ஆரம்ப நிலை (ஆஃப்லைன்)

வாழும் கலை பயிற்சிகளின் ஆதாரமாக விளங்கும் சுதர்சன கிரியா™ உலகெங்கிலும் பல லட்சம் மக்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும், சிறந்த ஓய்வைப் பெறவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் உதவியுள்ளது. நான்கு கண்டங்களில் (ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைகழகங்கள் உட்பட) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், சக அறிஞர்களால் மதிப்பிடப்பட்டு ஆய்விதழ்களில் வெளியான முடிவுகளும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறைப்பதிலிருந்து, வாழ்க்கையில் திருப்தியை அதிகரிப்பது வரை பல விரிவான பலன்களை உறுதி செய்துள்ளன.