ஆசிரமம் என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு, முயற்சியோ, உழைப்போ இல்லாமல் என்று பொருள். அதனால் நீங்கள் எப்பொழுது ஆசிரமம் வந்தாலும் எந்த முயற்சியும் இல்லாமல் இதுவரை நீங்கள் தாங்கிக், கொண்டிருந்த மனதிலுள்ள சுமைகளையும் / பயத்தையும் பாதுகாப்பின்மையையும் கைவிட முடிகிறது. ஆசிரமம் என்பது ஆழ்ந்த அமைதிக்கு ஒத்தது.

கடந்த 44 ஆண்டுகளில் வாழும் கலை, உலகம் முழுவதிலும் பல ஆசிரமங்களை நிறுவி உள்ளது. இவை சமூக வளர்ச்சியையும், சுய வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் மையங்களாக ஆகிவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஆசிரமங்கள் எல்லா மதத்தினருக்கும், சித்தாந்தங்களுக்கும் பொது இடமாக ஆகிவிட்டன. பார்வையாளர்கள் ஆசிரமத்தை வீடு, அதாவது வீட்டிற்குத் தொலைவிலுள்ள வீடு என்று விவரிக்கின்றனர்.

இந்த ஆசிரமங்களை அனைத்து மனித குலத்தினருக்கும் அன்பும், கருணையும் மிகுந்த கலங்கரை விளக்கமாக ஆக்குங்கள். இவ்வாசிரமங்கள் அனைத்துத் தரப்பினரின் தத்துவங்களையும், பின்னணிகளையும் ஒன்றிணைக்கும் இடமாகட்டும்.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்