ஸ்ரீ ஸ்ரீ யோகா வகுப்புகள்
உங்கள் எல்லைகளை விரிவாக்குங்கள்
சக்தி பெறலாம்`• ஆரோக்கியம் மற்றும் உடலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தலாம் • வலிமை மற்றும் நிலைதன்மையை பெறலாம்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யஸ்ரீ ஸ்ரீ யோகா மாறுபட்டது
பிரபலமான யோக வகுப்புகளை சூழ்ந்திருக்கும் போட்டிகள் நிறைந்த, மேலோட்டமான கலாசாரம் உங்களுக்கு சோர்வளிக்கிறதா?
ஸ்ரீ ஸ்ரீ யோகா உங்களுக்கு நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் ஆரோக்கியத்தை தருவதோடு மட்டும் அல்லாமல், யோகாவை ஒரு முழுமையான கண்ணோட்டதில் அணுகுவுதன் மூலம், உங்கள் தன்னுணர்வையும், சமநிலையையும் ஆழப்படுத்துகிறது.
எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளும் சூழல்
முன்முடிவுகள் இல்லாத ஒரு சூழலை ஸ்ரீ ஸ்ரீ யோகா அளிக்கிறது. இதனால், மற்றவர்களோடு போட்டி போடாமல், உங்களுடைய சௌகரியத்திற்கு ஏற்ப, வலி இல்லாமல் உடலை வளைக்கவும் நீட்டவும் கற்பீர்கள். போட்டி மனப்பான்மை நிலவும் ஒரு யோகா ஸ்டூடியோவில், ஆழ்ந்த அனுபவத்தைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.
யோகாசனங்கள் மட்டுமல்ல, அதற்கும் மேலாக
பொதுவாக, நாம் யோகாவை உடற்பயிற்சியோடு மட்டுமே தொடர்பு படுத்துகிறோம். ஆனால், யோகாவில் அதற்கும் மேலே பல விஷயங்கள் உள்ளன. ஸ்ரீ ஸ்ரீ யோகாவில் ஒரு முழுமையான யோகபயிற்சியின் அனைத்து அம்சங்களும் உள்ளன. இப்பயிற்சியில் மரபான யோகாசனங்கள், எளிய ப்ரணாயாமங்கள் (மூச்சு பயிற்சிகள்), வழிகாட்டுதலுடன் கூடிய தியானப் பயிற்சிகளோடு யோகம் குறித்த புரிதலையும் பெறுவீர்கள்.
இந்த பட்டறையில் நான் என்ன பெறுவேன்?
மறுசீரமைக்கும் யோகப்பயிற்சிகளின் வழியாக, இப்பட்டறை உடல், மனம், மற்றும் ஆன்மாவுக்கு சக்தியூட்டவும், அவ்வற்றை ஒருங்கிணைக்கவும் உங்களுக்குக் கற்றுத்தரும்.
வலிமை மற்றும் சமநிலை: யோகாசனங்கள்
கொழுப்பை எரித்து, கொலஸ்ட்ராலை குறைத்து, உங்கள் தசைகளுக்கு வலுவூட்டி அவற்றை முடுக்கிவிடுகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மைக்கும், உங்கள் உடலுறுப்புகளின் இயக்க வரம்பை விரிவாக்கவும் யோகாசனங்கள் மிகச் சிறந்த வழியாகும்.
ஆழ்ந்த ஓய்வு: தியானம் மற்றும் தளர்வு
தன்னுணர்வுடன் கூடிய தளர்வை தரும் யோகநித்ரையை பயிலலாம். இது உடலை அமைதிப்படுத்தி, மனத்தை தளர்வாக்கி, ஆழ்ந்த தியானத்திற்கு தயார் படுத்தும்.
ஆற்றல்: யோக சுவாசம் (பிராணாயாமம்)
முதுநிலை மூச்சுப் பயிற்சிகளின் மூலம் உங்கள் மூச்சுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். இப்பயிற்சிகள் உங்கள் உடலுக்கும், மனத்திற்கும் சக்தியூட்டி, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகின்றன.
நுண்ணறிவு: யோகாவின் மூலம் மெய்யறிவு
உங்கள் உடல் மற்றும் மனத்தின் இயல்பைக் குறித்து யோகா அளிக்ககூடிய அற்புதமான நுண்ணறிவை கண்டறியலாம். வாழ்க்கையை நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
நான் கற்றுக்கொண்ட யோகா பயிற்சிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.…நான் தன்நம்பிக்கையை பெற்றேன், அமைதியான உணர்வை அனுபவித்தேன்… மன அழுத்தம் குறைந்தது, மற்றும் பதற்றத்திலிருந்து விடுபட்டேன். ஆசிரியரின் அமைதியான குரலும், தொடர்ச்சியான ஊக்கமும் எங்களை மெதுவாக அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றது.
பூர்த்தி கட்கரி
பள்ளி ஆசிரியை
நான் இலேசாகவும், தெளிவாகவும் உணர்கிறேன், மேலும் யோகாவை தினமும் பயிற்சி செய்ய உத்வேகம் பெற்றுள்ளேன். யோகாசனங்களை பற்றிய விரிவான விளக்கம், ஆயுர்வேதம் குறித்த அறிவு மற்றும் யோகா பயிற்சியை எப்படி தனிப்பட்ட முறையில் செய்யலாம் என்பது எனக்குப் பிடித்திருந்தது .
ஜோனாதன் டாங்க்
மூத்த துணிகர பங்குதாரர்