பவர்களில்
பத்தாம் வகுப்பு முடிப்பவர்களின்
அதிக பள்ளி இடைநிற்றல் விகிதம் கொண்டது இந்தியா
கல்வி என்பது நாகரிகத்தின் மிகச் சிறந்த சமன்படுத்தும் உத்தி. மிக பலவீனமானவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும், வறுமையை ஒழிக்கவும் கல்வியினால் முடியும். மகிழ்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒளிரும் பாதையாக அது இருக்கிறது.
- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
உத்தி
எங்கள் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு முறையாக உருவாக்கபட்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட, அவ்வப்போது செம்மை செய்யப்பட்ட உத்தி உள்ளது. இவ்வுத்தி மூன்று தூண்களின் மேல் எழுப்பப்பட்டது:
சமூகத்துடன் தொடர்பாடுதல்: குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்களுடன் தானே தொடர்பு கொண்டு, வாழும் கலை அமைப்பு குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கு முன், பெற்றோருக்கும், மற்ற குடும்ப உறுப்பினருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அச்சமூகங்களிருந்தே ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதனால் சமூகத்துடனான பிணைப்பு உறுதியாக இருக்கிறது. விளைவாக, இடைநிற்றல் விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது.
இலவச கல்வி வழங்குதல்: எங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமை நிறைந்த பின்னணியிலிருந்து வருபவர்கள். மேலும், முதல் தலைமுறையாக பள்ளிக்கு வருபவர்கள். இத்தகைய நலிவடைந்த பிரிவிலிருந்து வரும் குழந்தைகளுக்கு விழுமியங்களை அடிப்படையாக கொண்ட இலவச கல்வியை வழங்கும் அதே நேரத்தில், அக்குழந்தைகளை பள்ளியிலிருந்து விலக்கி வைக்கும் சமூக, பொருளாதார, கலாசார தடைகளையும் வாழும் கலை அமைப்பு எதிர்கொள்கிறது.
விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி: வாழும் கலையின் பள்ளிகள் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியை பேணுகின்றன. எங்கள் கல்வி உத்தியின் ஒரு முக்கிய அம்சம் முறைசார்ந்த கல்வியை வாழ்க்கை திறன்களோடு இணைப்பதாகும். இவ்வாழ்க்கை திறன்கள், தன்னம்பிக்கையை வளர்த்தல், தலைமைத்துவ பண்புகள், மனித உறவுத் திறன்கள், மற்றும் தியானத்தின் மூலம், மனித விழுமியங்களின் அடித்தளத்தில் ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கியவை.
சமூகத்துடன் தொடர்பாடுதல்
சமூகத்திலிருந்தே ஆசிரியர்களை தேர்ந்தெடுத்துப் பயிற்றுவித்தல்
இலவச கல்வி அளித்தல்
பெரும்பான்மையான குழந்தைகள் முதல் தலைமுறை மாணவர்கள்
விழுமியங்களின் அடிப்படையிலான அணுகுமுறை
தன்னம்பிக்கை, தலைமைத்துவம், மனித உறவுத் திறன்கள், ஆன்மீக நாட்டம் ஆகியவற்றை வளர்த்தல்
முதல் தலைமுறை மாணவர்களுக்கு இலவச கல்வி
தாக்கம்
இத்துறையில் எங்கள் இடைவிடா முயற்சியின் பயனாக இந்தியா முழுதும் 22 மாநிலங்களின் பழங்குடியினப் பகுதிகள், கிராமபுரம் மற்றும் நகர்புர குடிசைப் பகுதிகளில் 1,00,000+ மாணவர்கள் பயிலும் 1,327 வாழும் கலை பள்ளிகள் செயல்படுகின்றன. எங்கள் பள்ளிகளின் சிறப்பம்சங்களில் சில:
- பெரும்பான்மையானவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள்.
- எங்களின் பல பள்ளிகள், அரசு பள்ளிகள் இல்லாத இடங்களில் இயங்குகின்றன.
- சீருடை, காலணி, புத்தகங்கள், எழுதுபொருட்கள், பேருந்து வசதி, மற்றும் தினசரி மதிய உணவு ஆகியவை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
- உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேண நாங்கள் யோகா, தியானம், விளையாட்டுக்கள் மற்றும் நடனம், இசை, ஓவியம் போன்ற படைப்பூக்கம் நிறைந்த செயல்பாடுகளையும் கற்றுக் கொடுக்கிறோம்.
- எங்கள் பள்ளிகளின் 48 மாணவியருக்கு 52 மாணவர் என்ற பாலின விகிதம், தேசிய சராசரியை விட அதிகமானது.
- இதுவரை 2,000+ ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறோம்.
1,00,000+
மாணவர்களுக்கு
இலவச கல்வி
1,327
இலவசப் பள்ளிகள்
இந்தியாவின் 22 மாநிலங்களில்
2,000+
ஆசிரியர்கள்
இதுவரை பயிற்சி பெற்றுள்ளார்கள்
48 : 52
என்ற மாணவியர்: மாணவர் பாலின விகிதம்
தேசத்தின் சராசரியை விட அதிகமானது
எங்கள் பணிகளில் பங்கேற்க வாருங்கள்
புன்னகையைப் பரிசளியுங்கள்
பின்தங்கிய குழந்தைகளுக்கான கல்வித் திட்டம் எங்கள் மிகப் பெரிய பணிகளில் ஒன்றாகும். சமூகத்தில் நீண்ட காலம் நீடித்திருக்கும் சீர்திருத்தங்களை கொண்டுவர விரும்பினால், கல்வியே அதற்கு சரியான வழி.





