இயற்கை வேளாண்மை உத்திகளை விவசாயிகளுக்கு அளித்து அவர்களுக்கு வலிமையூட்டுதல்

மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், இந்திய விவசாயிகளை முன்னேற்றுதல்.

icon

உத்தி

இயற்கை வேளாண்மை உத்திகளில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை வழிநடத்துதல்

icon

விளைவு

குறைந்த செலவில் உயர்ந்த உற்பத்தி

icon

எட்டும் இலக்கு

30 லட்சம் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை உத்திகளில் பயிற்சி அளித்தல்

கண்ணோட்டம்

கடன் சுமை , விளைச்சல் குறைவு மற்றும் சமூக அழுத்தம் போன்றவை இந்தியாவின் அன்னதாதாவான விவசாயிகளை துன்புறுத்துகின்றன . விவசாயிகள் வங்கிகள் மற்றும் நிதியாளர்களிடம் கடன்வாங்கி விலையுயர்ந்த இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளை வாங்குகிறார்கள். மழை பொய்த்துவிடும்போது , விளைச்சலை இழந்து தாம் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்த வழியற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

Sri ஆர்ட் ஆஃப் லிவிங் வழங்கும் ஸ்ரீ ஸ்ரீ இயற்கை வேளாண்மைத் திட்டம் இந்தியா முழுவதிலும் விவசாயிகள் இயற்கை விவசாய உத்திகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கின்றது, அத்துடன் விவசாயிகள் குறைந்த செலவில், மேம்பட்ட உற்பத்தி மற்றும் அதிக லாபம் பெறுவதற்கான உத்திரவாதமும் அளிக்கிறது.

தற்போது பெருமளவு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சி நாசினிகள் மற்றும் கலப்பின விதைகள் போன்றவற்றை வாங்க விவசாயிகள் மிகப்பெரிய தொகையை கடனாகப் பெறவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமன்றி அந்த இரசாயனங்கள் நீரை மாசுபடுத்தி, மண்ணின் ஊட்டச்சத்துக்களைக் குறைத்து, இயற்கைச் சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆர்ட் ஆஃப் லிவிங் ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உத்திகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மண்ணின் வளத்தைப் பேணிக்காக்கும் தன்மையுடையதாகவும் இருப்பதோடு குறைந்த முதலீட்டுச் செலவுடைதாயும் அமைந்துள்ளன.

இந்த உத்திகள் ஆரம்ப காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக இருந்தபோது பெருமளவு பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1960 ஆம் ஆண்டுகளில், பசுமைப்புரட்சியின் விளைவால் அதிகளவில் உரங்கள் மற்றும் கலப்பின விதைகளின் பயன்பாடு பெருக்கம் அடைந்தது. அதனால் இந்திய விவசாயிகள் கடும் கடன்சுமையில் ஆழ்ந்ததோடு, நமது சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்புகள் நேரிட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவிசெய்யவும், மண்ணின் தரத்தை பாதுகாத்து , சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும் தற்போது மற்றொரு பசுமைப்புரட்சியை உருவாக்கவேண்டிய தருணம் வந்துள்ளது.

இப்போது ஸ்ரீ ஸ்ரீ இயற்கை விவசாயத் திட்டம் இந்தப் புரட்சியைத் தொடங்கியுள்ளது.

உத்தி

ஆர்ட் ஆஃப் லிவிங் யுவாச்சாரியர்கள், விவசாய பயிற்றுநர்கள் மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் தமது பன்முகப்பட்ட முயற்சிகளின் மூலம் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு, உதவி செய்கின்றனர். ஆர்ட் ஆஃப் லிவிங், இயற்கை விவசாயத்தில் பயிற்சி வழங்கும் செயல்திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் நடத்துகின்றது.

