A young woman meditating on a bench in the woods

அட்வான்ஸ்ட் மெடிடேஷன் புரொகிராம்

ஆழ்ந்த ஓய்வானது, உத்வேகத்துடன் பணிசெய்யத் தூண்டுகிறது

ஆழ்ந்த தியானம் மற்றும் மௌனத்தை அனுபவிக்கலாம் வாருங்கள். படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள், ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது

பதிவு செய்ய

இப்பயிற்சியிலிருந்து நான் என்ன பெறமுடியும்?

icon

ஆழ்ந்த தியான அனுபவம் பெறலாம்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வழிநடத்தும் தியான முறைகளான “வெறுமை மற்றும் இன்மை (ஹாலோ அண்ட் எம்டி – Hollow and Empty)” தியானங்கள் இப்பயிற்சியின் மையமாகும். இவை உங்களை ஆழ்ந்த ஓய்வில் அமர்த்த உதவும்.

icon

மௌனத்தின் ஆழத்தைக் கண்டடையுங்கள்

ஓயாமல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும் உங்கள் மனத்தை தாண்டிச் சென்று, அற்புதமான அமைதியில் ஆழ்ந்து, புதிய ஆற்றலை உணரலாம்.

icon

உணர்வு ரீதியான அழுத்ததிலிருந்து நிவாரணம்

உங்கள் நரம்பு மண்டல ஆழத்தில் புதைந்திருக்கும் அழுத்தத்தை வெளியேற்ற தியானம் உதவுகிறது. அனைத்து அனுபவங்களின் பதிவுகளிலிருந்தும் விடுவித்து, உங்களுடைய புத்துணர்ச்சி பெற்ற சுயத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

icon

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்

தியானம் உங்கள் நரம்பு மண்டலத்தைத் தளர்த்தி, ஆற்றலின் சீரான ஒட்டத்தை உறுதிப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

icon

படைப்பாற்றலை வெளிகொணரலாம்

மௌனமே படைப்பாற்றலின் தாய். இப்பயிற்சி மனத்தின் ஓயாத சலசலப்பிலிருந்து உங்களை மீட்டு, ஆழ்ந்த தியானத்தில் செலுத்தி, உங்களுக்குள் உறையும் திறமைகளும், திறன்களும் வெளிப்பட வழிவகுக்கிறது.

icon

மிகுந்த சுறுசுறுப்பையும் ஆற்றலையும் உணருங்கள்

இத்தியான நுட்பங்கள் உடலிலும், மனத்திலும் உயிர்சக்தியான பிராணசக்தியை அதிகரிக்கின்றன. பிராணசக்தி உயரும்பொழுது மனம் தெளிவான அமைதியையும், நேர்மறை தன்மையையும் பெறுகிறது.

முதுநிலை தியானப் பயிற்சியில் நான் ஏன் பங்குபெறவேண்டும்?

இணையவழி தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் சுதர்சன கிரியா மூலம் உங்களுக்கு மன அமைதியின் சிறு அனுபவம் கிடைத்திருக்கும். அதை தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், மேலும் ஆழமாக எப்படி உணரலாம்?

நமது அடுத்த நிலை பயிற்சியான முதுநிலை தியானப் பயிற்சியின் மூலம் இதை செய்யலாம். இப்பயிற்சி உங்கள் தியானப் பயிற்சியையும், அனுபவத்தையும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும். ஆழ்ந்த ஓய்வையும், தளர்வையும் இப்பயிற்சி அளிக்கும். ஆன்மீக மௌனத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். ஒரு சில நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது சுலபம் அல்ல. இப்பயிற்சியில் தீவிரமான தியான நுட்பங்களின் வழியாக ஆழ்ந்த அமைதியை கொடுக்கும் அனுபவத்திற்கு உங்களை நாங்கள் அழைத்துச் செல்வோம். உங்கள் உண்மையான திறனை வெளிகொணர்ந்து, உங்கள் உண்மையான சுயத்தை அறிந்து, முழுமையான ஆற்றலை உணர்வீர்கள். உலகை எதிர்கொள்ள தயாராவீர்கள்.

இப்பயிற்சியை மேற்கொள்வதற்கு ஏதேனும் நிபந்தனைகள் உள்ளனவா?

