மனச்சோர்வு

மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு ஆழ்ந்த மனநிறைவு அடைதல்

வாழ்க்கை என்பது ஒரு யுத்தமாகும். மருத்துவர்கள் நோய்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வழக்கறிஞர்கள் அநீதிக்கு எதிராகப் போராடுகிறார்கள். ஆசிரியர்கள் அறியாமைக்கு எதிராகப் போராடுகிறார்கள். நீங்கள் போராடும் மன வலிமையை இழக்கும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. அர்ஜுனன் மனமுடைந்து போனான், அவன் போராடவிரும்பவில்லை. அவனது வில் கைகளிலிருந்து நழுவி விழுந்தது, விரல்கள் நடுங்கின. கிருஷ்ணர் அவரை விழித்தெழுந்து போராடும்படி வலியுறுத்தினார்., போராட வேண்டும் எனும் உங்கள் முடிவு, அர்ஜுனனுக்கு ஏற்பட்டது போல, உங்களுடைய மனஅழுத்தத்தை அகற்றிவிடும். நீங்கள் சுதர்சனக் கிரியா மற்றும் தியானம் செய்வதால், இதுவரை உங்களுக்குத் தொல்லையளித்து, உங்கள் வாழ்க்கையைத் துன்பகரமாக மாற்றிய கடந்த கால வடுக்கள் அனைத்தும் விரைவில் அகன்று விடும்.

மனஅழுத்தத்திலிருந்து மீள்வது எவ்வாறு?

icon

பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்

மனஅழுத்தம் என்பது பொருளாதார மந்தநிலையைக் காட்டிலும் மோசமானது. ஒவ்வொருவரும், தான் அதைக் கடந்துசெல்லவும், தன்னைச்சுற்றி இருப்போருக்கு உதவவும் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, மனஅழுத்தத்தை பொருத்தமட்டும், அது உங்களது ‘கர்மவினை’ என்று எண்ண வேண்டாம். நீங்கள் அதைக் குறித்து ஏதாவது செய்ய இயலும்.

icon

உங்கள் வாழ்க்கை விலை மதிப்பற்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது. அதை இழந்துவிடாதீர்கள். நீங்கள் தியானம் செய்யும்போது, உங்களைச் சங்கடப்படுத்தி, உங்கள் வாழ்க்கையைத் துன்பகரமாக மாற்றிய பழைய வடுக்கள் அனைத்தும் விரைவில் அகன்று விடும். இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும்விட நீங்கள், உங்களுக்கே அதிக மதிப்பளிக்க வேண்டும், ஏனெனில், நீங்கள்தான் உங்கள் உலகத்தின் மையமாக இருக்கிறீர்கள்.

icon

நீங்கள் வெறுமனே அமர்ந்துகொண்டு சிந்திப்பதை விட்டுவிடுங்கள்

அதனால், ஏதும் செய்யாமல் அமர்ந்துகொண்டு. ' எனக்கு என்ன நடக்கும்?' என்று சிந்தித்த படியே இருக்க வேண்டாம். – உங்களுக்கு என்ன நடந்துவிடும்? தொடர்ந்து அதைப்பற்றி சிந்திக்கும்போது, அது உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள், சமூகத்திற்குப் பணியாற்றவே இந்த உலகத்திற்கு வந்திருக்கிறீர்கள். இறைவனது பணியை ஆற்றவே இந்த உலகிற்கு வந்திருக்கிறீர்கள். என்பதைப் புரிந்துகொண்டு ஏதாவது ஒரு சேவைப் பணியில் ஈடுபடுங்கள். சுதர்சன கிரியாவையும், தியானத்தையும் பயிற்சி செய்யுங்கள். சில காலம் சுதர்சன கிரியாவை தொடர்ந்து செய்து பாருங்கள். அதன் விளைவாய் எவ்வளவு மாற்றம் நிகழ்கிறது என்பதை காணுங்கள்.

icon

விழித்தெழுங்கள்!

நீங்கள் எதைக்குறித்து மனஅழுத்தத்தில் இருக்கிறீர்கள்? விழித்தெழுந்து பாருங்கள். எப்படியும் நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம்; உடலை இங்கு விட்டுவிட்டு வெளியேறப் போகிறோம். இந்தப் பூமியில் இருக்கப்போகும் மீதமுள்ள காலத்தில், நான் மகிழ்ச்சியோடு இருந்து, சுற்றியுள்ளவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியைப் பரப்ப இயலாதா? எதையாவது பெறுபவனாக இருக்கும் நிலையிலிருந்து, மற்றவர்க்கு கொடுக்கும் நிலைக்குச் செல்ல முடியாதா? எதுவும் இல்லையென்றால், குறைந்தபட்சம் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அளிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நல்லது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், நல்ல அதிர்வுகளை பிறருக்கு அளிக்க வேண்டும் என்ற மனப்பாங்குடன் இருப்பீர்கள் என்றால், உங்கள் மனச்சோர்வு சன்னல் வழியாக வெளியேறிவிடும்.

அழுத்தத்திற்கும் ஆற்றலுக்கும் இடையிலான மறைமுக இணைப்பு

உங்களது ஆற்றல் குறைவாக இருக்கும்போது, ​​மனஅழுத்தம் ஏற்படும். ஆற்றலின் அளவு குறையும் போது, ​​நீங்கள் ஆர்வமின்மையை உணர்கிறீர்கள். அது மிகவும் குறைவடையும்போது, வாழ விரும்பும் ஆவலையும் நீங்கள் இழந்துவிடுகிறீர்கள்.

