
ப்ளெஸ்ஸிங்க்ஸ் புரொகிராம்
உங்களுள் இருக்கும் குணப்படுத்தும் சக்தியை கண்டடையுங்கள்
நீங்கள் வழங்கும் ஆசிகள் ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றக்கூடும்.
தகுதி: சுதர்சன கிரியா பயிற்சி, 2 முதுநிலை தியானப் பயிற்சிகள்
3 நாட்கள்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யதன்நிறைவு என்பது நம் பிரக்ஞையின் மிக அழகான ஒரு குணம். அது நமக்கு ஆசி வழங்கும் தகுதியை கொடுத்து, மற்றவர்களின் வலியையும், நோயையும் குணப்படுத்தும் கருவியாக நம்மை ஆக்குகிறது. தனித்தன்மை வாய்ந்த தியான முறைகளின் வழியாக ஆசீர்வாதப் பயிற்சி நமக்கு வளம், மனநிறைவு மற்றும் தன்னிறைவை அளிக்கிறது. இக்குணங்கள் எல்லாம் நம்மிடம் இயல்பாகவே இருப்பவை தான்; இப்பயிற்சி இவற்றை வெளிகொணர்கிறது.
ஆசீர்வாதம் எப்போதுமே மற்றவருக்கு கொடுக்கப் படுவது, நமக்கானது அல்ல. மற்றவர்களை வாழ்த்துவது அக்கறை மற்றும் பகிர்ந்தளிக்கும் தன்மையின் வெளிப்பாடாகும்—நம் உதவியை நாடி வருபவருக்கு சேவை செய்யவும், அமைதியையும் இணக்கத்தையும் அவர்களுக்கு அளிக்கவும் தயாராக இருத்தல். பலர் பல அதிசயமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
உங்களுக்குள் உறையும் சக்தியை வெளிகொணருங்கள்

மிகுதியான வளம் மற்றும் மனநிறைவை அனுபவியுங்கள்

குணப்படுத்தும் கருவியாக ஆகுங்கள்

உங்களுக்குள் இருக்கும் ஆசி வழங்கும் திறனை கண்டடையுங்கள்
இது என் வாழ்க்கையில் நான் பெற்ற மிக அழகான பரிசுகளில் ஒன்றாகும்.

காயத்ரி யு
வள மேலாளர்