  • 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  • இணையவழி தியான மற்றும் மூச்சுப் பயிற்சி/ ஆனந்த அனுபவ (ஹேப்பினஸ்) பயிற்சி/இளைஞர் வலுவூட்டும் கருத்தரங்கு (யூத் எம்பவர்மெண்ட் செமினார் – YES!+)/ மாணவர் மேன்மை மற்றும் கற்றல் பயிற்சி (ஸ்டூடண்ட் எக்செலென்ஸ் அண்ட் லர்னிங் ப்ரொக்ராம் SLEP) -இவ்வற்றில் ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
  • இப்பயிற்சி நடக்கும் நாட்களில் மற்ற வேலைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும். இதனால் உங்களுக்கு தேவையான, தகுதியான ஆழ்ந்த ஓய்வை நீங்கள் பெற முடியும்.

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
மேலும் அறிக

நான் பயிற்சியில் சேர விரும்புகிறேன், ஆனால்…

நான் முதல் நிலை பயிற்சியான ஆனந்த அனுபவத்தை முடித்து விட்டேன். முதுநிலை பயிற்சியைக் கற்று தியான வல்லுநராக ஆவதில் எனக்கு ஆர்வமில்லை. எனக்கு ஒன்றும் யோகி ஆகவேண்டாம்!

உங்கள் காருக்கு எப்படி ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பராமரிப்பு தேவையோ, அதேபோல், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் அவ்வப்போது சீரமைப்பும், புத்துணர்வும் தேவை. இணையவழி தியான மற்றும் மூச்சுப் பயிற்சி/ஆனந்த அனுபவம் பயிற்சியில் நீங்கள் பெற்ற மகிழ்ச்சி மற்றும் சக்தியின் ஊக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகரித்துக் கொள்ளவதற்குமான வழியே இம்முதுநிலைப் பயிற்சி. தியானத்தின் ஆழத்திற்கு செல்வதால் நீங்கள் ஆழ்ந்த ஓய்வை அனுபவிப்பீர்கள்; யோகியாக ஒன்றும் ஆகிவிடமாட்டீர்கள்! உண்மையில், ஆழ்ந்த ஓய்வுக்காக பலர் இப்பயிற்சியை திரும்பத் திரும்ப மேற்கொள்ளுகிறார்கள்; ஒவ்வொரு முறையும் தனித்துவமான அனுபவத்தை அடைகிறார்கள்.

இவ்வளவு ஆழமாக தியானத்திற்குள் செல்ல நான் மிகவும் இளையவன் என நினைக்கிறேன். எனக்கு 20 வயதுதான் ஆகிறது. எனக்கு இப்பொழுது தியானம் செய்ய வேண்டிய அளவுக்கு மன அழுத்தம் இல்லையே?

உங்களுக்கு இப்போது மன அழுத்தம் இல்லை என்பதில் மகிழ்ச்சி. ஆனால், வயது ஏற ஏற, காலம் செல்லச் செல்ல உங்கள் வேலை பளுவும், பொறுப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகும். அந்நேரத்தில் மன அழுத்தம் வரும் வரை காத்திருக்காமல், இப்போதிலிருந்தே உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது அல்லவா? வருடாந்திர தேர்வுகள் ஆண்டு முடிவில்தான் நடத்தப் படுகின்றன என்பதற்காக, நாம் ஆண்டு முடிவு வரை காத்திருந்து படிப்பதில்லை அல்லவா? சேமிப்பு முழுதும் தீர்ந்த பிறகு சம்பாதிப்போம் என்று நாம் காத்திருப்பதில்லை அல்லவா? முன்னரே தயார் செய்துகொள்ளுகிறோம். அதுபோலவே, மன அழுத்தம் வருவதற்கு முன்பே அதை கையாளுவதற்கான தியான நுட்பங்களை கற்று, எந்த ஒரு பின்னடைவிலிருந்தும் மீளும் தன்மையையும், வலிமையையும் நம்முள் கட்டமைத்துக் கொள்ளலாம் அல்லவா?

இப்பயிற்சியை மேற்கொள்ளுவதற்கு எனக்கு மிகவும் வயதாகி விட்டது. எனக்கு வயது 60. என்னால் இப்பயிற்சி முழுவதும் அமர்ந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

இப்பயிற்சி உங்களுக்கு சில சுவாச நுட்பங்களை கற்றுத் தந்து உங்கள் சக்தியை அதிகரிக்கும். ஆழ்ந்த ஓய்வையும், பொருள் நிறைந்த, நுண்ணிய மௌனத்தையும் அனுபவிப்பீர்கள். இப்பயிற்சியின் செயல்முறைகள் எல்லாம் மிக இயல்பானவை; உங்களை மேலும் வலிமையானவராகவும், எந்த பிரச்சினையிலிருந்தும் மீளும் தன்மையுடையவராகவும் ஆக்குபவை. இப்பயிற்சியை மேற்கொள்ளுவதற்கு வயது ஒரு தடை அல்ல!