“பிராணன்” அல்லது ஆற்றல் எல்லாவற்றிலும் இருக்கிறது. உண்மையில், நாம் பிராணன்நிரம்பிய ஒரு பெருங்கடலில் மிதந்துகொண்டு இருக்கிறோம். இது நமக்குள் இருக்கும் உயிர்சக்தி ஆற்றல் ஆகும். கற்கள் ஒரு பிராண அலகைக் கொண்டுள்ளன. நீர் இரண்டு பிராண அலகுகளைக் கொண்டுள்ளது. நெருப்பு மூன்று பிராண அலகுகளைக் கொண்டுள்ளது. காற்று நான்கு பிராண அலகுகளைக் கொண்டுள்ளது. செடிகள் ஐந்து பிராண அலகுகளைக் கொண்டுள்ளன. விலங்குகள் ஆறு பிராண அலகுகளைக் கொண்டுள்ளன. மனிதர்கள் ஏழு முதல் பதினாறு பிராண அலகுகளை வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். இந்த முழுப் பிரபஞ்சமும் பிராணனின் வெளிப்பாடுதான்.

பிராண சக்தி குறைவாக இருக்கும்போதுதான் நீங்கள் மனச்சோர்வை உணர்கிறீர்கள். பிராணன் மிகவும் குறைவாகும்போது, உங்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் உணர்வு உருவாகிறது. பிராணன் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். பிராணன் மிகவும் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் ஆற்றலுடையவராகவும், ஆனந்தமாகவும் உணர்வீர்கள். அதனால் பிராணன் குறைபாடுடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மட்டும் தீர்வு அளிக்காது. இங்கு நாம் செய்யவேண்டியது அவர்களது பிராண சக்தியின் அளவை உயர்த்துவதுதான்.

உடற்பயிற்சி, சரியான உணவு, தியானம், சுவாசம் மற்றும் சுதர்சன கிரியா போன்றவற்றின் மூலமாக உங்களது பிராணனை உயர்த்துங்கள். அதனால் உங்களது ஆற்றலின் அளவு உயர்ந்துவிடும். ஆற்றல் அதிகமாக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்; உற்சாகமாக இருப்பீர்கள். அது முழுமையாக இருக்கும்போது நீங்கள் ஆனந்தமடைமடைவீர்கள்.

தொடர்புடைய பயிற்சி நிரல்கள்

தியானமே மனஅழுத்தத்தை அகற்ற மிகச்சிறந்த உபாயமாகும்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

மனஅழுத்தம் என்பது வாழ்க்கையை மாற்றமற்றதாய் புரிந்து கொள்வதன் அடையாளமாகும். வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது, எதிலும் மாற்றமே இல்லை, இனி எதுவும் நடக்கப்போவதில்லை, செல்ல வழியே இல்லை என்று நீங்கள் உணரும் போதுதான் மனஅழுத்தம் எட்டிப்பார்க்கிறது. வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் மனப்பாங்கை ஒருவர் இழக்கும்போது இது நிகழ்கிறது. ஆன்மீகம் என்பது தியானம், சேவை, அறிவு மற்றும் ஞானத்தின் மூலம் ஒருவரின் ஆன்மநிலையை உயர்த்துவதே ஆன்மீகமாகும். இது மனஅழுத்தத்தை கடக்க உதவும்.

- குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

தற்கொலை மனப்பான்மையை எவ்வாறு எதிர் கொள்வது?

ஒருவர் தனக்கு இழைத்துக் கொள்ளும் வன்முறை, இன்னொருவருக்கு எதிரான வன்முறையைப் போலவே மோசமானதுதான். இன்றைய உலக மக்கள், ஒருபுறம் சமூக வன்முறை, மறுபுறம் தற்கொலை மனப்பான்மை ஆகிய இரண்டிற்கும் இடையே சிக்கிக்கொண்டுள்ளனர். ஆன்மீகம் மட்டுமே அவர்களை மையத்திற்குக் கொண்டு வந்து அந்த இரு உச்சநிலைகளின் பிடியிலிருந்து விடுபட உதவி புரியும்.

யாராவது மிகச் சிறிய அளவில் தற்கொலை மனப்பான்மையோடு காணப்பட்டாலும் கூட உடனடியாக அவருக்குத் தகுந்த மருத்துவ உதவி அளிப்பதோடு, அவர் ஒரு நல்ல சமூகத் தொடர்பில் இருக்குமாறு செய்யவும். அத்துடன் பாடல், ஆடல் போன்றவற்றிலும் அவரை ஈடுபடச்செய்யவும்.

பொருளாதாரத்தில் சில மேம்பட்ட நிலைகளை எட்டுவதற்கும் அப்பாற்பட்டதே வாழ்க்கை என்பதை அவர்களுக்கு உணர்த்தவும். வாழ்க்கை என்பது குற்றச்சாட்டுகள் அல்லது பிறரிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகள் போன்றவற்றைக் காட்டிலும் அதிகமானது. வாழ்க்கை என்பது உறவுகள் அல்லது பதவி இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. ஒரு உறவில் ஏற்படும் தோல்வி, செய்யும்பணியில் ஏற்படும் தோல்வி, நீங்கள் சாதிக்க நினைத்ததை அடைய முடியாமல் போவது போன்றவையே தற்கொலை மனப்பான்மை வருவதற்கான காரணங்களாகும். உங்கள் உணர்வில், மனதில் எழும் இத்தகைய சிறிய விருப்பங்களைக் காட்டிலும் உங்களது வாழ்க்கை மகத்தானது.

எனவே, தேவையான நேரத்தில் தகுந்த மருத்துவ உதவியை எடுத்துக் கொள்வதோடு வாழ்க்கையை ஒரு விரிந்து பரந்த கண்ணோட்டத்தில் காணுங்கள். அத்துடன் ஏதாவது ஒரு சேவைப் பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.