உள்நாட்டு விதைகள், உள்நாட்டுப் பசுக்கள் , இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி நாசினிகள் பயன்பாட்டின் முக்கியத்வம் குறித்த கருத்து விளக்கங்களோடு, செயல்முறை சார்ந்த விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பின்வரும் பயிற்சிகளை வழங்குகிறதுg:

  • பல்வேறு இயற்கை உரங்களைத் தயாரிக்கும் முறைகள்
  • வயல்களில் உரங்களைப் பொருத்தமான முறையில் பயன்படுத்தும் முறைகள்
  • வயல்களை இயற்கை முறையில் பராமரிக்கும் வழிகள்
  • அறுவடை செய்தபின் விளைந்த பயிர்களை இயற்கை முறையில் பராமரிக்கும் செயல்முறைகள்

பயிற்சி முடிந்த பிறகு, ஆர்ட் ஆஃப் லிவிங் உருவாக்கிய குழு விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்துக்கு மாற்றம் அடைய அவர்களுக்கு வழிகாட்டி உதவுகிறது.

ஆர்ட் ஆஃப் லிவிங் மேலும் 'கிஸான் மஞ்ச்' என்ற ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது, இது விவசாயிகள் தம் பிரச்சனைகள ஒருங்கிணைந்து செயலாற்றித் தீர்வுகாண உதவி செய்கிறது.

விவசாயிகள் தமது விளைப்பொருட்களை சிறந்த விலையில் விற்பனை செய்ய உதவுவதற்காக நேரடி சந்தையும் நிறுவப்பட்டுள்ளது.

3 நாள் பயிற்சி

இயற்கை விவசாயத்தின் அடிப்படைகள்

நெறிப்படுத்துதல்

வெவ்வேறு பிராந்திய மற்றும் பருவத்திற்கு ஏற்ப பிரத்யேகமான வழிமுறைகளை வழங்கி வழிகாட்டுதல்

ஆதரவு கரம் நீட்டுதல்

யுவாச்சாரியர்கள் விவசாயிகளுடனிருந்து அவர்கள் இயற்கை விவசாயத்தில் நிலைத்திருக்க உதவுகிறார்கள்

கிஸான் மஞ்ச்

விவசாயிகள் சந்தித்து தமது பிரச்சனைகள் மற்றும் யோசனைகள் குறித்து விவாதிக்க உதவுகிறது.

நேரடி சந்தை

இடைத்தரகர்களின்றி விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களைச் சிறந்த விலைகளில் விற்க உதவுகிறது.

விவசாயம் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும். எந்த ஒரு நாகரிகமும் தழைத்தோங்கிட அங்கு விவசாயம் செழிப்பாகவும் , வளம்குன்றாமலும் இருக்க வேண்டும். நாம் விவசாயத்தின்பால் மீண்டும் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும்; இது ஓர் முதன்மையான தொழில்துறையாகும் .

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்

புரட்சியில் பங்கெடுங்கள்

உங்கள் ஆதரவுடன் எங்களால் மேலும் மேலும் சாதிக்க முடியும். சுற்றுச் சூழலுக்கு உகந்த நடைமுறைகளின் மூலம் குறைந்த செலவில் அதிக விளைச்சலைப் பெற விவசாயிகளுக்கு உதவலாம்.
நன்கொடை அளிக்கலாம்

விளைவுகள்

ஸ்ரீ ஸ்ரீ இயற்கை விவசாயத்தின் வாயிலாய் , முதன்முதலாய் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறிய மற்றும் குறைந்த விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களது விளைச்சலுக்கான செலவுகள் வேதியியல் விவசாயத்திற்கு செலவிட்டதில் 1/5 பங்காக குறைந்துள்ளன. அத்துடன் முன்பு விவசாயத்திற்குத் தேவைப்பட்ட நீரின் அளவில் 1/5 பங்குக்கும் குறைவான நீர் மட்டுமே இம்முறையில் தேவைப்பட்டது.

விளைச்சலுக்கான முதலீட்டுச் செலவு குறைந்தது

மிகவும் குறைந்த நீர் பயன்பாட்டில் அதிக நிலபரப்பில் விவசாயம் செய்ய முடிந்தது

நிலம் புதுப்பிக்கப்பட்டது

உற்பத்தி அதிகரித்தது

பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழல் பாதுகாக்கப்பட்டது

உரங்களுக்கான மானியச் செலவு மிச்சப்படுத்தப்படுத்தப்பட்டது