இப்பயிற்சியில் மௌனத்தைப் பற்றி நிறைய கூறுகிறீர்கள். என் குடும்பத்தோடு நான் தொடர்பில் இருக்கலாமா? மின்னணு தொடர்பை பயன்படுத்தலாமா?

இப்பயிற்சியிலிருந்து அதிகபட்ச பலனை பெற, குறுஞ்செய்தி (வாட்ஸப், எஸ் எம் எஸ்) அனுப்புதல், மின்னஞ்சல் (ஈமெயில்) அனுப்புதல், மற்றும் அனைத்து விதமான வாய்மொழி தொடர்பையும் முடிந்தவரை தவிர்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்களுக்குள் ஆழ்ந்து செல்லவும், உங்களை நீங்களே கண்டெடுக்கவும் அதிகபட்ச நேரம் அளிப்பதே இப்பயிற்சியின் நோக்கம். நீங்கள் நினைப்பதைவிட இது எளிதானதே!

இதுவும் விபாஸனா பயிற்சியும் ஒன்றேதானா?

இல்லை! முதுநிலை தியான பயிற்சியும் விபாஸனா தியானமும் ஒன்றல்ல! முதுநிலை பயிற்சியின் அனுபவம் ஒருவர் பெறக்கூடிய மிகச் சிறந்த, சக்திவாய்ந்த அனுபவமாக கருதப்படுகிறது; இதில் பெறும் நுண்ணறிவும், ஆழமும் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியவை. விழிப்பு நிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வாழ்வின் தரத்தை மேம்படுத்த இப்பயிற்சியில் பின்பற்றும் செயல்முறைகள் உதவுகின்றன என்று அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) உள்ளிட்ட பல முன்னணி ஆய்வு நிறுவனங்களின் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நான் இப்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும்?

இப்பயிற்சி மூன்று முழு நாட்கள் நடக்கும். அதிகாலை 6 அல்லது 7 மணிக்கு தொடங்கி இரவு 8 அல்லது 9 மணிக்கு முடியும். எனவே, மூன்று நாட்களுக்கு அன்றாட வாழ்விலிருந்து விலகி இருக்கவும், உங்களுக்கு நீங்களே ஒரு விடுமுறையை பரிசளித்துக் கொள்ளவும் தயாராகுங்கள்.

இப்பயிற்சியில் இடைவேளைகள் இருக்குமா?

இப்பயிற்சியே தினசரி வழக்கத்திலிருந்து உங்களுக்கு ஒரு விடுமுறையை அளிக்கவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கைத் தேவைகள் மற்றும் உணவுக்கான குறுகிய இடைவேளைகள் நிச்சயம் உண்டு.

இப்பயிற்சியில் எனக்கு ஏதாவது மந்திரம் கிடைக்குமா?

இப்பயிற்சியில் தொடர்ச்சியாக வழிக்காட்டுதலுடன் கூடிய தியானம் இருக்கும், தனிப்பட்ட மந்திரம் கிடையாது. மந்திரத் தியானத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எங்கள் ஸஹஜ் சமாதி தியான பயிற்சியில் நீங்கள் சேரலாம்.

ஏதாவது உடல் உபாதைகள் இப்பயிற்சியை மேற்கொள்ளத் தடையாக இருக்குமா?

உங்களால் இணையவழி தியான மற்றும் மூச்சுப் பயிற்சி/ஆனந்த அனுபவம் பயிற்சியை மேற்கொள்ள முடிந்திருந்தால், முதுநிலை தியான பயிற்சியையும் செய்ய முடியும். எனினும், உடல் நிலை குறித்த பிரச்சினைகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், முன்னரே ஆசிரியரிடம் தெரியப்படுத்துவது நல்லது.

நான் சைவமாக இருந்தால்தான் இப்பயிற்சியில் சேர முடியுமா?

இல்லை. உணவுப் பழக்கங்கள் இப்பயிற்சிக்கு பொருட்டல்ல. ஆனால் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களில் இலகுவான, சைவ உணவை நாங்கள் பரிந்துரைப்போம். இது உங்களை ஆழ்ந்த தியானத்தில் செலுத்தும்.

சுதர்சன சக்ர கிரியா என்னும் புதிய உத்தியைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அதுவும் இப்பயிற்சியில் உள்ளதா?

முதுநிலை தியானப் பயிற்சியை ஒருமுறை முடித்த பிறகு அந்த சக்திவாய்ந்த பயிற்சிக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். உங்களுடைய அன்றாட பயிற்சியை மேம்படுத்த அதை இலவசமாக கற்கலாம். முதுநிலை பயிற்சியை முடித்தவுடன் இது குறித்து உங்கள் ஆசிரியரை தொடர்பு கொள்ளவும்.